search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஹாசனம்பா கோவில்
    X
    ஹாசனம்பா கோவில்

    வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே தரிசனம்: ஹாசனம்பா கோவில் நடை அக்டோபர் 17-ந்தேதி திறப்பு

    ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி மட்டுமே திறக்கப்படும் ஹாசனம்பா கோவில் நடை அக்டோபர் 17-ந் தேதி திறக்கப்பட உள்ளது.
    கர்நாடகா மாநிலம் ஹாசன் நகரில் ஹாசனம்பா கோவில் உள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி தான் இந்த கோவிலின் நடை திறக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் கோவில் நடை மூடப்படும் போது கோவிலில் விளக்கு ஏற்றப்படும். மேலும் பூக்களும் கருவறையில் வைக்கப்படும்.

    அதன்பின்னர் ஓராண்டு கழித்து கோவில் நடை திறக்கும் போது அந்த விளக்கு அணையாமலும், பூக்கள் வாடாமல் இருப்பதும் தான் இந்த கோவிலின் சிறப்பு வாய்ந்த அம்சமாகும். இந்த நிலையில் அடுத்த மாதம்(அக்டோபர்) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட உள்ள நிலையில் ஹாசனம்பா கோவில் நடையை திறப்பது குறித்து ஹாசன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் ஆர்.கிரீஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் ஹாசன் தொகுதி எம்.எல்.ஏ. பிரீத்தம் ஜே.கவுடா, தாசில்தார் மேகனா, போலீஸ் சூப்பிரண்டு ராம்நிவாஸ் செபட் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிந்ததும் கலெக்டர் ஆர்.கிரீஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்படும். அதுபோல இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி அடுத்த மாதம்(நவம்பர்) 17-ந் தேதி ஹாசனம்பா கோவில் நடை திறக்கப்படுகிறது. கடந்த முறை 10 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் இந்த முறை பக்தர்கள் வேண்டுகோளுக்கு இணங்க கூடுதலாக 3 நாட்கள் என இந்த முறை 13 நாட்கள் கோவில் நடை திறந்து இருக்கும். அதாவது நவம்பர் 17-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 13 நாட்கள் கோவில் நடை திறந்து இருக்கும். இந்த 13 நாட்களும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 3 மணி முதல் 11 மணி வரையும் பக்தர்கள் ஹாசனாம்பாவை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. நவம்பர் மாதம் 23, 25, 27-ந் தேதிகளில் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்க உள்ளது.

    அம்மனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்படும். சிறப்பு தரிசன வசதியும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. ரூ.300 கொடுத்து சிறப்பு டிக்கெட் வாங்கி செல்பவர்களுக்கு 2 லட்டும், ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி செல்லும் பக்தர்களுக்கு 4 லட்டுகளும் வழங்கப்படுகிறது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் நேரடியாக அம்மனை தரிசிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. மேலும் 13 நாட்களும் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை கோவிலில் நெய்வேத்தியம் நடப்பதால் அந்த நேரத்தில் மட்டும் கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரீத்தம் ஜே.கவுடா நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த ஆண்டு கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு சில அடிப்படை வசதிகள் கிடைக்காமல் போனது. இந்த முறை அதுபோன்று நடக்காமல் பார்த்து கொள்ளப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்களை கவரும் வகையில் வண்ணவிளக்கு அலங்காரமும் செய்யப்படும். ஹாசன் டவுனில் 5 இடங்களிலும், கோவில் முன்பு ஒரு இடத்திலும் வளைவு அமைக்கப்படும் என்றார். 
    Next Story
    ×