search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுவாமிமலை கோவில்
    X
    சுவாமிமலை கோவில்

    சுவாமிமலை கோவிலில் 30-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றம்

    முருகனின் ஆறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவிலில் தைப்பூச திருவிழா 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. முருகனின் ஆறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான இங்கு முருகன் சுவாமிநாதசாமியாக அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக 29-ந் தேதி விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூர்வாங்க பூஜைகள் நடக்கின்றன. கொடியேற்றத்தை தொடர்ந்து சுவாமிநாதசாமி, விக்னேஸ்வரர், சண்டிகேஸ்வரருடன் மலை கோவிலில் இருந்து புறப்பட்டு உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இரவு சாமி வீதி உலா நடக்கிறது.

    விழாவில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 8-ந் தேதி தைப்பூச தினத்தன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், அதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடக்கின்றன. பின்னர் சுவாமிநாதசாமி வைரவேல், வைரகிரீடம், தங்க கவசத்துடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    அன்று காலை 11 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சாமி வீதி உலாவும், காவிரியில் தீர்த்தவாரியும் நடக்கிறது. 9-ந் தேதி சாமி, மலைக் கோவிலுக்கு திரும்பும் யதாஸ்தான புறப்பாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். 
    Next Story
    ×