என் மலர்

  ஆன்மிகம்

  சோமண்டாபுதூரில் விநாயகர்-முருகன் கோவில் கும்பாபிஷேகம்
  X

  சோமண்டாபுதூரில் விநாயகர்-முருகன் கோவில் கும்பாபிஷேகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோமண்டாபுதூரில் விநாயகர்-முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
  பெரம்பலூரை அடுத்த சோமண்டாபுதூரில் குன்றின் மீது அமைந்துள்ள விநாயகர், வெற்றிவேல்முருகன், நவகிரகங்கள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை வாஸ்துசாந்தி, கும்பஅலங்காரம், முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.நேற்று காலை 2-வது கால யாகசாலை பூஜை, ரக்சாபந்தன், நாடிசந்தானம் நிகழ்ச்சிகளும், கடம்புறப்பாடும், விமான கும்பாபிஷேகமும், அதனைத்தொடர்ந்து மூலவர் கும்பாபிஷேகமும் நடந்தது.

  கும்பாபிஷேகத்தை செட்டிக்குளம் ஸ்ரீதர் குருக்கள் மற்றும் சிவாச்சாரியார் குழுவினர் நடத்தி வைத்தனர்.இரவில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும், நாடகமும் நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சோமண்டாபுதூர், நார்க்காரன் கொட்டகை, வடக்குமாதவி, கோனேரிபாளையம், எளம்பலூர், எசனை மற்றும் சுற்றுப்புற கிராமபகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சோமண்டாபுதூர் ஊராட்சி பொதுமக்கள் செய்திருந்தனர்.
  Next Story
  ×