search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கால பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்ததையும் படத்தில் காணலாம்.
    X
    கால பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்ததையும் படத்தில் காணலாம்.

    கோவில்களில் கால பைரவர் ஜெயந்தி விழா

    நெல்லையில் உள்ள கோவில்களில் கால பைரவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    நெல்லை கொக்கிரகுளம் புதுஅம்மன் கோவிலில் கால பைரவர் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 11 மணிக்கு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து புதுஅம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நெல்லை அருகே அருகன்குளம் பழைய கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த ராமலிங்கசுவாமி சமேத பர்வதவர்தினி அம்மன் கோவில் உள்ளது. தாமிரபரணி நதிக்கரையில் இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் உள்ள இக்கோவில், ராமபிரான் வழிபட்ட கோவிலாகும். கோவிலில்கால பைரவர் ெஜயந்தி, மகாதேவ அ‌‌ஷ்டமியையொட்டி நேற்று காலை 10 மணிக்கு ராமலிங்கசுவாமிக்கு சிறப்பு கும்ப பூஜை நடந்தது. மதியம் 12 மணிக்கு அன்னாபிஷேகமும், இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள பிண்டம் போட்ட ராமருக்கும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 2 மணிக்கு அன்னதானம் நடந்தது.

    பாளையங்கோட்டை சிவன் கோவில் என்று அழைக்கப்படும் திரிபுராந்தீசுவரர் கோவிலில் மகாதேவ அ‌‌ஷ்டமியையொட்டி சுவாமிக்கும், அம்பாளுக்கும் நேற்று காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், அன்னாபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து 10 மணிக்கு அங்குள்ள மகாதேவருக்குசிறப்பு அன்னாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து மதியம் சிறப்பு அன்னதானம் நடந்தது.

    இதேபோல் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள சிவன் கோவிலில் சுவாமிக்கு மதியம் சிறப்பு அபிஷேகமும், அன்னாபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து அன்னதானம் நடந்தது.

    திசையன்விளை செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பெண்கள் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×