என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயிரத்தில் ஒருவன்"

    • 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’.
    • இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது.

    12-ம் நூற்றாண்டின் சோழ பின்னணியைக் கொண்டு தமிழில் எடுக்கப்பட்ட படம் ஆயிரத்தில் ஒருவன். கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடித்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கினார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். 2010-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான முயற்சியாக அப்போது பார்க்கப்பட்டது.


    தமிழில் ஒரு புதிய கதைக் களத்தைப் படைத்த செல்வராகவன் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்தன. இப்படி பல பாராட்டுகளை இப்படம் பெற்றாலும் அப்போது வசூல் ரீதியாக சற்று சரிவை சந்தித்ததாக கூறப்பட்டது. பின்னர், பல வருடங்களுக்கு பிறகு ரசிகர்கள் பலரும் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை பாராட்டி பதிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதில், தனுஷ் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை 2024-ம் ஆண்டு வெளியிடப்போவதாகவும் தகவல் வெளியானது.


    இந்நிலையில், ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். என்ன சொல்லனும் என்று தெரியல ரொம்ப கஷ்டமா இருக்கு. மன்னிப்பு மட்டும் தான் கேட்க முடியும்" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு நடிகர் பார்த்திபன், "அதற்கு பதில் … பெரும் முயற்சியுடன் வரும் சிறு படங்களை முதல் நாள் பார்த்து ஆதரியுங்களேன்" என்று பதிலளித்துள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் செல்வராகவன் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவரின் 'புதுப்பேட்டை 2' படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புதுப்பேட்டை'. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும், சோனியா அகர்வால், சினேகா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


    இந்நிலையில், இந்த எதிர்பார்ப்புகளுக்கு தீணி போடும் வகையில் இயக்குனர் செல்வராகவன் பதிவு அமைந்துள்ளது. அதாவது இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில், "புதுப்பேட்டை 2 இந்த வருடம் தொடங்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டுள்ளார். இதற்கு கொக்கி குமார் மீண்டும் வரார் என ரசிகர்கள் மகிழ்ச்சியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


    இயக்குனர் செல்வராகவன் 'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'ஆயிரத்தில் ஒருவன்', 'என்.ஜி.கே.' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.


    • வழக்கத்திற்கு மாறான கதைசொல்லல் மற்றும் காட்சி அமைப்புகளுக்காக இன்னும் பலரின் பாராட்டுக்களை பெற்றது.
    • ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எப்போது வெளியிட போகிறீர்கள் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பட்டு வருகிறது.

    கடந்த 2010-ம் ஆண்டு வெளிவந்த படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா ஜெர்மியா, ரீமாசென், பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    'ஆயிரத்தில் ஒருவன்' படம், நிகழ்காலத்தை வரலாற்றுப் புனைகதைகளை புகுத்தி கற்பனைக் கூறுகளுடன் அமைந்திருந்தது. இது வழக்கத்திற்கு மாறான கதைசொல்லல் மற்றும் காட்சி அமைப்புகளுக்காக இன்னும் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

    இந்த நிலையில், இந்தியன்-2, பாகுபலி-2, பொன்னியின் செல்வன்-2, அரண்மனை-4, சிங்கம்-3 போன்ற படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எப்போது வெளியிட போகிறீர்கள் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பட்டு வருகிறது.

    இதனிடையே, 'பகாசுரன்' படத்தை இயக்கிய மோகன் ஜி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கண்ட கண்ட கதையை எல்லாம் படமாக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளியிடுங்கள்.. இன்னும் இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு புரியாமல் நீங்க எல்லாம் என்ன தயாரிப்பு நிறுவனமோ.. என கூறியுள்ளார்.

    சில மாதங்களுக்கு முன் 'ஆயிரத்தில் ஒருவன்-2' வெளியாகும் என்ற அறிவிப்பு மட்டுமே உள்ள நிலையில் மேற்படி தகவல்கள் எதுவும் வெளியாகாததால் பலரும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்டேட் கேட்டு வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் படம் நானே வருவேன்.
    • சமீபத்தில் செல்வராகவன் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணிக் காயிதம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் செல்வராகவன். 'துள்ளுவதோ இளமை', 'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை', 'ஆயிரத்தில் ஒருவன்', 'என்.ஜி.கே.' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் 'நானே வருவேன்' படத்தை இயக்கி வருகிறார். இப்பொழுது இவர் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    புதுப்பேட்டை - ஆயிரத்தில் ஒருவன்

    புதுப்பேட்டை - ஆயிரத்தில் ஒருவன்

    இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்ற புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய 2 திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் செல்வராகவன் புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் விரைவில் தொடங்கப்படும் என்றும் முதலில் புதுப்பேட்டை 2 திரைப்படம் தொடங்கப்படும், அதன்பின் ஆயிரத்தில் ஒருவன் 2 தயாராகும் என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளதாக பதிவிட்டு வருகின்றனர்.

    ×