என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இசையமைப்பாளர் சுந்தர மூர்த்தியை ரோஷினி ஹரிப்ரியன் கரம்பிடித்துள்ளார்.
    • இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் எளிமையாக நடந்தது.

    பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியனுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.

    இசையமைப்பாளர் சுந்தர மூர்த்தியை ரோஷினி ஹரிப்ரியன் கரம்பிடித்துள்ளார். இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் எளிமையாக நடந்தது.

    சுந்தர மூர்த்தி, 'பொம்மை நாயகி', ஐரா, தண்டட்டி, டென் ஹவர்ஸ் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    சீரியலில் இருந்து சினிமாவுக்கும் முயற்சி செய்து வரும் ரோஷினி கருடன், தலைவன் தலைவி, மெட்ராஸ் மேட்னி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சாலமன் போவாஸ் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
    • சாலமன் போவாஸ் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்- Solomon Boaz's cinematography is a strength of the film.

    திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு வாழும் நாயகன் ஜீவா, பின்னணி பாடகியாக உயர வேண்டும் என்ற இலக்குடன் இருக்கும் நாயகி ஹரிஷ்மிதா – இருவரின் சந்திப்பும் காதலாக மாறுகிறது. வாழ்க்கையை இலகுவாக அனுபவித்து வரும் இந்த காதல் ஜோடியின் உறவில், ஒரு கனவு இடையூறாக வருகிறது. அந்த கனவு, அவர்களின் மனநிலையிலும் உறவிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

    இறுதியில் கனவு என்ன? அவர்கள் வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ஜீவா, நாயகியாக நடித்திருக்கும் ஹரிஷ்மிதா இருவரும் புதிய முகங்கள் என்றாலும், கதையின் முழுப் பளுவையும் ஏந்தும் வகையில் நம்பகமான நடிப்பை வழங்கியுள்ளனர். இயல்பான வெளிப்பாடு மற்றும் அளவான உணர்ச்சி காட்சிகள் இவர்களின் பலமாக அமைகிறது. பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா உள்ளிட்ட துணை கதாபாத்திரங்கள், திரைக்கதையின் ஓட்டத்தை பாதிக்காமல் தேவையான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    கனவு மற்றும் காதல் இடையிலான உளவியல் மோதலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் எம்.ஆர்.பாரதி. அழுத்தமான காதல் அனுபவத்தை வழங்க முயற்சி செய்து இருக்கிறார். சில இடங்களில் நவீன காட்சியமைப்பில் சற்றுக் குறைபாடு தெரிந்தாலும், மொத்தத்தில் படம் ஒரு மென்மையான காதல் முயற்சியாக நினைவில் நிற்கிறது. முக்கோணக் காதல் கதைகள் தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. ஆனால், இந்த படத்தில் "கனவு" ஒரு மையக் கருத்தாகவும், மோதலை உருவாக்கும் அம்சமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இசை

    இளமாறன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை கதையோடு பயணித்து இருக்கிறது.

    ஒளிப்பதிவு

    சாலமன் போவாஸ் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    ரேட்டிங்- 2/5

    ஹேப்பி ராஜ் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

    இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்-ன் அடுத்த படத்தை அறிமுக இயக்குனரான மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். அவர் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

    இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். மேலும், இந்த படத்தின் மூலம் 11 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு அப்பாஸ் கம்பேக் கொடுக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

    மேலும், இப்படத்தை பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    இந்த படத்திற்கு ஹேப்பி ராஜ் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    ஹேப்பி ராஜ் படத்தின் First Look போஸ்டர் வெளியான நிலையில் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், ஹேப்பி ராஜ் படத்தின் முதல் பாடல் "ஆடினே இருப்பேன்" வரும் 17ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • த்ரிஷ்யம் 3 திரைப்படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ளது.
    • த்ரிஷ்யம் 3 படத்திற்கு அனில் ஜான்சன் இசையமைத்துள்ளார்.

    பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸ் நிறுவன்துடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாள திரைப்படமான 'த்ரிஷ்யம் 3' வருகிற ஏப்ரல் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் கதாநாயகனாக மோகன்லால் நடித்திருக்க, இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தலைமையிலான ஆசீர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ளது.

    பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சாதனை, பரபரப்பாக ரசிகர்களை கட்டிப்போடும் திரைக்கதை என பல சாதனைகள் புரிந்த 'த்ரிஷ்யம்' திரைப்படம் இந்திய ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியில் அபிஷேக் பதக் இயக்கத்தில் ரீமேக் செய்யப்பட்ட 'த்ரிஷ்யம் 2' திரைப்படம் உட்பட இந்தப் படத்தின் பல மொழி ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டுடியோஸ் தக்க வைத்துள்ளது.

    த்ரிஷ்யம் 3 படத்திற்கு சதீஷ் குருப் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, விநாயக் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். இந்தப் படத்திற்கு அனில் ஜான்சன் இசையமைத்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் த்ரிஷ்யம் 3 படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தப் படத்தின் புதிய போஸ்டரை நடிகர் மோகன்லால் பகிர்ந்துள்ளார்.

    • இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
    • விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி. இவர் தயாரிப்பில் சில தினங்களுக்கு முன் "பூக்கி" என்ற திரைப்படம் வெளியானது. முற்றிலும் புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், பூக்கி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வருகின்றன. இந்த நிலையில், படத்தை திரையரங்கில் தவற விடாதீர்கள் என்று விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வணக்கம், நல்ல சினிமா விரும்பிகளே மற்றும் காதலன் காதலிகளே. நான் POOKIE பூக்கி என்ற ஒரு நல்ல படத்த புது talents வச்சு produce பண்ணி 2 days-க்கு முன்னால release பண்ணிருக்கேன். பூக்கி ஒரு super படம், பாத்தவங்கட்ட கேளுங்க Miss பண்ணாம பாருங்க. அப்புறம், ஒரு நல்ல படத்தை theatre-ல miss பண்ணிட்டோம்னு feel பண்ணாதிங்க, நன்றி," என குறிப்பிட்டுள்ளார்.

    • தினேஷ் புருசோத்தமனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
    • காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சந்திரசேகர்.

    உட்புற வடிவமைப்பு துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வரும் சந்தோஷ் சோபன், எதிர்பார்த்த வாய்ப்பு இல்லாமல் வாழ்க்கையுடன் போராடுகிறார். வாழ்வாதாரத்திற்காக பகுதி நேரமாக இருசக்கர டாக்ஸி ஓட்டி வருகிறார்.

    அதே சமயம், ஐடி துறையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் வேலை தேடும் மானசா வாரணாசியை சந்திக்கிறார். இந்த இருவரும், ஒரு கட்டத்தில் ஒரே வீட்டில் தங்கி வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    இறுதியில் இவர்கள் இருவரும் ஒன்றாக இணைய காரணம் என்ன? இருவரும் வாழ்க்கையில் சாதித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சந்தோஷ் சோபன் தமிழுக்கு புதிய முகம் என்றாலும், நடிப்பில் புதுமை தெரியாத அளவுக்கு இயல்பை வெளிப்படுத்துகிறார். போராட்டம், நம்பிக்கை, காதல் என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

    மானசா வாரணாசி, முதல் பாதியில் லேசான நடிப்பு மற்றும் அழகால் ஈர்க்க, இரண்டாம் பாதியில் உணர்ச்சி காட்சிகளில் கவனம் பெறுகிறார். இவர்களின் கெமிஸ்ட்ரி அதிகளவில் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.

    யோகி பாபுவின் காட்சிகள் குறைவாக இருந்தாலும், வழக்கமான வசன டைமிங் சிரிப்பைத் தருகிறது. சுனில் ரெட்டி, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட துணை நடிகர்கள் கதையின் ஓட்டத்துக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

    இயக்கம்

    காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சந்திரசேகர். ஒருவருக்கொருவர் துணையாக நிற்பதை அழகாக காண்பித்து இருக்கிறார். வழக்கமான காதல் கதையாக இருந்தாலும், படம் பார்க்கும்போது புது அனுபவத்தை அளிக்கிறது.

    திரைக்கதை எளிமையான நகர்வுடன் அமைந்துள்ளது. காதல், கனவு, முயற்சி என்ற மூன்று கோட்டுகளை மையமாக வைத்து கதையை நகர்த்தி இருக்கிறார்.

    ஒளிப்பதிவு

    தினேஷ் புருசோத்தமனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். சென்னையில் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் சிறப்பாக படமாக்கி இருக்கிறார்.

    இசை

    ஆதித்யா ரவீந்திரனின் இசை, படத்தின் உணர்ச்சி ஓட்டத்துக்கு பொருத்தமாக உள்ளது. பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் சிறப்பு.

    ரேட்டிங்-3.5/5

    • காதலும் நகைச்சுவையும் நிரம்பிய கதை இது.
    • பாக்யராஜ் படங்களைப் போல இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் வருவதில்லையே என ரசிகர்களிடையே ஒரு ஏக்கம் உண்டு.

    நாய் சேகர் பட புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் படம் 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை'. படத்தில் கதாநாயகியாக அன்னா பென் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து படத்தின் முதல் தோற்றத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.

    படம் குறித்து இயக்குனர் கிஷோர் ராஜ்குமார் கூறியதாவது:-

    காதலும் நகைச்சுவையும் நிரம்பிய கதை இது. பாக்யராஜ் படங்களைப் போல இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் வருவதில்லையே என ரசிகர்களிடையே ஒரு ஏக்கம் உண்டு. அந்த ஏக்கத்தை நிரப்பும் வகையில் இந்த படம் இருக்கும். ஜோடி பொருத்தம் குறித்து பேசும் இந்த கலகலப்பான படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும். படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் அன்னா பென் திறமையான நடிகை. அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார்.

    • தியாகராஜன் குமாரராஜா இயக்கும் புதிய படத்தின் அப்டேட்
    • இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.

    தமிழ் திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் தியாகராஜன் குமாரராஜா. ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் மற்றும் மாடர்ன் லவ் சென்னை (நினைவோ ஒரு பறவை) உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

    அதன்படி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். சூப்பர் டீலர்க்ஸ் திரைப்படத்திற்கு பிறகு இருவரும் புதிய படத்தில் இணைகின்றனர். இந்த நிைலயில், இருவரும் இணையும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை (பிப்ரவரி 16) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    திரையுலகில் வித்தியாசமான கதையம்சம், ஆழமான அர்த்தமள்ள வசனங்கள் மற்றும் காட்சிப்பதிவுகளில் புதுமை என தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. அதன்படி இவர் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • அவந்திகா சில மாதங்களுக்கு முன்பு நகைக்கடை விளம்பரத்தில் நடித்திருந்தார்.
    • மகள் நடித்ததை பற்றி குஷ்பு உணர்வுபூர்வமாக பதிவிட்டிருந்தார்.

    நட்சத்திர தம்பதிகளான சுந்தர்.சி- குஷ்பு தம்பதியரின் மகள் அவந்திகா சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். 'ஆரம்பம்' என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ள அவந்திகா நடிக்கும் படத்தின் பூஜை திரிசூரில் நடந்தது.

    படத்தில் சரிதா, அல்தாப் சலீம், இந்திரன்ஸ் விஜயராகவன், கலாபவன் ஷாஜோன் உள்பட பலர் நடிக்கின்றனர். படத்தை சுஜேஷ் இயக்குகிறார். இந்த படம் தமிழிலும் வெளியாகிறது. அவந்திகா சில மாதங்களுக்கு முன்பு நகைக்கடை விளம்பரத்தில் நடித்திருந்தார்.

    மகள் நடித்ததை பற்றி குஷ்பு உணர்வுபூர்வமாக பதிவிட்டிருந்தார். தொடர்ந்து இப்போது அவந்திகா சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். குஷ்பு இளைய மகள் அவந்திகா மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.

    • அவரது திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது.
    • குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மதிப்பிற்குரிய அமரர் ஆர்.எம். வீரப்பன் அவர்களின் புதல்வர், எனது அன்புத் தம்பி தமிழழகன் அருமையான மனிதர்.

    அவரது திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என கூறியுள்ளார். 



    • ஜன நாயகன் விஜய்யின் கடைசிப் படம் என்று கூறப்படுகிறது.
    • தணிக்கை பிரச்சனையால் தற்போது வரை ஜன நாயகன் படம் வெளியாகவில்லை.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள 'ஜன நாயகன்' பொங்கலை முன்னிட்டு ஜன.9-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்தது. ஆனால் தணிக்கை பிரச்சனையால் தற்போது வரை வெளியாகவில்லை.

    தணிக்கை சான்றிதழ் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வந்தது. இதனிடையே இந்த வழக்கை வாபஸ் பெற்ற பட தயாரிப்பு நிறுவனம் ஜன நாயகன் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பியுள்ளது.

    இந்நிலையில், சென்சார் பிரச்னையில் சிக்கியுள்ள நடிகர் விஜய்யின் ஜனநாயகன், ஏப்ரல் 30ம் தேதி வரை ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என கனடா விநியோகஸ்தர் York Cinemas அறிவித்துள்ளது.

    முன்பதிவு செய்த அனைவரும் டிக்கெட்டுக்கான தொகையை திரும்ப வாங்கிக் கொள்ளுமாறு York Cinemas தெரிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    • 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார்.
    • இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.

    சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.

    நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இதில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த படத்தில் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. டீசர் முழுவதும் நடிகை ராதிகா வயதான கெட்டப்பில் வந்து அடாவது செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

    இதனிடையே, 'தாய் கிழவி' பிப்ரவரி 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் படக்குழு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், தாய் கிழவி படம் பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியாகும் என்று புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 

    ×