ராட்சசனை மிஞ்சிவிட்டதா? அசோக் செல்வனிடம் கேள்வி எழுப்பிய விஷ்ணு விஷால்

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘போர் தொழில்’.இப்படத்திற்கு திரைப்பிரலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஷ்ணு விஷால் - அசோக் செல்வன்
விஷ்ணு விஷால் - அசோக் செல்வன்
Published on

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான அசோக் செல்வன், தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

போர் தொழில்
போர் தொழில்

போர் தொழில்

அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். 'போர் தொழில்' திரைப்படம் கடந்த ஜூன் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால்

'போர் தொழில்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இப்படம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ராட்சசனை மிஞ்சிவிட்டதா? படம் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

அசோக் செல்வன் - போர் தொழில்
அசோக் செல்வன் - போர் தொழில்

அசோக் செல்வன் - போர் தொழில்

இதற்கு பதிலளித்த அசோக் செல்வன், மச்சி.. அதற்கு பதில் சொல்லும் சிறந்த நபர் நீ தான்! நீயே பாத்துட்டு சொல்லு.. நன்றி டா, நீ எனக்காக மகிழ்ச்சியாக இருப்பாய் என்று எனக்கு தெரியும். வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் தமிழ் சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com