search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சித்திரையில் சிறப்பு மிக்க ஆன்மிக நிகழ்வுகள்
    X

    சித்திரையில் சிறப்பு மிக்க ஆன்மிக நிகழ்வுகள்

    சித்திரை மாதத்தில் பல சிறப்பு மிக்க ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக புராணங்களும், இதிகாசங்களும் தெரிவிக்கின்றன.
    சித்திரை மாதத்தில் பல சிறப்பு மிக்க ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக புராணங்களும், இதிகாசங்களும் தெரிவிக்கின்றன. அவற்றில் சில இங்கு...

    * சித்திரை மாதம் வரும் சுக்ல பட்ச (வளர்பிறை) நவமி திதியில்தான் ராமர் பிறந்தார். அன்றைய தினம் ராம நவமியாக கொண்டாடப்படுகிறது.

    * சித்திரை மாதம் திருதியை அன்று மகாவிஷ்ணு மச்ச (மீன்) அவதாரம் செய்தார். அன்றைய தினம் மத்ஸ்ப ஜெயந்தியாக நடக்கிறது.

    * சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமி தினத்தில் லட்சுமிதேவி, வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு விஜயம் செய்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே அன்றைய தினம் லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

    * சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தில்தான் சித்திர புத்திரர் தோன்றினார். ஒவ்வொருவரின் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுவதற்காக ஒருவரை, சித்திரம் போல் வரைந்தார் சிவபெருமான். அந்த சித்திரத்தில் இருந்து உயிர்ப்பெற்றவர் சித்திர புத்திரன். இவர் எமதர்மனின் கணக்கராக இருப்பதாக இதிகாச, புராணங்கள் கூறுகின்றன.

    Next Story
    ×