லால் சலாம் படக்குழுவை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்

’லால் சலாம்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.இந்த படத்தில் நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
லால் சலாம் படக்குழுவை பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்
Published on

ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. படக்குழுவிற்கு திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 'லால் சலாம்' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com