search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    வெற்றிகரமாக 100வது நாளில் அடியெடுத்து வைக்கும் லவ் டுடே திரைப்படம்
    X

    லவ் டுடே

    வெற்றிகரமாக 100வது நாளில் அடியெடுத்து வைக்கும் லவ் டுடே திரைப்படம்

    • பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'லவ் டுடே'.
    • சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் லவ் டுடே திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    லவ் டுடே


    இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான லவ் டுடே திரைப்படம் வெளியாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகியுள்ளது.


    லவ் டுடே

    சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் லவ் டுடே திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி லவ் டுடே 100வது நாள் என்பதால் இயக்குனர் தனது பிரதீப் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    Next Story
    ×