search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சங்கிலியால் கட்டப்பட்ட பெருமாள்
    X

    சங்கிலியால் கட்டப்பட்ட பெருமாள்

    ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில், ‘சேதுராமர்’ என்ற பெயரில் ஒரு பெருமாள் சன்னிதி உள்ளது. இந்த சன்னிதியில் அருள்பாலிக்கும் பெருமாளுக்கு ஒரு கதை கூறப்படுகிறது.

    ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில், ‘சேதுராமர்’ என்ற பெயரில் ஒரு பெருமாள் சன்னிதி உள்ளது. இந்த சன்னிதியில் அருள்பாலிக்கும் பெருமாளுக்கு ஒரு கதை கூறப்படுகிறது.

    சுந்தரபாண்டியன் என்ற மன்னனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. பெருமாளின் தீவிர பக்தனான அந்த மன்னன், தன் குறையை எண்ணி தினமும் பெருமாளை வழிபட்டு வந்தான். இதனால் தன் மனைவி மகாலட்சுமியையே, மன்னனின் மகளாக பிறக்கச் செய்தார் பெருமாள். பின்னர் அவள் வளர்ந்து மணப் பருவம் அடைந்த வேளையில், பெருமாள் ஒரு இளைஞனின் வடிவம் கொண்டு மன்னனின் மகளிடம் வம்பு செய்தார். இதையறிந்த மன்னன், இளைஞன் உருவில் இருந்த பெருமாளை சிறையில் அடைத்ததுடன், சங்கிலியால் காலைக் கட்டிப் போட்டான்.

    அன்றைய தினம் மன்னனின் கனவில் தோன்றிய பெருமாள், ‘இளைஞன் உருவில் வந்தது நானே’ என்ற உண்மையை உணர்த்தினார். இதையடுத்து சிறையில் இருந்த பெருமாளை விடுவித்து, தனது மகளை மணம் முடித்துக் கொடுத்தார்.

    இளைஞராக வந்த பெருமாளே இத்தலத்தில் ‘சேதுராமர்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. தீர்த்த யாத்திரை செல்பவர்கள் இவரது சன்னிதி முன்பு, கடல் மணலில் சிவலிங்கம் செய்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்கிறார்கள். இவரது சன்னிதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.
    Next Story
    ×