என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
சூர்யா -41 படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு.. வைரலாகும் போஸ்டர்..
- இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் 'சூர்யா 41'.
- 'சூர்யா 41' படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.
எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றிக்கு பிறகு பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இதற்குமுன் இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது இவர்கள் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
இப்படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 41' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை '2டி என்டர்டைன்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே மோதல், இதனால் படப்பிடிப்பு தளத்திலிருந்து சூர்யா விலகியதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது போன்ற தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.
சூர்யா பட போஸ்டர்
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மீண்டும் சூர்யா 41 படப்பிடிப்புக்கு வர காத்திருக்கிறேன் எனக் குறிப்பிட்டு, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும் சூர்யா பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இப்படம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி 'சூர்யா 41' படத்தின் டைட்டில் 'வணங்கான்' என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள சூர்யா "உங்களுடன் மீண்டும் இணைந்ததில் பெருமகிழ்ச்சி..! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா…!" என பதிவிட்டுள்ளார்.
உங்களுடன் மீண்டும் இணைந்ததில் பெருமகிழ்ச்சி..! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அண்ணா…! #DirBala
%8D?src=hash&ref_src=twsrc%5Etfw">#வணங்கான் #Vanangaan #Achaludu pic.twitter.com/OAqpCRCWgx
— Suriya Sivakumar(@Suriya_offl) July 11,