என் மலர்

  ஆன்மிகம்

  ஆடி அமாவாசையில் பஞ்சமுக பிரித்தியங்கிரா தேவிக்கு ஆயிரம் சண்டி மகா யாகம்
  X

  ஆடி அமாவாசையில் பஞ்சமுக பிரித்தியங்கிரா தேவிக்கு ஆயிரம் சண்டி மகா யாகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீமகா பஞ்சமுக பிரித்தியங்கிரா தேவி கோவிலில் ஆடி மாதத்தில் 5 நாட்கள் ஸ்ரீசஹஸ்ர சண்டி என அழைக்கப்படும் ஆயிரம் சண்டி மகா யாகம் நடத்தப்படுகிறது.
  சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பஞ்சபூதேஸ்வரம் என்னுமிடத்தில் உள்ள ஸ்ரீமகா பஞ்சமுக பிரித்தியங்கிரா தேவி கோவிலில் ஆடி மாதத்தில் 5 நாட்கள் ஸ்ரீசஹஸ்ர சண்டி என அழைக்கப்படும் ஆயிரம் சண்டி மகா யாகம் நடத்தப்படுகிறது. உலகில் உள்ள மக்கள் துன்பங்கள் இன்றி ஆனந்தமாய் வாழ வேண்டி வரும் 29-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 2-ந்தேதி ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தில் இது நிறைவுபெறுகிறது.

  5 நாட்கள் நடக்கும் இந்த யாகத்தில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்காக குழந்தை செல்வம் கிடைக்க ஸ்ரீமஹா புத்திர காமேஷ்டி யாகம், திருமண தடை நீங்க ஸ்ரீஸ்வம்வரா பார்வதி யாகம், அதை தொடர்ந்து இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் விவசாயம் செழிக்க, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ ஸ்ரீமகா பஞ்சமுக பிரித்தியங்கிரா யாகம் மற்றும் யக்ஷகானம் எனப்படும் அம்பாளின் திருஅவதார நாடகங்கள் நடைபெறுகிறது.

  இக்கோவிலில் உள்ள ஸ்ரீதண்டு முத்துமாரியம்மனுக்கு ஆடி வெள்ளி முழுவதும் கூழ் காய்ச்சி படைக்கும் விழாவும் நடைபெறுகிறது- மதுரை - ராமேசுவரம் சாலையில் மானாமதுரை அருகில் ஸ்ரீமகா பஞ்சமுக பிரித்தியங்கிரா தேவி கோவில் உள்ளது. 24 மணி நேரம் அன்னதானம் நடைபெறும் திருக்கோவிலாகவும் உள்ளது-
  Next Story
  ×