என் மலர்

  ஆன்மிகம்

  மானாமதுரை பஞ்சமுக பிரித்தியங்கிராதேவி கோவிலில் சகஸ்ர சண்டி மகாயாகம்
  X

  மானாமதுரை பஞ்சமுக பிரித்தியங்கிராதேவி கோவிலில் சகஸ்ர சண்டி மகாயாகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மானாமதுரை பஞ்சமுக பிரித்தியங்கிராதேவி கோவிலில் சகஸ்ர சண்டி மகாயாகம் 5 நாட்கள் நடக்கிறது.
  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பஞ்சபூதேஸ்வரம் என்ற இடத்தில் மகா பஞ்சமுக பிரித்தியங்கிரா தேவி கோவில் உள்ளது.
  சக்தி பீடமாக உள்ள இங்கு 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சதசண்டீ யாகம் நடைபெறும்.

  இந்த ஆண்டு 14-ம் ஆண்டை முன்னிட்டு உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாக வாழ வேண்டியும், இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் ஆயிரம் சண்டி மகா யாகம் என அழைக்கப்படும் சகஸ்ர சண்டி ஹோமம் நேற்று (29-ந்தேதி) மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சண்டி தேவி கலச பூஜையுடன் தொடங்கியது.

  30-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு எல்லா காரியங்களும் தங்கு தடையின்றி வெற்றி பெறவும் நோய் நொடிகளின்றி நீண்ட ஆயுளை பெறவும் நவக்கிரக ஹோமம், மகா தன்வந்திரி ஹோமம், தட்சிணகாளி ஹோமம், மிருத்ஞ்ஜய ஹோமம் தொடங்குகிறது. இரவு 7 மணிக்கு சண்டி ஆவரண பூஜை, அர்ச்சனை தீபாராதனை நடைபெறுகிறது.

  31-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நினைத்த காரியங்கள் நடைபெறவும், 26 வகையான செல்வங்கள் கிடைக்கவும், குழந்தை இல்லாத தம்பதியர்கள் மட்டும் கலந்து கொள்ளும் புத்திரகாமேஷ்டி ஹோமம், தங்கு தடையின்றி திரு மணம் நடைபெற வேண்டி ஸ்வம்வரா பார்வதி ஹோமம், ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம், அதை தொடர்ந்து சதுஷ்டி பைரவ பலி பூஜை நடைபெறுகிறது.

  ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ஹோரம்ப கணபதி ஹோமம், அதை தொடர்ந்து ஆயிரம் சண்டி மகா ஹோமம் தொடங்குகிறது. இரவு 7 மணிக்கு அம்பாளின் திருஅவதார நாடகம் நடைபெறுகிறது.

  2-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை சகல சவுபாக்கியங்கள் வேண்டியருக்கு வேண்டிய வண்ணம் கிடைக்க வாஞ்ஜாகல்பலதா கணபதி ஹோமம், ஹதசமஹா வித்யா ஹோமம் தொடங்குகிறது. தஞ்சை குருஜீ கணபதி சுப்பிரமணியம் சாஸ்ரி தலைமையில் இவை நடை பெறுகிறது.

  மகா பஞ்சமுக பிரித்தியங் கிரா தேவி கோவில் சுவாமிஜீ ஞானசேகரன் மாதாஜீ ராஜகுமாரி ஆகியோர் மேற்பார்வையில் பஞ்சமுக பிரித்தியங்கிரா தேவி கோவில் பக்தர்கள் மற்றும் மகா பஞ்சமுக பிரித்தியங்கிரா வேத தர்ம ஷேத்ரா டிரஸ்ட்டியினர் யாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். யாகம் நடைபெறும் 5 நாட்களிலும் 24 மணி நேரமும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் நடைபெறுகிறது.

  இதுபற்றி மகா பஞ்சமுக பிரித்தியங்கிரா அதவி கோவில் ஞானசேகர சுவாமி கூறுகையில், ஆயிரம் சண்டி யாகம் என அழைக்கப்படும் சகஸ்டி சண்டியின் பெருமை மக்களுக்கு தெரியப்படுத்த மவுரிய பேரரசு காலத்திலும் அதன்பின் மைசூர் அரசன் காலத்தில் காஞ்சிபுரம், மதுரை, புதுக்கோட்டை ஆகிய நகரங்களிலும் 1963-ம் ஆண்டு நடந்துள்ளது. அதை தொடர்ந்து அன்புடன் உலக மக்கள் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை பஞ்சமுக பிரித்தியங்கிரா தேவி கோவிலில் 5 நாட்கள் ஸ்ரீ சகஸ்ர சண்டி ஹோமம் நடைபெறுகிறது என்றார்.
  Next Story
  ×