ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை தயாரிக்கும் இன்பநிதி?

படத்திற்காக சென்னையில் கார் மெக்கானிக் செட் மற்றும் ஓட்டல் என 2 பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினி -  கமல் இணைந்து நடிக்கும் படத்தை தயாரிக்கும் இன்பநிதி?
Published on

கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். இந்நிலையில் ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்து வெளியாகி வரும் தகவல் ரஜினி, கமல் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது.

இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இதற்கிடையே ரஜினி-கமல் இணைந்து நடிக்க இருக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் படத்தின் முதன்மை தயாரிப்பாளராக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி மற்றும் ஐஸ்வர்யா ரஜினி, சுருதிஹாசன் ஆகியோர் இணை தயாரிப்பிலும் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

படத்திற்காக சென்னையில் கார் மெக்கானிக் செட் மற்றும் ஓட்டல் என 2 பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி தற்போது ஜெயிலர்-2 டப்பிங் பணிகளில் இருக்கிறார். இந்த பணிகள் முடிவடைந்ததும் மார்ச் மாதத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினியின் 173-வது படப்பிடிப்பு தொடங்குகிறது.

இதற்கு முன்னதாக ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தின் புரோமோவில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் 15 நாட்கள் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு முன்னதாக படத்தின் புரோமோ பணிகளை முடிப்பதற்கு படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com