சர்வதேச விருதுகளை வென்ற இராவண கோட்டம் திரைப்படம்

நடிகர் சாந்தனு நடிப்பில் வெளியான திரைப்படம் `இராவண கோட்டம்'.இப்படம் ஜூன் 16-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
சர்வதேச விருதுகளை வென்ற இராவண கோட்டம் திரைப்படம்
Published on

இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான படம் `இராவண கோட்டம்'. இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் பிரபு, இளவரசு, தீபா ஷங்கர், சஞ்சய் சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் கடந்த மே 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், 'இராவண கோட்டம்' திரைப்படம் ராஜஸ்தானில் நடைபெற்ற ஜெய்சால்மர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் என இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. இதனை நடிகர் சாந்தனு தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

'இராவண கோட்டம்' திரைப்படம் ஜூன் 16-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com