என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • காதலர் தினத்தை ஒட்டி நாளை மௌனம் பேசியதே படம் நாளை வெளியாக உள்ளது.
    • மௌனம் பேசியதே படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

    ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', 'அஞ்சான்', தனுஷின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'மௌனம் பேசியதே' படம் மீண்டும் வெளியாக உள்ளது.

    காதலர் தினத்தை ஒட்டி நாளை மௌனம் பேசியதே படம் நாளை வெளியாக உள்ளது.

    2002-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'மௌனம் பேசியதே'. த்ரிஷா, லைலா, நந்தா என பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்றும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

    மௌனம் பேசியதே படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், நடிகை திரிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய முதல் படம் மௌனம் பேசியதே ரீரிலீஸ் ஆகவுள்ளது. காதலர் தினத்தை ஒட்டி வெளியாகும் இப்படத்தை தியேட்டரில் பொய் பாருங்கள். இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஏன் என்றால் இது தான் என்னுடைய முதல் படம். இங்கிருந்து தான் எல்லாமே தொடங்கியது

    இதில் சிறப்பு என்ன என்றால் என்னுடைய அடுத்த ரிலீசுக்கு சூர்யா உடன் நடித்த படம் (கருப்பு) தான். எனவே ஒரு வட்டத்தை நிறைவு செய்ததாக நான் உணர்கிறேன். 'மௌனம் பேசியதே' குழுவுக்கு அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அமீர் சார் என்னுடைய முதல் படத்திலேயே உங்களுடன் பணியாற்றியதால் மகிழ்ச்சி.

    இந்தக் குழுவில் யாரும் என்னை ஒரு அறிமுக நடிகையாக நடத்தவில்லை. குடும்பத்தினருடன் இருந்ததை போல தான் இருந்தது. இப்படத்தின் மூலம் லைலாவை சந்தித்ததும், அவருடன் நடித்ததும் பெரும் மகிழ்ச்சி. யுவனின் இசை இன்றுவரை இப்படத்தை பிரபலமாகவே வைத்துள்ளது" " என்று தெரிவித்தார்.

    முன்னதாக மௌனம் பேசியதே படத்தின் பிரபல வசனத்தை பேசி சூர்யா வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக மௌனம் பேசியதே படத்தின் பிரபல வசனத்தை பேசி சூர்யா வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • படத்திற்காக சென்னையில் கார் மெக்கானிக் செட் மற்றும் ஓட்டல் என 2 பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.
    • படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். இந்நிலையில் ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்து வெளியாகி வரும் தகவல் ரஜினி, கமல் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது.

    இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இதற்கிடையே ரஜினி-கமல் இணைந்து நடிக்க இருக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் படத்தின் முதன்மை தயாரிப்பாளராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி மற்றும் ஐஸ்வர்யா ரஜினி, சுருதிஹாசன் ஆகியோர் இணை தயாரிப்பிலும் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    படத்திற்காக சென்னையில் கார் மெக்கானிக் செட் மற்றும் ஓட்டல் என 2 பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    ரஜினி தற்போது ஜெயிலர்-2 டப்பிங் பணிகளில் இருக்கிறார். இந்த பணிகள் முடிவடைந்ததும் மார்ச் மாதத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினியின் 173-வது படப்பிடிப்பு தொடங்குகிறது.

    இதற்கு முன்னதாக ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தின் புரோமோவில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் 15 நாட்கள் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு முன்னதாக படத்தின் புரோமோ பணிகளை முடிப்பதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    • தற்போது யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
    • இந்திய அளவில் பிரபலமான அனுஷ்கா சொத்து மதிப்பு ரூ.135 கோடியை தாண்டியுள்ளது.

    திரை உலகில் ஹீரோக்கள் மட்டுமே அதிக சம்பளம் வாங்கி வந்தனர். சமீபகாலமாக ஹீரோயின்களின் சம்பளமும் அதிகரிக்க தொடங்கி வருகிறது. கதாநாயகர்களை போல கதாநாயகிகளின் சம்பளமும் கோடிகளை தாண்டி உள்ளது.

    சினிமா மட்டுமின்றி விளம்பரங்கள் மற்றும் சொந்தமான தொழிலில் ஈடுபடுவது மூலம் கதாநாயகிகளின் வருமானம் உச்சத்தை அடைந்து வருகிறது.

    இந்நிலையில் 2026-ம் ஆண்டு தென்னிந்திய திரை உலகில் டாப் 10 கதாநாயகிகளின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    நயன்தாரா: தென்னிந்திய திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நயன்தாரா சினிமா நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, விளம்பர படங்கள், சொந்தமாக அழகு சாதன பொருட்கள் விற்பனை போன்றவை செய்து வருகிறார்.

    தற்போது யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.200 கோடி என தகவல் வெளியாகி இருக்கிறது.

    அனுஷ்கா: பாகுபலி, அருந்ததி போன்ற படங்கள் மூலம் இந்திய அளவில் பிரபலமான அனுஷ்கா சொத்து மதிப்பு ரூ.135 கோடியை தாண்டியுள்ளது.

    தமன்னா: தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடிப்பது, தனி பாடலுக்கு நடனம் ஆடுவது என திரை உலக ரசிகர்களை கவர்ந்து வரும் தமன்னா சொத்து மதிப்பு ரூ.110 முதல் ரூ.120 கோடி என கூறப்பட்டுள்ளது.

    சமந்தா: ரூ.110 முதல் ரூ.120 கோடி, திரிஷா-ரூ.85 முதல் ரூ.100 கோடி, காஜல் அகர்வால்-சுமார் ரூ.85 கோடி, ராஷ்மிகா மந்தனா-ரூ.66 கோடி, பூஜா ஹெக்டே-ரூ.50 கோடி, சாய்பல்லவி-ரூ.47 கோடி, சுருதிஹாசன்-ரூ.45 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • வரும் 26-ந் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனையில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்.
    • திருமணம் பற்றி இருவருமே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் மவுனம் காத்து வருகின்றனர்.

    விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக முடிந்த நிலையில், இருவரது திருமணம் வருகிற 26-ந் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்பூர் அரண்மனையில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆனால் திருமணம் பற்றி இதுவரை இருவருமே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி தங்களது திருமண நிகழ்வை ஆவணப்படமாக தயாரித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியிடவும், இதற்காக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் பேசியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஏற்கனவே நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியும் தங்கள் திருமணத்தை இதேபோல ஆவணப்படமாக தயாரித்து ஓ.டி.டி. தளத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    • குக்கூ, ஜோக்கர், ஜிப்சி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குநர் ராஜூமுருகன்.
    • ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அடுத்த திரைப்படம் "மை லார்ட்".

    செய்தியாளராக இருந்து இயக்குநராக உருவெடுத்தவர் ராஜூமுருகன். இவர் இயக்கத்தில் வெளியான குக்கூ, ஜோக்கர், ஜிப்சி, மாடர்ன் லவ் சென்னை (லாலகுண்டா பொம்மைகள்), ஜப்பான் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த வரிசையில், இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் "மை லார்ட்".

    ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள மை லார்ட் படத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் சைத்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் அதன் டிரெய்லர் வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

    இந்தத் திரைப்படம் வருகிற 13ஆம் தேதி வெளியாக உள்ளது. "மை லார்ட்" திரைப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த நிலையில், இயக்குநர் ராஜூ முருகன் அளித்த சமீபத்திய பேட்டியில், தான் இயக்கிய ஜப்பான் படம் குறித்து பேசியுள்ளார்.

    அப்போது அவர், "ஜப்பான் படத்திற்கு பிறகு என் சூழல் மிகவும் மோசமாக இருந்தது. ஆரம்பத்தில் அதை ஒரு இணையத் தொடராக உருவாக்கவே திட்டமிட்டே. கதை வடிவில் வித்தியாசமான யோசனைகள் இருந்தன. நடிகர் கார்த்தி படத்திற்குள் வந்தபோது, அவருக்காக நான் நிறைய விஷயங்களை மாற்றினேன். ஆம், அது என் பொறுப்பு தான். அந்த மாற்றங்களையெல்லாம் நானே செய்தேன், யாரிடமிருந்தும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால் செயல்படுத்தலில் நான் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக நடக்கவில்லை.

    இப்போதெல்லாம், ஜென் இசட் (Gen Z) சில வகையான படங்களை மட்டுமே ரசிப்பார்கள் என்று மக்கள் கூறுகிறார்கள். அது ஒரு கட்டுக்கதை தான். சமீபத்தில் வெளியான "சிறை" நன்றாக வேலை செய்தது, டூரிஸ்ட் ஃபேமிலி படமும் கூட வெற்றி பெற்றது. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் இயக்குநரும் ஜென் இசட் தான். எந்த வகையான திரைப்படமும் எந்த நேரத்திலும் ஓடலாம். ஜென் இசட் தலைமுறையினருக்காக மட்டுமே நாம் படங்களை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை," என்று தெரிவித்தார்.

    சகோதரி பூஜாவுடன் இணைந்து 'தோசா டைரீஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

    நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

    'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமான இவரது நடிப்பில் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவை.

    தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து உள்ளார். விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்துள்ளார்.

    இதனிடையே, மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களின் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதன்பின் சினிமாவில் பெரிய அளவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில், நடிகை வரலட்சுமி, தன் சகோதரி பூஜாவுடன் இணைந்து 'தோசா டைரீஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

    இந்நிறுவனத்தின் முதற்படமான 'சரஸ்வதி' மூலம் இயக்குநராகவும் வரலட்சுமி அறிமுகமாகிறார்.

    இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்பட பலர் நடிக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது. 

    இந்நிலையில், நடிகை Vs இயக்குநர் என்ற தலைப்பில் சரஸ்வதி படம் தொடர்பான சுவாரஸ்யமான விடியோ ஒன்று வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.  

    • சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.
    • என்னால் எப்படி மகனின் காதலுக்கு நோ சொல்ல முடியும் என்று சிவகுமார் தெரிவித்தார்.

    சூர்யா - ஜோதிகா 1999ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்பத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை ஒன்றாக இணைந்து நடித்தனர்.

    இதனையடுத்து சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில், சூர்யா ஜோதிகாவை காதல் திருமணம் செய்து கொண்டதற்கு முக்கிய காரணம் ராதிகா தான் என்று சிவகுமார் பேசியுள்ளார்.

    யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய சிவகுமார், "உயிரிலே கலந்தது' படப்பிடிப்பில் தனியாகவே இருந்த சூர்யாவை ஜோதிகாவிடம் `பேசு பேசு' என சொன்னவர் ராதிகா தான். திரைப்படங்களில் 150 கதாநாயகிகளை லவ் பண்ணுவது போல நடித்துள்ளேன். என்னால் எப்படி மகனின் காதலுக்கு நோ சொல்ல முடியும்'' என்று தெரிவித்தார்.

    • ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.
    • இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

    லக்ஷமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பில், சுகா இயக்கத்தில் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள ஃபேமிலி எண்டர்டெய்னர் திரைப்படமான "சைலப்பன் சைக்கிள் மார்ட்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, இயக்குநர் வெற்றிமாறன் இன்று வெளியிட்டார்.

    தினசரி வாழ்க்கையில் எளிய மனிதர்கள் வாழும் உண்மையான உலகத்தை அசலாக திரையில் பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது. ஒரு சைக்கிள் சக்கரத்தை மையமாக வைத்து, கிராமத்தின் முகம், அதன் மக்கள், கோவில் உள்ளிட்ட அம்சங்களை புதுமையான காட்சியமைப்பில் வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    ஒரு தென் தமிழகத்தில் உள்ள கிராமத்தில் வாழும் மனிதர்கள் மற்றும் அவர்களது வாழ்வில் நிகழும் சம்பவங்களை மையமாகக் கொண்டு, நகைச்சுவை கலந்து, குடும்பத்துடன் அனைவரும் ரசித்து மகிழும் வகையில் குடும்ப சித்திரமாக இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுகா.

    இந்தப் படத்தில் இசக்கி கார்வண்ணன், எம். எஸ். பாஸ்கர், இளவரசு, மூணார் ரமேஷ், இயக்குநர் சுப்ரமணிய சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் பூஜா மோகன்ராஜ், கதா நந்தி, சுர்ஜித் கோபிநாத், வித்யா விஜயகுமார், யஷ்வந்த், சந்தான லட்சுமி மற்றும் மீனாட்சி ஐயர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • நடிகை ஸ்ரீலீலா மருத்துவருக்கான பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
    • ஸ்ரீலீலா டாக்டர் படிப்பை முடித்து பட்டம் பெற்ற புகைப்படம் இணையத்தில் வைரல்

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான ஸ்ரீலீலா, தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'பராசக்தி' படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், நடிகை ஸ்ரீலீலா மருத்துவருக்கான பட்டப்படிப்பை முடித்துள்ளார். ஸ்ரீலீலா டாக்டர் படிப்பை முடித்து பட்டம் பெற்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    நடிகை ஸ்ரீலீலா சினிமா துறையில் மட்டுமன்றி கல்வியிலும் கலக்குவதாக ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

    காதலின் ஆழத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஒளிப்பதிவு அமைந்துள்ளது.

    படத்தில் நடிகராகவே வரும் விஜய்சேதுபதி தான் நடிக்கும் காதல் கதை செல்லவா என்கிற படத்தின் பர்ஸ்ட் லுக் ஒன்றை வெளியிடுகிறார். அந்த படத்தின் கதையை மக்களிடமே கேட்க நினைக்கும் விஜய் சேதுபதி, ரேடியோ எப்.எம் மூலம் பொது மக்களிடம் காதல் கதைகளை கேட்கிறார்.

    அப்படி விஜய்சேதுபதிக்கு இரண்டு பெண்கள் போன் செய்கிறார்கள். அதில் ஒருவர் நிகிதா. வங்கியில் வேலை செய்கிறார். அதே வங்கியில் செக்யூரிட்டியாக வேலைசெய்கிறார் ஜெய்ராம். இவர்களுடைய காதல் கதையை சொல்கிறார்.

    விஜய்சேதுபதியிடம் பேசும் மற்றொரு பெண், நகுலிடம் தனக்கு ஏற்பட்ட பழக்கத்தை பற்றி கூறுகிறார். இவர்களுக்கு சில ஆலோசனைகளையும் விஜய்சேதுபதி கூறுகிறார்.

    கடைசியில், இருவர் வாழ்க்கையிலும் என்ன ஆனது? விஜய்சேதுபதி கதையை தேர்ந்தெடுத்தாரா? என்பது படத்தின் மீதிக்கதை..

    நடிகர்கள்

    விஜய் சேதுபதி வழக்கம் போல தனது எதார்த்தமான நடிப்பால் முத்திரை பதிக்கிறார். அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத வசன உச்சரிப்பும், கண்கள் வழியே கடத்தும் உணர்வுகளும் படத்திற்குப் பலம்.

    ஜெயராம், தனது பரந்த அனுபவம் மற்றும் கலைஞரான திறமையால் இந்த காதல் கதையின் உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார்.

    துடிப்பான இளைஞராகவும், அதே சமயம் காதலில் உருகும் காதலனாகவும் நகுல் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். படத்தின் நாயகிகள் கதையின் காதல் கோணத்தை மிக நுட்பமாக வெளிப்படுத்துகின்றனர்.

    இயக்கம்

    ஒரு மென்மையான, அழகான காதல் கவிதையை இயக்க முயற்சியிருக்கிறார் இயக்குனர் சனில் களத்தில். கதைக்களம் நன்றாக இருந்தாலும், சில இடங்கள் நாம் ஏற்கனவே பார்த்த பழைய காதல் படங்களை நினைவுபடுத்துகின்றன. படத்தின் வேகம் சில இடங்களில் தொய்வடைகிறது. இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகள் சற்று இழுவையாகத் தோன்றுகிறது.

    இசை

    படத்தின் பாடல்கள் மெலடி ரகமாக அமைந்துள்ளன. காதலைச் சொல்லும் காட்சிகளுக்குப் பின்னணி இசை கூடுதல் பலம்.

    ஒளிப்பதிவு

    காதலின் ஆழத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஒளிப்பதிவு அமைந்துள்ளது.

    ரேட்டிங்- 2.5/5

    • விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஷாகித் கபூர் மற்றும் திருப்திடிம்ரி நடித்துள்ளனர்.
    • தமன்னா 1 பாடலுக்கு நடனமாட ரூ.6 கோடி சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது.

    திரை உலகை பொருத்தவரை படம் எடுப்பதற்கு ஆகும் செலவை விட ஹீரோ, ஹீரோயின்களின் சம்பளம் அதிகம். படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கு கூட கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி வெளியாகும் 'ஓ ரோமியோ' என்ற இந்திப்படத்தில் நடிகர் விக்ராந்த் மாஸ்சியும், தமன்னாவும் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்துள்ளனர்.

    விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஷாகித் கபூர் மற்றும் திருப்திடிம்ரி நடித்துள்ளனர். மேலும் விக்ராந்த் மாஸ்ஸி, திஷாபதானி, தமன்னா மற்றும் நானே படேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் நடித்துள்ள விக்ராந்த் மாஸ்சியும், தமன்னாவும் இயக்குநர் விஷால் பரத்வாஜிற்காக சம்பளம் வாங்காமல் நடித்துள்ளனர்.

    தமன்னா சுமார் 12 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்றது மட்டுமின்றி முன்னதாக ஒத்திகைகளிலும் பங்கேற்றார். சமீபகாலமாக தமன்னா 1 பாடலுக்கு நடனமாட ரூ.6 கோடி சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் ஆண்டனியும் இதில் நடித்துள்ளார்.
    • இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை மறுநாள் வெளியாக உள்ளது.

    விஜய் ஆண்டனி தற்போது ‛பூக்கி' என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் விஜய் ஆண்டனியின் அக்கா மகனும், சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா ‛பூக்கி' படத்தை இயக்கியுள்ளார்.

    இந்தப் படத்தில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜன், சுனில், இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியும் இதில் நடித்துள்ளார்.

    2K தலைமுறை காதலர்களின் ரிலேஷன்ஷிப் பிரச்சனைகளை மையமாக வைத்து கலக்கலான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையில், இப்படம் உருவாகி உள்ளது. விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இதனிடையே, 'பூக்கி' படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஜீ தமிழ் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஜீ5 நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்து உள்ளது.

    இந்த நிலையில், 'பூக்கி' படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகிறது. 2.21 நிமிடங்கள் டிரெய்லர் வீடியோ நடிகர் சிம்புவின் குரலுடன் தொடங்குகிறது. வீடியோவில் ஒரு ஜோடி காதலில் விழுந்து, பின்பு அவர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து அதன்பின் நடக்கும் சம்பவங்களை பொழுது போக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 



    ×