சித்தார்த்தின் 'டக்கர்' பட பாடல் வைரல்

சித்தார்த் நடிப்பில் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டக்கர்'.'டக்கர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'மரகத மாலை' பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சித்தார்த்தின் 'டக்கர்' பட பாடல் வைரல்
Published on

நடிகர் சித்தார்த் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் 'டக்கர்'. இப்படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ளார். இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் 'டக்கர்' திரைப்படம் வருகிற மே 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

டக்கர்
டக்கர்

டக்கர்

இந்நிலையில் டக்கர் படத்தின் இடம்பெற்றுள்ள 'மரகத மாலை' என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. உமா தேவி எழுதியுள்ள இந்த பாடலை பிரதீப் குமார், விஜய் யேசுதாஸ், சின்மயி ஸ்ரீபாதா இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com