விக்ரம் 62 - புதிய அப்டேட் வெளியிட்ட படக்குழு

மூன்று படங்களில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்தார் அருண். எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
விக்ரம் 62 - புதிய அப்டேட் வெளியிட்ட படக்குழு
Published on

விக்ரம் தனது 62-வது படத்துக்காக இயக்குனர் எஸ்.யு. அருண்குமாருடன் முதல் முறையாக இணைந்துள்ளார். இந்த படத்தை எச்.ஆர். பிக்சர் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தை இயக்கும் அருண்குமார் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'சித்தா' திரைப்படத்தை இயக்கியவர். இது குழந்தைகளின் பாதுகாப்பை உணர்வுபூர்வமாக சித்தரித்ததற்காக பாராட்டப்பட்ட படம்.

விஜய் சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் (2014) படத்தின் மூலம் அருண் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் சேதுபதி (2016), சிந்துபாத் (2019) என்று தொடர்ந்து மூன்று படங்கள் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்தார் அருண்.

'சியான் 62' படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியதாக தகவல் வெளியான நிலையில், இந்த படத்தில் தேசிய விருது வென்ற மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. இதே படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com