மில்லியன் பார்வையாளர்களை கடந்த எஸ்.ஜே.சூர்யா பட டிரைலர்

நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'பொம்மை' திரைப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இப்படத்தின் இரண்டாவது டிரைலர் நேற்று முன்தினம் வெளியானது.
எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யா
Published on

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் 'பொம்மை'. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.

பொம்மை
பொம்மை

பொம்மை

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் பெற்றது. நேற்று முன்தினம் 'பொம்மை' படத்தின் இரண்டாவது டிரைலரை படக்குழு வெளியிட்டிருந்தது.

பொம்மை
பொம்மை

பொம்மை

இந்நிலையில் பொம்மை படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியான ஒரு நாளில் மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கடந்துள்ளதாக எஸ்.ஜே.சூர்யா சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்

இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com