search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    திடீரென பெய்த மழை.. லக்னோ-பெங்களூரு ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தம்
    X

    திடீரென பெய்த மழை.. லக்னோ-பெங்களூரு ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தம்

    • 15.2 ஓவர்களில் 93 ரன்கள் எடுத்திருந்தபோது மழை பெய்யத் தொடங்கியது
    • ஆட்டம் நிறுத்தப்பட்டபோது கேப்டன் டூ பிளசிஸ் 40 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    லக்னோ:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணி, 15.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது பெங்களூரு அணியில் விராட் கோலி 31 ரன்கள் எடுத்திருந்தார். கேப்டன் டூ பிளசிஸ் 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    சிறிய தூறலாக தொடங்கிய மழை சிறிது நேரத்தில் வேகமெடுத்தது. இதனால் வீரர்கள் வெளியேறினர். ஆடுகளம் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டது. சிறிது நேரத்தில் மழை நின்றதும் போட்டி தொடங்கியது.

    Next Story
    ×