நாகசைதன்யாவின் கஸ்டடி பட பாடல் வைரல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கஸ்டடி'.இப்படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
நாகசைதன்யா
நாகசைதன்யா
Published on

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார்.

கஸ்டடி
கஸ்டடி

கஸ்டடி

'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருக்கிறார். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது மற்றும் இப்படத்தின் முதல் பாடலான 'Head up High' பாடல் வெளியாகி வைரலானது.

கஸ்டடி
கஸ்டடி

கஸ்டடி

இந்நிலையில் கஸ்டடி படத்தின் இரண்டாம் பாடலான டைம்லெஸ் லவ் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா மற்றும் கபில் கபிலன் குரலில் மதன் கார்க்கி வரிகளில் வெளியான இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடல் மூலம் முதல் முறையாக இளையராஜாவுடன் மதன் கார்க்கி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com