ஆகஸ்ட் ரேஸில் இருந்து பின்வாங்கிய சந்தானம்.. அதிரடி முடிவெடுத்த படக்குழு

நடிகர் சந்தானம் தற்போது ‘கிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார்.
ஆகஸ்ட் ரேஸில் இருந்து பின்வாங்கிய சந்தானம்.. அதிரடி முடிவெடுத்த படக்குழு
Published on

பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிக்' படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

பார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழு சமீபத்தில் யு/ஏ சான்றிதழ் வழங்கியது.

கிக் போஸ்டர்

'கிக்' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, 'கிக்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com