search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுவாமிமலை கோவிலில் 5-ந்தேதி நடக்கிறது ஆடி கிருத்திகை விழா
    X

    சுவாமிமலை கோவிலில் 5-ந்தேதி நடக்கிறது ஆடி கிருத்திகை விழா

    சுவாமிநாத சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி வருகிற 5-ம் தேதி காலை 5 மணிக்கு அபிஷேக ஆராதனைகளும் இரவு 8 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடைபெற உள்ளது.
    கும்பகோணம் அருகே ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை தந்தைக்கு உபதேசம் செய்த மூர்த்திதலம் என சிறப்பு பெற்றது.

    சுவாமிநாத சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி வருகிற 5-ம் தேதி காலை 5 மணிக்கு அபிஷேக ஆராதனைகளும் இரவு 8 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடைபெற உள்ளது.

    விழாவினை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் சாமி தரிசனம் செய்யசிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் கும்பகோணம், திருவையாறு, ஜெயங்கொண்டம், தஞ்சாவூர் அரியலூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் சுவாமிமலைக்கு இயக்கப்பட உள்ளது. சுவாமிமலை காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×