என் மலர்
சினிமா செய்திகள்
- பிரபல படத்தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- ரூ.20 கோடி இழப்பை ஈடுகட்ட வேண்டும்.
இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருபவர் நடிகர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி திரைத்துறையில் பல பணிகளில் தீவிரமாக இயங்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான இந்தி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், நடிகர் தனுஷுக்கு எதிராக பிரபல படத்தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திரைப்பட ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் நடிகர் தனுஷ் முடிவு எடுக்காததால், தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக அவர் இழப்பை ஈடுகட்ட வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் கோரியுள்ளது.
"பிற படங்களுக்கு கால்ஷீட் கொடுத்ததால் 'ருத்ரன்' திரைப்படம் பாதியிலேயே முடங்கியுள்ளது. கால்ஷீட் தருவது தொடர்பான முடிவை, நடிகர் தனுஷ் விரைவில் தெரிவிக்க வேண்டும், இல்லாவிட்டால் ரூ.20 கோடி இழப்பை ஈடுகட்ட வேண்டும்," என்று தேனாண்டாள் பிலிம்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாயகன் சசிகுமார் தனது மனைவியுடன் கோவில்பட்டியில் வாழ்ந்து வருகிறார். மத்திய மந்திரியாக இருக்கும் ஆஷா சரத் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து அவருக்கு உடனடியாக மாற்று சிறுநீரக சிகிச்சை தேவைப்படுகிறது. அவருடைய ரத்தவகை மிகவும் அரிய வகை என்பதால் நீண்ட தேடலுக்கு பிறகு சிறுநீரக தானத்திற்கு 2 பேரை தேர்வு செய்கிறார்கள். அதில் ஒருவர் சசிகுமார்.
ஆஷா சரத்தின் உடல்நிலை வெளியுலகிற்கு தெரியாமல் இருக்க வேண்டும் என அறுவை சிகிச்சையை ரகசியமாக நடத்த திட்டமிட்டு சசிகுமாரை அழைத்து வர முயற்சியில் ஆஷா சரத் குழு முயற்சி செய்கிறது. அதே சமயம் கோவில்பட்டியில் பல பிரச்சனைகளுடன் போராடி வரும் சசிகுமார் சிறுநீரகம் கொடுக்க மறுப்பு தெரிவிக்கிறார்.
இறுதியில் சசிகுமார் சிறுநீரகம் கொடுத்தாரா? சசிகுமாருக்கு இருக்கும் பிரச்சனை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சசிகுமார் அறிமுக காட்சியிலேயே கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் பிணவறையில் இருந்து உயிருடன் வெளியே வந்து நடனம் ஆடும் காட்சி சிறப்பு.
மனைவி சைத்ராவுடன் பாசம், அரசாங்கம் மீது கோபம், மற்றவர்கள் மீது இருக்கும் மனிதநேயம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். மனைவியாக வரும் சைத்ரா, பீடி பிடிப்பது, சாமியாடுவது சசிகுமாருடன் மருத்துவமனைக்கு அலைவது என நடிப்பில் கவனிக்க வைத்து இருக்கிறார்.
ஆஷா சரத்தின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். இறக்க போகிறோம் என்ற பயத்தையும், அரசியல்வாதி என்ற திமிரையும், அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். பத்திரிகையாளராக குரு சோமசுந்தரம், நீதிபதியாக ஜெயபிரகாஷ், வழக்கறிஞராக கோபி நயினார் ஆகியோர் நடிப்பு கூடுதல் பலம்.
இயக்கம்
ஆட்சியும் அதிகாரமும் இருந்தால் எதுவென்றாலும் செய்ய முடியும். சாதாரண மனிதனின் வாழ்க்கையை எப்படி வேண்டும் என்றாலும் மாற்ற முடியும் என்பதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜு முருகன்.
சாதாரண மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி, செல்வந்தர்கள் மற்றும் அரசியல்வாதிகள் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். சாதாரண மனிதனின் வாழ்க்கை, அரசியல் அதிகாரம் இரண்டையும் இணைத்து திரைக்கதையை அமைத்து இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். முதல்பாதியில் மெதுவாக செல்லும் திரைக்கதை பலவீனம்.
இசை
ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையை ரசிக்கும் படி கொடுத்து இருக்கிறார்.
ஒளிப்பதிவு
நீரவ்ஷா ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.
ரேட்டிங்-3/5
- இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
- இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்- All the songs in Ilayaraja's music are worth listening to.
வனவிலங்கு புகைப்படக் கலைஞரான நாயகன் ஸ்ரீராம் கார்த்தி, பறவை ஒன்றை புகைப்படம் எடுப்பதற்காக ஊட்டிக்கு வருகிறார். அங்கு பறவைகள் பூங்கா ஒன்றை நடத்தி வரும் நாயகி கிரிஷா குரூப் உடனான நட்பு கிடைக்கிறது.
நட்பு காதலாக மாறுகிறது. தன் காதலை கிரிஷா குரூப்பிடம் சொல்ல நினைக்கும் போது, கிரிஷா குரூப் தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியாது என்றும், காதலனுடன் சேர்த்து வைக்குமாறு ஸ்ரீராம் கார்த்திக்கிடம் கேட்கிறார்.
வருத்தம் அடையும் ஶ்ரீராம் கார்த்திக், கிரிஷா குரூப்பின் காதலை சேர்த்து வைப்பதாக சொல்லி ஏமாற்றுகிறார். ஒரு கட்டத்தில் அந்த காதலன் ஊட்டி வருகிறார். இறுதியில் கிரிஷா குரூப் காதலன் யார்? கிரிஷா குரூப் காதலை ஶ்ரீராம் கார்த்திக் சேர்த்து வைத்தாரா? ஶ்ரீராம் கார்த்திக் தன் காதலை கிரிஷா குரூப்பிடம் சொன்னாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக், இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்து நடித்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் கிரிஷா குரூப், வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். கிரிஷா குரூப்பின் ஒருதலை காதலனாக வருபவர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்.
முனிஷ்காந்த், சிங்கம்புலி இருவரும் அங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.
இயக்கம்
காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் அஜயன் பாலா. காதல் காட்சிகள், வசனங்கள் உணர்வு பூர்வமாக இல்லாதது வருத்தம். காதலித்த பெண்ணின் காதலை சேர்த்து வைக்க முயற்சிக்கும் நாயகனின் காதல் கதையை ஏற்கனவே பல படங்களில் பார்த்து இருந்தாலும் இதில் கொஞ்சம் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார்.
இசை
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை சிறப்பு.
ஒளிப்பதிவு
செழியனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். ஊட்டி மலையின் பசுமையை அழகாக காண்பித்து இருக்கிறார்.
ரேட்டிங்-2/5
- திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது.
- அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் சசிகுமார். கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான "டூரிஸ்ட் ஃபேமிலி" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாக மாறியது.
இந்த வரிசையில், நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் "மை லார்ட்" திரைப்படம் இன்று (பிப். 13) வெளியானது. இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சைத்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது.
மை லார்ட் வெளியீட்டை ஒட்டி நடிகர் சசிகுமார், சைத்ரா ஆகியோர் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
- படம் உருவாக அனைத்தும் சரியாக அமைய வேண்டும்.
- மென்டல் மனதில் திரைப்படம் இந்த ஆண்டே திரைக்கு வரும்.
இந்திய திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். நடிப்பு மட்டுமின்றி சமீபத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குநர் செல்வராகவன் மென்டல் மனதில் மற்றும் 7ஜி ரெயின்போ காலணி 2 படங்களை இயக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், இயக்குநர் செல்வராகவன் அளித்த சமீபத்திய பேட்டியில் தான் இயக்கும் புதிய படங்கள் பற்றி பேசியுள்ளார். அப்போது அவர், "புதுப்பேட்டை 2 திரைப்படம் நிச்சயம் உருவாகும். ஆனால், ஆயிரத்தில் ஒருவன் 2 உருவாவது என் கையில் இல்லை. இந்தப் படம் உருவாக அனைத்தும் சரியாக அமைய வேண்டும். தற்போது வி.எஃப்.எக்ஸ். தொழில்நுட்பம் முன்னேறி இருப்பதால், அது எளிமையானது தான்."
"7ஜி ரெயின்போ காலனி 2 மற்றும் மென்டல் மனதில் திரைப்படங்கள் இந்த ஆண்டே திரைக்கு வரும். இதுதவிர புதிதாக கதை ஒன்றை எழுதி வருகிறேன்," என்றார்.
நாளை (பிப்ரவரி 14) காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு காதல் படங்கள் ரிலீஸ் மற்றும் ரீ ரிலீஸ் ஆகியுள்ளன.
அந்த வரிசையில் நடிகர் டி. ராஜேந்தர் இயக்கி நாயகனாக நடித்த "உயிருள்ளவரை உஷா" திரைப்படம் 43 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரீரிலீஸ் ஆகி உள்ளது.
கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்திற்கு, டி. ராஜேந்தரே இசையமைத்திருந்தார்.
அதுபோல கவுதம் மேனன் இயக்கிய மாதவனின் மின்னலே, அமீர் இயக்கிய சூர்யாவின் மௌனம் பேசியதே படங்களும் காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகி உள்ளன.
நாளை (பிப்ரவரி 14) தமிழ் சினிமாவின் கிளாசிக் காதல் படமான காதலர் தினம் படமும் ரீ ரிலீஸ் ஆகிறது.
அதேபோல அஜித்தின் வீரம், சிம்புவின் சிலம்பாட்டம் படங்களும் ரீ ரிலீஸில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன.
புதிய வெளியீடாக வித் லவ் படம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. மேலும் மயிலாஞ்சி, விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் பூக்கி ஆகிய காதல் படங்களும் இன்று ரிலீஸ் ஆகி உள்ளன.
- வித் லவ் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், 'வித் லவ். இந்த படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடினார்கள்.
இதில் தயாரிப்பாளர் சவுந்தர்யா ரஜினிகாந்த் பேசும்போது, 'வித் லவ்' படத்துக்கு ரசிகர்கள் தரப்பில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அந்த சந்தோஷத்துடன் படக்குழுவை அழைத்துக்கொண்டு என் அப்பாவை (ரஜினிகாந்த்) பார்க்க சென்றேன். என் அப்பா என்னை கட்டிப் பிடித்து, என்னை பார்த்து ஒருமாதிரியாக சிரித்தார். அப்போது நான் கேட்டேன். 'அப்பா இது தான் வெற்றியா?" என்று...
அப்பாவின் அந்த சிரிப்பை என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. 18 ஆண்டு திரைப்பயணத்தில் நான் அடைந்த முதல் வெற்றி இது. 'வித் லவ்' படக்குழுவால் தான் அது அமைந்தது. அனஸ்வரா ராஜனை பார்த்து, 'இத்தனை நாள் எங்கங்க இருந்தீங்க...' என்று அப்பா ஆச்சரியத்துடன் கேட்டார். அபிஷனையும் பாராட்டி தீர்த்துவிட்டார். இந்த குழு மீண்டும் இணைந்தாலும் நான் ரெடி. ஓகே சொல்லட்டும். பட்டறையை போட்டுடலாம், என்றார்.
- படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
- படம் மார்ச் 26 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நடிகர் நானி மற்றும் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா மீண்டும் இணைந்துள்ள படம் தி பாரடைஸ். 'தசரா' படத்திற்குப் பிறகு நானி-ஸ்ரீகாந்த் ஒடேலா இணையும் இரண்டாவது படம் இது. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். மோகன் பாபு, ராகவ் ஜுயல், சோனாலி குல்கர்னி மற்றும் சம்பூர்ணேஷ் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இப்படத்தை SLV சினிமாஸ் தயாரிக்கிறது.
1980-களில் செகந்திராபாத் பின்னணியில் நடக்கும் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காகப் போராடும் தலைவராக நானி நடித்துள்ளார். இந்தப் படம் மார்ச் 26 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படம் ஆகஸ்ட் 21 அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- நடிகை ஸ்ருதிஹாசனுடன் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருந்தார்
- டிசி படத்தின்மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி, தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக வலம்வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். நடிகை ஸ்ருதிஹாசனுடன் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் டிசி படத்தின்மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இப்படம் முழு ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக ஹிந்தியின் முன்னணி நடிகையான வாமிகா கபி நடிக்கிறார். அனிருத் ரவிச்சந்திரன் படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ பிப்.14ம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
- வித் லவ் திரைப்படம் மூன்று நாட்களில் ரூ. 11 கோடி வசூலித்தது.
- வித் லவ் படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டினார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வித் லவ்'. இந்தப் படத்தின் மூலம் அபிஷன் கதாநாயகனாக அறிமுகமானார். அபிஷன் ஜீவிந்த் முன்னதாக தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "டூரிஸ்ட் ஃபேமிலி" படத்தின் இயக்குநர் ஆவார்.
காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் "வித் லவ்" படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வித் லவ் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.
வித் லவ் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 11 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், வித் லவ் திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், வித் லவ் திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை அனஸ்வரா ராஜன், "வித் லவ் திரைப்படத்தை மிகுந்த அன்புடன் பெற்றதற்கு பார்வையாளர்களுக்கு மிக்க நன்றி. திரையரங்கிற்கு வந்த போது கிடைத்த வரவேற்பை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பார்வையாளர்கள் படத்தை மிகவும் ரசிக்கிறார்கள். தலைவர் ரஜினி காந்தை நாங்கள் சந்தித்தோம், அவரது கருத்து எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது," என்றார்.
- படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
- படக்குழு சார்பில் மற்றொரு அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 4வது திரைப்படமாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், படம் "இதயம் முரளி". இந்தப் படத்தின் டைட்டில், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இந்தப் படத்தில் அதர்வாவுடன் தமன் எஸ், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக இதயம் முரளி உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி, அவரது மகன் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தப் படம் தொடர்பான அறிவிப்புகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படக்குழு சார்பில் மற்றொரு அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இதயம் முரளி திரைப்படத்தில் பிரபல நடிகர் பகத் பாசில் நடித்துள்ளதை படக்குழு தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் அல்லது மே மாத வாக்கில் திரைக்கு வரும் என்று தெரிகிறது.
- என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்த சமூகத்திற்கு நான் நல்லது செய்ய விரும்புகிறேன்.
- என் சொந்த ஊரில் பெண்களுக்கான பள்ளியை கட்ட முடிவு செய்திருக்கிறேன்.
மகா கும்பமேளாவில் வீதி வீதியாக பாசிமணி மாலை விற்றுக் கொண்டிருந்தவர் மோனலிசா. பாசிமணி வாங்கலியோ என கூவி விற்றுக் கொண்டிருந்த மோனலிசாவின் காந்த கண்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி ஒரே நாளில் நாடு முழுவதும் பிரபலமானார். இதை தொடர்ந்து அவருடன் செல்பி எடுக்க ஏராளமான இளைஞர்கள் திரண்டதால் அவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார். இதை தொடர்ந்து மோனலிசா சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். மேலும் கடை திறப்பு விழாக்களிலும் பங்கேற்று அவரது வாழ்க்கை உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.
தற்போது ஒரு இந்தி மற்றும் 2 தெலுங்கு படங்களில் நடித்து வரும் மோனலிசா அளித்துள்ள பேட்டியில், 'கும்பமேளா மூலம் என் வாழ்க்கை நல்லபடியாக மாறி நான் இந்த நிலைக்கு வருவேன் என்று நினைக்கவில்லை. திடீரென்று கிடைத்த புகழ் மூலம் எனக்கு பொறுப்பும் வந்திருக்கிறது. என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்த சமூகத்திற்கு நான் நல்லது செய்ய விரும்புகிறேன். என் சொந்த ஊரில் பெண்களுக்கான பள்ளியை கட்ட முடிவு செய்திருக்கிறேன்.
என் முதல் படத்தின் சம்பளத்தை வைத்து அந்த பள்ளியை கட்டப் போகிறேன். கல்வி மூலம் தான் நல்ல மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன். அதனால் எனக்கு கிடைக்கும் சம்பளத்தை கல்விக்கு செலவு செய்யப்போகிறேன்' என்றார்.
மோனலிசாவின் முடிவு வைரலாகி வரும் நிலையில் திடீரென பணம் கிடைத்ததும் ஆடம்பரத்துக்கு ஆசைப்படாமல் பள்ளிக்கூடம் கட்ட நினைப்பது பெருமைக்குரிய விஷயம் என்று வாழ்த்தியுள்ளனர்.






