என் மலர்
நீங்கள் தேடியது "அஜயன் பாலாவின் மைலாஞ்சி"
- இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
- இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்- All the songs in Ilayaraja's music are worth listening to.
வனவிலங்கு புகைப்படக் கலைஞரான நாயகன் ஸ்ரீராம் கார்த்தி, பறவை ஒன்றை புகைப்படம் எடுப்பதற்காக ஊட்டிக்கு வருகிறார். அங்கு பறவைகள் பூங்கா ஒன்றை நடத்தி வரும் நாயகி கிரிஷா குரூப் உடனான நட்பு கிடைக்கிறது.
நட்பு காதலாக மாறுகிறது. தன் காதலை கிரிஷா குரூப்பிடம் சொல்ல நினைக்கும் போது, கிரிஷா குரூப் தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியாது என்றும், காதலனுடன் சேர்த்து வைக்குமாறு ஸ்ரீராம் கார்த்திக்கிடம் கேட்கிறார்.
வருத்தம் அடையும் ஶ்ரீராம் கார்த்திக், கிரிஷா குரூப்பின் காதலை சேர்த்து வைப்பதாக சொல்லி ஏமாற்றுகிறார். ஒரு கட்டத்தில் அந்த காதலன் ஊட்டி வருகிறார். இறுதியில் கிரிஷா குரூப் காதலன் யார்? கிரிஷா குரூப் காதலை ஶ்ரீராம் கார்த்திக் சேர்த்து வைத்தாரா? ஶ்ரீராம் கார்த்திக் தன் காதலை கிரிஷா குரூப்பிடம் சொன்னாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக், இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்து நடித்து இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் கிரிஷா குரூப், வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர முயற்சி செய்திருக்கிறார். கிரிஷா குரூப்பின் ஒருதலை காதலனாக வருபவர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்.
முனிஷ்காந்த், சிங்கம்புலி இருவரும் அங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்கள். மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது.
இயக்கம்
காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் அஜயன் பாலா. காதல் காட்சிகள், வசனங்கள் உணர்வு பூர்வமாக இல்லாதது வருத்தம். காதலித்த பெண்ணின் காதலை சேர்த்து வைக்க முயற்சிக்கும் நாயகனின் காதல் கதையை ஏற்கனவே பல படங்களில் பார்த்து இருந்தாலும் இதில் கொஞ்சம் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார்.
இசை
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை சிறப்பு.
ஒளிப்பதிவு
செழியனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். ஊட்டி மலையின் பசுமையை அழகாக காண்பித்து இருக்கிறார்.
ரேட்டிங்-2/5
- அஜயன் பாலா 'ஆறு அத்தியாயம்' திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ளார்.
- திரைப்படத் தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது மிகவும் அவசியம்.
திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா 2017-ம் ஆண்டு வெளிவந்த 'ஆறு அத்தியாயம்' திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ளார். தற்போது ' மைலாஞ்சி' திரைப்படத்தின் மூலம் முழு நீள திரைப்படம் ஒன்றை முதல் முறையாக எழுதி இயக்கியுள்ளார்.
அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் 'கன்னிமாடம்' படத்தில் நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். 'கோலிசோடா 2' புகழ் கிரிஷா குருப் நாயகியாக நடித்துள்ளார். முனீஷ்காந்த், தங்கதுரை, சிங்கம்பிலி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு செழியன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் தலைப்பான 'மைலாஞ்சி', தற்போது 'அஜயன் பாலாவின் மைலாஞ்சி' என்று மாற்றப்பட்டுள்ளது.

இப்படத்தின் தலைப்பு மாற்றம் குறித்து பேசிய அஜயன் பாலா, "திரைப்படத் தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது மிகவும் அவசியம். இந்த நடைமுறையில் உள்ள சில சிக்கல்களில் காரணமாகவே பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்திருந்தும் இதே தலைப்பில் வேறு ஒரு படம் திரைக்கு வந்த காரணத்தால் எங்கள் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது," என்றார்.
மேலும் பேசிய அவர், "பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை நாம் உணரத் தொடங்கியுள்ள இந்த காலகட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் அவசியம். இக்கருத்தை வலியுறுத்தும் காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. செழியனின் ஒளிப்பதிவு மிகவும் பேசப்படும்" என்று கூறினார்.
காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் 'அஜயன் பாலாவின் மைலாஞ்சி' திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தகக்து.






