search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    விக்ரம் படம் குறித்து சிவகார்த்திகேயன் பதிவு
    X

    சிவகார்த்திகேயன்

    விக்ரம் படம் குறித்து சிவகார்த்திகேயன் பதிவு

    • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜுன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
    • விக்ரம் பட வெற்றியைத் தொடர்ந்து பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் சமூக வலைத்தளத்தில் பதிவு வைரலாகியுள்ளது.

    மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    விக்ரம்


    'விக்ரம்' படத்தின் வெற்றிக்கு பிரபலங்கள் பலர் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் சமூக வலைத்தளத்தில் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, "விக்ரம் டோட்டல் பிளாஸ்ட். லோகேஷ் சார் இயக்கம், அனிருத் இசை, அன்பறிவு ஸ்டண்ட் காட்சிகள், விஜய் சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் நடிப்பு, சூர்யா சர்ப்ரைஸ் எண்ட்ரி அனைத்தும் அற்புதமாக இருந்தது. ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×