என் மலர்

  ஆன்மிகம்

  இயேசு
  X
  இயேசு

  தேவனுடைய அன்பால் மகிமையான வாழ்க்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேவனுடைய அன்பு நம்மீது பெரிதான அன்பாய் இருந்ததினால் நாம் இன்று நம்முடைய வாழ்க்கை மகிமையான வாழ்க்கையாக உள்ளது என்பதை நாம் இந்த தவக்காலத்தில் சிந்தித்து பார்க்க கடமைப்பட்டவர்களாய் இருக்கிறோம்.
  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மில் அன்பு கூர்ந்து தன்னை பலியாக ஒப்புக்கொடுத்தார். 1 யோவான் 3-ம் அதிகாரம் 16-ம் வசனத்தில் அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம் என்று சொல்லப்ட்டுள்ளது. ஆம் தேவ பிள்ளைகளே தேவன் நம்மீது வைத்துள்ள அன்பின் நிமித்தமாகவே இயேசு தன்னுடைய ஜீவனையே நமக்காக கல்வாரி சிலுவையில் ஒப்பு கொடுத்தார் என்பது எவ்வளவு பெரிதான காரியம் என்று நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

  ஆகவே தேவன் இவ்வளவு  பெரிதான மீட்பை இரட்சிப்பை நமக்கு கொடுத்திருப்பார் என்றால், அவருடைய அன்பின் நிமித்தமாக அவர் கொடுத்திருக்கின்ற மிகப்பெரியதாக நாம் நினைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் தகுதியில்லாத எனக்கு இவ்வளவு பெரிய அன்பு இவ்வளவு பெரிய மீட்பு சமாதானம், இவ்வளவு பெரிய விடுதலை என்பதை நாம் உணர வேண்டும்.

  அநேக வேளைகளில் நாம்  ஆண்டவருடைய சத்தியத்தை அறிய வேண்டிய அளவில் அறிந்திருப்பது மிக அவசியம். எல்லாச்சூழ்நிலைகளிலும் கர்த்தர் மேல் வைக்கின்ற நம்பிக்கை அவருடைய சமாதானத்தின் ஆளுமை நம் இக்கட்டான வேளைகளிலும் கர்த்தம் ஆளுமை செய்கின்றார் என்ற நம்பிக்கை நமக்குள் இருக்க வேண்டும். தேவன் என்னை நேசிக்கிறார். ஆகவே இந்த அன்பை நாம் எந்தளவுக்கு நம்முடைய வாழ்க்கையில் விசுவாசித்து அதன் அடிப்படையில் ஒவ்வொரு காரியத்திலும் செயல்படுகின்றோமோ அந்தளவுக்கே மெய்யான சமாதானம் உண்டு.

  இக்கட்டான காலத்திலும் பொறுமையும் நிதானமுமாக ஆண்டவருடைய கிருபையை சார்ந்து வாழுகிற வாழ்க்கை என்பது வேதம் சொல்லுகிறபடி விசுவாசிக்கிறவன் பதறான நம்பிக்கையே உங்கள் பெலனாயிருக்கும் என்பதே . இவ்விதமான ஒரு ஆழமான நம்பிக்கைக்குரிய வாழ்க்கையை அவருடைய அன்பை நாம் அறிந்து அதன் அடிப்படையில் வாழுகிற வாழ்க்கையின் மூலமாகவே பெற்றுக்கொள்ள முடியும்.

  ஆகவே என்னில் அன்புகூறுகிற தேவன் இவர். அந்த அன்பு தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்த அன்பு. இவ்வளவு பெரிதான அன்பு என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே தேவனுடைய அன்பு நம்மீது பெரிதான அன்பாய் இருந்ததினால் நாம்  இன்று நம்முடைய வாழ்க்கை மகிமையான வாழ்க்கையாக உள்ளது என்பதை நாம் இந்த தவக்காலத்தில் சிந்தித்து பார்க்க கடமைப்பட்டவர்களாய் இருக்கிறோம். ஆம் தேவன் மேலும் நாம் ஒவ்வொருவரையும் தம் அன்பினால் ஆசீர்வதிப்பாராக ஆமென்.

  சகோ.ஜோசப், கோவில்வழி.
  Next Story
  ×