சத்தமே இல்லாமல் வெளியான கான்ஜூரிங் கண்ணப்பன்

'கான்ஜூரிங் கண்ணப்பன்' திரைப்படத்தில் பலர் நடித்திருந்தனர்.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சத்தமே இல்லாமல் வெளியான கான்ஜூரிங் கண்ணப்பன்
Published on

இயக்குனர் சிம்பு தேவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'கான்ஜூரிங் கண்ணப்பன்'. இந்த படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

திகில், ஃபான்டசி கலந்த திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'கான்ஜூரிங் கண்ணப்பன்' திரைப்படம் டிசம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது.

கான்ஜூரிங் கண்ணப்பன் போஸ்டர்

இந்நிலையில், 'கான்ஜூரிங் கண்ணப்பன்' திரைப்படத்தின் ஓடிடி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. தற்போது தமிழில் மட்டும் வெளியாகியுள்ள இப்படம் விரைவில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com