search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
    X
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா 1-ந்தேதி தொடங்குகிறது

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா வருகிற 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு வருடம்தோறும் மாசி திருவிழா வெகு விமரிசையாக 10 நாட்கள் நடைபெறும். அதேபோல், இந்த வருடமும் மாசி திருவிழா வருகிற 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா 10 நாட்கள் நடைபெறுகிறது.

    விழாவில் முதல் நாளான 1-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, 7.30 மணி முதல் 9 மணி வரை கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஹைந்தவ இந்து சேவா சங்க தலைவர் கந்தப்பன் கொடியேற்றுகிறார். தொடர்ந்து சமய மாநாடு நடக்கிறது. மாநாட்டை தொடங்கி வைத்து ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி மஹராஜ் பேசுகிறார். தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றுகிறார். ஹைந்தவ சேவா சங்க பொது செயலாளர் ரெத்தின பாண்டியன் அறிமுகம் செய்து வைக்கிறார். செயலாளர் முருகன் அறிக்கை வாசிக்கிறார். சுவாமி கருனானந்தஜி மஹராஜ், சுவாமி பத்மேந்திரா ஆகியோர் ஆசியுரை வழங்குகிறார்கள்.

    இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், வசந்தகுமார் எம்.பி., விஜயகுமார் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். அதைத்தொடர்ந்து மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6 மணிக்கு ஸ்ரீராஜ ராஜேஸ்வரி பூஜை, 9 ஆயிரம் திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    3-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை யானை மீது களப ஊர்வலமும், 3-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை காலை மற்றும் இரவு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், 6-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்ற மகா பூஜையும் நடைபெறுகிறது.

    9-ந் தேதி இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பெரிய சக்கர தீவெட்டி அலங்கார பவனியும் நடக்கிறது.

    10-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து யானை மீது களப பவனியும், 3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், 4.30 மணிக்கு அடியந்திர பூஜை குத்தியோட்டமும், காலை 11 மணிக்கு அன்னதானம், மதியம் 2 மணிக்கு 10 மற்றும் பிளஸ்-2 பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜையும், தீபாராதனையும் நடக்கிறது.
    Next Story
    ×