
விழா நாட்களில் நடராஜ பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை, சிறப்பு பூஜைகள், சுவாமி வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் வருகிற 5-ந் தேதி காலை 8.30 மணிக்கு தேரோட்டம், 8-ந் தேதி காலை 10 மணிக்கு சித்திர சபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.
விழாவில் வருகிற 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3.20 மணிக்கு மேல் சித்திர சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், 5 மணிக்கு மேல் திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடக்கின்றது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர் சங்கர், கோவில் நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி ஆகியோர் செய்து வருகிறார்கள்.