என் மலர்
சினிமா செய்திகள்
- கென் கருணாஸ் இயக்கி வந்த யூத் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
- அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகிய 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் 'அம்பாசமுத்திரம் அம்பானி', 'நெடுஞ்சாலை' படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து 'அசுரன்', 'விடுதலை-2' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதற்கிடையே, நடிகர் தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.
தொடர்ந்து, கென் கருணாஸ் இயக்கி வந்த முதல் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
கென் கருணாஸ் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படத்தை பார்வதா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு யூத் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சிறை படம் மூலம் பாராட்டுகளை அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் கதநாயகைகளாகவும், சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அண்மையில், இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'யூத்' திரைப்படம் மார்ச் 19ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
- இப்படத்தில் பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்
நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமான இவரது நடிப்பில் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவை.
தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து உள்ளார். விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்துள்ளார்.
இதனிடையே, மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதன்பின் சினிமாவில் பெரிய அளவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில், நடிகை வரலட்சுமி, தன் சகோதரி பூஜாவுடன் இணைந்து 'தோசா டைரீஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
இந்நிறுவனத்தின் முதற்படமான 'சரஸ்வதி' மூலம் இயக்குநராகவும் வரலட்சுமி அறிமுகமாகிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்பட பலர் நடிக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது.
இந்நிலையில், 'சரஸ்வதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
- கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
- ரஜினி-கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர்.
கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார்.
இதையடுத்து ரஜினி-கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
- நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
- இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்று இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்
பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி புகைப்படங்கள் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என்று இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சுரேகா வாணிக்கு தற்போது 48 வயதாகிறது
- சுரேகா வாணி கணவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டார்.
பிரபல குணசித்திர நடிகை சுரேகா வாணி. இவர் தமிழில் உத்தமபுத்திரன், தெய்வத்திருமகள், ஜில்லா, பிரம்மா, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம், மாஸ்டர் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
சுரேகா வாணி கணவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். தற்போது 48 வயதாகும் சுரேகா வாணி இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவரது மகள் சுப்ரிதா தெரிவித்துள்ளார்.
தன் அம்மாவுக்கு மறுமணம் செய்துவைக்க விரும்புவது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய சுரேகா வாணியின் மகள் சுப்ரிதா, "என்னுடைய திருமணம் நடக்கும் முன்னர், என் அம்மாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். என் சொந்தக்காரர்களிடம் கூட இதை பற்றி பேசிவிட்டேன்; அவர்களுக்கும் இதில் சம்மதமே.
அம்மாவை மிக அன்பாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவரின் விருப்பங்களை மதிக்க வேண்டும். அப்படியான ஒருவர்தான் அம்மாவுக்கு சரியாக இருப்பார். ஆனால், இது என்னுடைய முடிவு மட்டுமில்லையே, அவருடைய விருப்பமும் மகிழ்ச்சியும் தான் பிரதானம். என் அப்பா இடத்தை வேறு யாருக்கும் தரக் கூடாது என அவர் நினைக்கிறார்; அதை நானும் மதிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
- மை லார்ட் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது.
- மை லார்ட் படத்தில் சைத்ரா கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் சசிகுமார். கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான "டூரிஸ்ட் ஃபேமிலி" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாக மாறியது.
இந்த வரிசையில், நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் "மை லார்ட்" திரைப்படம் நேற்று (பிப். 13) வெளியானது. இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சைத்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், 'MY LORD' படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதை ஒட்டி அப்படத்தின் விநியோகஸ்தரான நடிகர் சூர்யா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
- டிசி படம் முழு ஆக்ஷன் படமாக உருவாக உள்ளது.
- டிசி படத்தில் சஞ்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி, தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக வலம்வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். நடிகை ஸ்ருதிஹாசனுடன் ஆல்பம் பாடல் ஒன்றில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து தற்போது இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் டிசி படத்தின்மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இப்படம் முழு ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக முன்னணி பாலிவுட் நடிகையான வாமிகா கபி நடிக்கிறார். அனிருத் ரவிச்சந்திரன் படத்திற்கு இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் லோகேஷ் கனகராஜ், வமிகா கேபி, சஞ்சனா உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்ததுள்ளது.
- பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் `BANG BANG' என்ற படம் தயாராகி வருகிறது.
- காதலர் தினத்தை முன்னிட்டு பிரபு தேவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர்கள் பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில்`BANG BANG' என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை சாம் ரோட்ரிகஸ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
காதலன், மனதை திருடிவிட்டாய், ராசைய்யா, மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் மற்றும் எங்கள் அண்ணா போன்ற படங்களின் மூலம் 90ஸ்களில் ரசிகர்களை மகிழ்வித்த இந்த காமெடி கெமிஸ்ட்ரி கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு பிரபு தேவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பிரபு தேவா மற்றும் வடிவேலு ஆகியோர் "நான் பார்த்த பெண்ணை.. நீ பார்க்கவில்லை.." என்று பாடல் பாடி வைப் செய்துள்ளனர்.
நாயகன் த்ரிகுண் மற்றும் நாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷ் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். நட்பாக தொடங்கும் உறவு, வழக்கமான காதல் பாதையில் நகர்கிறது. காதல் வலுப்பெறும் நிலையில், நாயகன் தனது கடந்தகால அனுபவங்களை வெளிப்படையாக நாயகி ஸ்ரீ ஜீத்தாவிடம் பகிர்கிறார்.
அதனைத் தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்குப் பிறகு, கோத்தகிரியில் அமைந்துள்ள நாயகியின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு நாயகனுக்கு புதிய பிரச்சனை ஏற்படுகிறது.
இறுதியில் த்ரிகுண், ஶ்ரீ ஜீத்தா திருமண வாழ்க்கை எப்படி சென்றது? த்ரிகுண்-க்கு வந்த பிரச்சனை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் த்ரிகுண் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான உடல்மொழி மற்றும் வசனப் பேச்சில் இயல்பை காட்டுகிறார். பெண்களிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தை படும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார். நாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷ் கவர்ச்சி மற்றும் உணர்ச்சி இரண்டையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
கவர்ச்சியில் தாராளம் காண்பித்து இருக்கிறார் இனியா. சுந்தரா டிராவல்ஸ் ராதா இரட்டை அர்த்த வசனங்கள் பேசி கவனிக்க வைத்து இருக்கிறார். தம்பி ராமையா, சத்யன் ஆகியோரின் காமெடி காட்சிகள் படத்திற்கு பெரிய பலம்.
இயக்கம்
அடல்ட் காமெடி மற்றும் கவர்ச்சியை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் ராஜசேகர்.ஜி. படத்தின் ஜானரை தெளிவாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கதையின் மையக்கரு பல இடங்களில் அதிர்ச்சி தரும் வகையில் இருந்தாலும், அதை லேசான அணுகுமுறையில் சொல்ல முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் நேரடி வசனங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இது எல்லா தரப்பினருக்கும் பொருந்தாது.
ஒளிப்பதிவு
விஜய்யின் ஒளிப்பதிவில் மூன்று நாயகிகளையும் அழகாக காண்பித்து இருக்கிறார்.
இசை
அருணகிரியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
ரேட்டிங்-2.5/5
- உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.
- கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
காதல் எனும் உயிர்ப்பண்பு
ஆண் பெண்
மாமிசத்தோடு மட்டும்
சம்பந்தப்பட்டதில்லை
எல்லா நிலைகளிலும்
எல்லா வயதினிலும்
அது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது
'பெருந்தேன் இழைக்கும்
நாடனொடு நட்பே' என்று
சங்கத் தலைவி பாடுமிடத்து
உடற்புணர்ச்சி காதலாகிறது
'காதலாகிக் கசிந்து
கண்ணீர் மல்கி'
என்று பாடும்பொழுது
கடவுள் பக்தி காதலாகிறது
'காதல் திருமகன்' என்று
தசரதன் தளும்புகிறபோது
பாசம் காதலாகிறது
உதடுகளை மாற்றி மாற்றி
முத்தங்கள் பயணப்படுவதுபோல்
இதயங்களை மாற்றி மாற்றிக்
காதல் பயணப்படுகிறது
மனிதர் உள்ளவரை மட்டுமல்ல
இடம் பெயரும்
உயிர்கள் உள்ளவரை
காதல் இருக்கும்
உடலோடு தொடங்கி
உடல் தாண்டி
உயிரில் ஐக்கியமாகிறபொழுது
காதல் தன் புனிதயாத்திரையில்
பூரணம் பெறுகிறது
எல்லாக் காதலுக்கும்
இது நேர்வதில்லை
இன்று விற்பனையாகும்
250 மில்லியன் ரோஜாக்களும்
குழல் சேர்வதில்லை.
ஆனாலும் ரோஜாக்கள்
பூக்கவே பூக்கும்;
ஆனாலும் காதல்
மலரவே மலரும்
காதலைத் தடுக்க
நாம் யார்?
தானாய்த் தோன்றித்
தானாய் மறையும்
சந்திர சூரியர்
போன்றது காதல்
வாழ்க காதலே;
பூமியை வாழவை..!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு சிறந்த நடிகர் விருதை பெற்றனர்.
- விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு சிறந்த நடிகர் விருதை பெற்றனர்.
2016 முதல் 2022 வரையிலான திரைப்பட விருதுகளும், 2014 முதல் 2022 வரையிலான சின்னத்திரை விருதுகளும், 2015-16 முதல் 2021-22 வரையிலான மாணவர் விருதுகளும் தேர்வு செய்யப்பட்டு அரசாணை சமீபத்தில் வெளியானது. இந்த விருதுகள், சமூக சிந்தனைகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள், மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் சின்னத்திரை தொடர்கள் மற்றும் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர்.பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றனர்.
கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய்பல்லவி ஆகியோர் சிறந்த நடிக்கைக்கான விருதை பெற்றனர்.
மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் சிறந்த படங்களுக்கான விருதை பெற்றன.
சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.75 ஆயிரம், சிறப்புப் பரிசாக ரூ.75 ஆயிரம், பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படத்திற்கு ரூ.1.25 லட்சம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப்பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
படத்தின் நாயகன் அஜயும்- நாயகி தனுஷாவும் சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இருவரும் திருமணத்திற்கு தயாராகும்போது இருவருக்கும் சண்டை வருகிறது.
இந்த சண்டை எல்லை மீறி போக ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள, அதை வீடியோ எடுத்து சிலர் நெட்டில் தட்டிவிட பிறகு என்ன இவர்கள் வைரக் ஆகின்றனர். இருவரும் பிரேக் அப் செய்து விடுகின்றனர்,
ஆனால், பிரேக் அப்பில் இருந்து அஜய், தனுஷா இருவருமே வெளிவர முடியாமல் தவிக்கின்றனர். இருவரும் தங்களின் நினைவுகளை மறக்க சாப்பாடு, பைக் ட்ரிப், ஷாப்பிங், ஆன்மிகம், ஜிம் என பல விஷயங்களில் கவனத்தை செலுத்துகின்றனர்,
இருவருக்கும் இன்னொரு காதலும் மலர்கிறது. ஆனால், பழைய காதலின் நினைவுகள் அவர்களை எதிலும் ஈடுப்படவிடாமல் தடுக்கிறது. ஒரு கட்டத்தில் இருவம் திருமணமே இதற்கு பதில் என வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர்.
இறுதியில், அஜயும்- தனுஷாவும் இணைந்தார்களா? அல்லது வேறு ஒருவரை திருமணம் செய்தார்களா? என்பது படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
துறுதுறு இளைஞராக வரும் அஜய், முதுமுகமாக இருந்தாலும் நன்றாகவே நடித்திருக்கிறார். காதலிகளிடம் சிக்கித்தவிக்கும்போதும், முடிவெடுக்க முடியாமல் திணறும்போதும் அவரது இன்னொசன்ஸ் நடிப்பு வெளிப்படுகிறது. ஹீரோயினாக நடித்து இருக்கும் தனுஷா கதைக்கு பலம். அழகு.
ஷியாரா காதல் சீன்களில் விறுவிறுப்பாக நடித்துள்ளார்.
இயக்கம்
இன்றைய இளம் தலைமுறையினர் மனநிலை, அவர்கள் காதலையும், வாழ்க்கையையும் பார்க்கும் விதத்தை படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கணேஷ் சந்திரா.
கதையும், படத்தில் இடம்பெற்றுள்ள காதல் காட்சிகளிலும் புதிதாக ஒன்றுமில்லை. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இசை
விஜய் ஆண்டனியின் இசை படத்திற்கு பலம் சேர்க்கவில்லை.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளரான கணேஷ் சந்திரா, இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்து இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
ரேட்டிங்: 1.5/5






