வீரன் சிறப்பு திரையிடலை கண்டு மகிழ்ந்த குழந்தைகள்.. ஹிப்ஹாப் ஆதி நெகிழ்ச்சி

இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள திரைப்படம் ‘வீரன்’.இப்படம் கடந்த 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஹிப்ஹாப் ஆதி
ஹிப்ஹாப் ஆதி
Published on: 

இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் கடந்த 2-ம் தேதி வெளியான படம் 'வீரன்'. ஃபேண்டசி காமெடி ஆக்சன் எண்டர்டெயினர் படமாக வெளியான இந்த படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ்' தயாரித்திருந்த இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மதுரையில் 'வீரன்' திரைப்படம் குழந்தைகளுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இதில் 300 குழந்தைகள் கலந்து கொண்டு படத்தை கண்டு ரசித்தனர். இது தொடர்பான வீடியோவை நடிகர் ஹிப்ஹாப் ஆதி தனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com