வா செந்தாழினி.. முதல் பாடலை வெளியிடும் ஜி.வி.பிரகாஷ்

விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் அடியே.இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
வா செந்தாழினி.. முதல் பாடலை வெளியிடும் ஜி.வி.பிரகாஷ்
Published on

ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார்.

அடியே
அடியே

அடியே

சமீபத்தில் அடியே படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி அடியே படத்தில் இடம்பெற்றுள்ள வா செந்தாழினி பாடல் நாளை (மே 26ம் தேதி) வெளியாகவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com