search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன எல்லோருக்கும் நன்றி - திரிஷா
    X

    பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன எல்லோருக்கும் நன்றி - திரிஷா

    • திரிஷா தனது 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
    • திரிஷாவுக்கு பலத்தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    தமிழ் திரையுலகில் லேசா லேசா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை திரிஷா. மாடலிங் துறையில் இருந்து நடிகையான திரிஷா இன்றும் பல படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கும் மேல் திரைத்துறையில் கதாநாயாகியாக இருக்கும் திரிஷா நேற்று (மே 4) தனது 41 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

    பிறந்தநாளை ஒட்டி நடிகை திரிஷாவுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என பலத்தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில், நடிகை திரிஷா தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அனைவருக்கும் நன்றியை தெரிவித்து தனது பிறந்தநாள் புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×