search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மங்கள சண்டிகா
    X
    மங்கள சண்டிகா

    மங்கள சண்டிகா விரத பூஜை

    அதிகச் சாமர்த்தியமும், அதிக கோபமும் உள்ளவளாகவும், கல்யாணக் காரியங்களில் மங்களம் தருபவளாகவும் இருக்கும் தேவிதான் மங்கள சண்டிகை என்று அழைக்கப்படுகின்றாள்.
    மனு வம்சத்தில் பிறந்த மங்களன் என்பவன் ஏழு கண்டங்களை காக்கும் அரசனாக இருந்தான். அவன் சண்டிகையை வணங்கிய தாலேயே ஏழு கண்டங்களையும் வெற்றிக் கொள்ள முடிந்தது.

    இவ்விதம் மங்களன் பூஜித்து வெற்றியடைந்ததால் துர்க்கை தேவி மங்கள சண்டிகை என்று வழங்கப்பட்டாள். நவராத்திரி நாட்களில் சிவனுக்காக கோவில்களில் மகா சண்டி யாகம் என்ற பெயரில் சிறப்பு வழிபாடும் செய்யப்படும். அதிகச் சாமர்த்தியமும், அதிக கோபமும் உள்ளவளாகவும், கல்யாணக் காரியங்களில் மங்களம் தருபவளாகவும் இருக்கும் தேவிதான் மங்கள சண்டிகை என்று அழைக்கப்படுகின்றாள்.

    மங்கள சண்டிகை மின்னல் ஒளியை உடையவள், சிங்க வாகனம் கொண்டவள், ஒன்பது மாதர்களால் சூழப்பட்டவள், முக்கண்ணும் பிறை முடியும் உடையவள். சண்டன் என்ற அசுரனைக் கொன்றவள். தனது எட்டுக்கரங்களில் முறையே சங்கு, சக்கரம், கதை, வாள், கேடயம், அம்பு, வில், பாசம் ஆகியவற்றைக் கொண்டிருப்பாள் என்று ஆகமங்கள் இவளை அறிமுகப்படுத்துகின்றன.

    விஷ்ணு முதலான எல்லா தேவர்களும் திரிபுரங்களிலும் வெற்றி உண்டாவதற்காக சகல திரவியங்களாலும் பூஜித்து இந்தத் தேவியைப் போற்றினர். அப்போது மங்கள சண்டி துர்க்கை வடிவாக தோன்றி னாள். பிறகு அவள் தேவர்களை நோக்கி, நீங்கள் பயப்பட வேண்டாம் ருத்திர மூர்த்தியால் திரிபுர வெற்றி உண்டாகும் என்று கூறி மறைந்தாள்.

    துர்க்கையின் வாக்குப்படியே சிவபெருமான் திரிபுரங்களையும் அழித்தார். திரிபுர வெற்றிக்குத் துணை நின்ற மங்கள சண்டிகையை தேவர்கள் தேன், பால், பழங்களோடும் திருப்தி செய்து ஆடல்பாடல் வாத்யங்களாலும், போற்றிசைப் பாடல்களாலும், தியானங்களாலும் பூஜித்து வழிபட்டனர்.

    மங்கள சண்டிகா ஸ்தோத்திரத்தைச் செவ்வாய்க் கிழமைதோறும் சொல்லியே ருத்திர மூர்த்தியானவர் சகல மங்களத்தையும் பெற்றார் என்று சொல்லப்படுகின்றது. இது போலவே அங்காரகனும், மங்களன் என்ற மன்னனும், மங்கையரும், மங்களத்தை விரும்பும் ஆடவரும், தேவர், முனிவர், மனுக்கள், மனிதர்கள் முதலிய யாவரும் மங்கள சண்டிகையைப் பூஜை செய்து அவரவர் விரும்பி மங்களத்தை அடைந்தனர்.

    இந்த மங்கள சண்டிகை சுலோகத்தைச் சொல்பவர் மட்டுமல்லாது காதால் கேட்பவரும்கூட சகல பாக்கியங்களையும் பெறுவர் என்று பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×