search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை பந்தல்கால் நாட்டும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.
    X
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை பந்தல்கால் நாட்டும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.

    மண்டைக்காடு கோவிலில் பந்தல் கால்நாட்டும் நிகழ்ச்சி

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழாவுக்கான பந்தல் கால் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

    இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா வெகுவிமரிசையாக 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு மாசிக்கொடை விழா வருகிற மார்ச் மாதம் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைகிறது.

    இதனை முன்னிட்டு மாசிக்கொடை பந்தல்கால் நாட்டுவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு தீபாராதனை, 9.15 க்கு நிறை புத்தரிசி வழிபாடு, 10.15 மணிக்கு பந்தல் கால்நாட்டுதல் ஆகியவை நடந்தது. இதில் விஜயகுமார் எம்.பி., தேவசம் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மராமத்து என்ஜினீயர் அய்யப்பன், ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன் மற்றும் கைந்தவ இந்து சேவா சங்கம், ஸ்ரீதேவி கலாமன்றம், தேவி சேவாசங்கம் நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சமய மாநாடு திடலில் இந்து சேவா சங்க 82-வது சமய மாநாடு பந்தல் கால் நாட்டு விழா நடந்தது. மதியம் 1 மணிக்கு உச்ச பூஜை, அன்னதானம், மாலையில் தீபாராதனை, இரவு அத்தாள பூஜை ஆகியவை நடைபெற்றன.
    Next Story
    ×