என் மலர்
நீங்கள் தேடியது "அன்னா பென்"
- கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான புதிய திரைப்படம்
- பிரபல மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்கின்றனர்.
நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் தயாரிப்பில் 'நாய் சேகர்' புகழ் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான புதிய திரைப்படம்
பிரபல மலையாள நடிகை அன்னா பென் நாயகியாக நடிக்க, முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது.
நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிக்கும் இப்படத்தை 'நாய் சேகர்' திரைப்படத்தை இயக்கியவரும், 'கோமாளி', 'கைதி', 'விஐபி 2', 'இமைக்கா நொடிகள்', மற்றும் 'கீ' உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், நிறைய குறும்படங்களையும் யூடியூப் வீடியோக்களை உருவாக்கியவருமான கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்குகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்குவதோடு, நாயகனாகவும் நடிக்கிறார். பிரபல மலையாள நடிகையும் 'கொட்டுக்காளி' தமிழ் படத்தில் நடித்தவருமான அன்னா பென் நாயகியாக நடிக்க, முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
திரைப்படம் குறித்து பேசிய கிஷோர் ராஜ்குமார், "காதலும் நகைச்சுவையும் நிரம்பிய கதை இது. படம் முழுக்க ஃபீல் குட் உணர்வை ரசிகர்களுக்கு தரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை உருவாக்க உந்து சக்தியாக இருப்பவர் பாக்யராஜ் சார் தான். அவர் இயக்கிய படங்கள் போல இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் வருவதில்லையே என ரசிகர்களிடையே ஒரு ஏக்கம் உண்டு. அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் இந்த படம் இருக்கும்," என்றார்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும் இணை எழுத்தாளராகவும் பிரவீன் பாலு பங்காற்ற, படத்தொகுப்பை ராம் பாண்டியன் கவனிக்கிறார். ஶ்ரீ சசிகுமார் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்றுள்ளார். ஆடை வடிவமைப்பு - கிருத்திகா சேகர், நிர்வாக தயாரிப்பு - எஸ். என். அஸ்ரப்/நரேஷ் தினகரன்.
திரைப்படம் குறித்த மேலும் சுவாரசிய தகவல்கள் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.
- 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
- மீனா என்ற கதாப்பாத்திரத்தில் அன்னா பென் நடித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மட்டும் வெளியாகியுள்ளது. திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றது. இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.
இந்நிலையில், சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இதுக்குறித்து சூரி அவரது எக்ஸ் தளத்தில் சில நாட்களுக்கு முன் பதிவு ஒன்றை பதிவிட்டார் அதில் இப்படம் உண்மைக்கு மிகவும் நெருக்கமாக எடுக்கப்பட்ட படம், இப்படத்தில் பாண்டி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் கொட்டுக்காளி." என்று பதிவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து படத்தின் முன்னணி கதாப்பாத்திரமான அன்னா பென் அவரது கதாப்பாத்திரத்தை குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். மீனா என்ற கதாப்பாத்திரத்தில் அன்னா பென் நடித்துள்ளார்.
"மீனா என்னுள் ஒரு அங்கம் என்பது நான் அறிந்ததே இல்லை, பல அற்புதமான விஷயங்களில் கொட்டுக்காளி ஒரு வெளிப்பாடு. இந்த கோட்டுக்காளி அவள் எவ்வளவு அன்பானவளாக இருக்கிறாளோ, அதே போல் வலிமையும், நெகிழ்ச்சியும் உடையவள். மதுரை வழியாக இந்த பயணத்தில் உங்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல காத்திருக்கிறேன்"
திரைப்படம் மற்றொரு வெற்றிப்படமாக சூரி மற்றும் வினோத் ராஜ்-க்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.
- சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றது. இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.
இந்நிலையில், சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது. திரைப்படத்தில் இவர்கள் நடித்த கதாப்பாத்திரமான பாண்டி மற்றும் மீனா பற்றிய பதிவுகளை சில நாட்களுக்கு முன் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கலீடம் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
கொட்டுக்காளி திரைப்படம் சூரி நடிப்பில் வெளிவந்த விடுதலை மற்றும் கருடன் திரைப்படத்திற்கு முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும் என சூரி கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விடுதலை, கருடன் படங்களைத் தொடர்ந்து சூரி கொட்டுக்காளி படத்தில் நடித்துள்ளார்.
- கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது.
- 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் படக்குழு மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். மேலும் இவ்விழாவில் இயக்குனர் மிஷ்கின், பாலாஜி சக்திவேல், லிங்குசாமி கலந்துக் கொண்டனர்.
விழாவில் பேசிய மிஷ்கின் மிகவும் அழகாக , இலக்கிய நயத்தோடு படத்தையும் , படக்குழுவையும், இயக்குனரையும் பாராட்டி பேசினார். அதில் அவர் சொன்ன முக்கியமான விஷயங்கள் சிலவற்றை பார்ப்போம். அதில் அவர்
"இப்படத்தை ஓட வைப்பதற்காக நான் இந்த மேடையில் அம்மணமாக கூட ஆட தயார் . இந்த படத்தை எடுத்த இயக்குனர் வினோத் ராஜ் மிகப் பெரிய நன்றி. இந்த படத்தை எடுத்ததற்காக அவனுடைய காலை கூட முத்தம் இடுவேன். நான் இளையராஜாவிற்கு பிறகு ஒருவனின் காலை முத்தமிடுவேன் என்றால் அது வினோத் ராஜின் காலை தான், சூரி அந்த கதாப்பாத்திரமாவே வாழ்ந்து இருக்கிறான். தமிழ் நடிகைகள் இந்த மாதிரி நல்ல படங்களில் நடிக்க சம்மதிக்க மாட்டார்கள், அன்னா பென்னிற்கு கண்டிப்பாக இந்த வருடம் தேசிய விருது கிடைக்கும் என வாழ்த்துகிறேன். படத்திற்கு பின்னணி இசையே இல்லாமல் படத்தை இயக்கி என்னை செருப்பால் அடித்து விட்டான் இயக்குனர் வினோத்ராஜ். இப்படத்தை தயவு செய்து அனைவரும் சென்று பாருங்கள். எதெற்கோ பணம் செலவு செய்கிறோம் இப்படத்தையும் சென்று பார்க்க வேண்டும் என மக்களிடம் அன்போடு கேட்டுக்கொண்டார்."
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கொட்டுக்காளி படத்திற்கு இசையமைப்பாளர் இல்லை.
- கொடுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் கொட்டுக்காளி. இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றுள்ளது.
சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. படத்தில் இசையமைப்பாளர் இல்லாதது படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதில் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த வரிசையில், கொட்டுக்காளி படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவை நேரில் பாராட்டினார்.
இத்துடன் படக்குழுவை பாராட்டி நடிகர் கமல் ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "கொட்டுக்காளி என்ற மத்திய அரசுச் சான்றிதழ் திரையில் தோன்றும் கணத்தில் இருந்து ஆச்சரியங்கள் தொடங்குகின்றன. சான்றிதழில் 103 நிமிடங்கள் 44 செகண்டுகள் என்ற குறிப்பைப் பார்த்ததுமே தமிழ் சினிமா ராக் யுகத்திலிருந்து மீண்டு நவீன கதைசொல்லி ஒருவனின் களமாகிவிட்டது புரிகிறது."
"தம்பி சூரியைத் தவிர எனக்குத் தெரிந்த முகங்கள் இல்லை மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அவரும் தெரியவில்லை, பாண்டியன் எனும் கதாபாத்திரம்தான் தெரிந்தார். காலில் கல் கட்டிய சேவல் ஒன்று விடியலுக்காகக் கூட கூவாமல் குழம்பி நிற்கிறது."
"மறுபுறம் நம் கண்ணுக்குத் தெரியாத கல் ஒன்று காலில் கட்டப்பட்ட பெண் ஒருத்தி அந்தச் சேவலையே வெறித்துப் பார்க்கிறாள் 'கொட்டுக்காளி' டைட்டில் திரையில், கண் இமைக்கும் நேரத்தில் கால் கட்டை உதறித் தப்பிக்கிறது சேவல், வெறித்துப் பார்த்த பெண்ணின் கண்ணில் சின்ன எதிர்பார்ப்பு, பின் இரு உறவினர்கள் சேவலை துரத்திப் பிடித்துக்கொண்டு போகிறார்கள்."
"பெண்ணின் கண்ணில் நம்பிக்கை மங்குகிறது. இவள்தான் நாயகி உலகத்தைத் தலைகீழாக அண்ணாந்து பார்த்தபடி அறிமுகமாகிறான் பாண்டி, அவன் கழுத்தில் ஒரு வெண்சுண்ணாம்புக் களியைத் தடவி விடுகிறாள் ஒரு பெண், பாண்டிக்குத் தொண்டைக் கட்டாகவும் இருக்கலாம் அல்லது புற்றுநோயின் ஆரம்பக் கட்டமாகக்கூட இருக்கலாம். ஓர் இளம்பெண்ணின் கல்லூரிக் காதலையும் கேன்ஸரையும் எந்த ஒரு புரிகலும் இல்லாது அணுகும் ஒரு கிராமத்துக் குடும்பம்."
"கிராமம் என்றால், சிமென்ட் சாலை, வாகன வசதி, செல்ஃபோன், டாஸ்மாக், சானிட்டரி நாப்கின், 24 மணி நேர மின்சாரம் என 21-ஆம் நூற்றாண்டின் நவீன வசதிகள் நிறைந்த கிராமம். இருப்பினும் எங்க வீட்டு பிள்ளைக்குப் பேய் பிடிச்சுருக்கு. பேய் ஓட்டக் கூட்டிப்போறோம்' என்று விசாரிப்பவர்களிடம் கூசாமல் சொல்கிறான் பாண்டியன் வழிமொழிகிறது குடும்பம்."
"போகிற வழியெல்லாம் பிளாஸ்டிக் குடங்கள் விற்கும் வண்டி ஒன்று பேயாய் ஆடிச்செல்கிறது. கண்ணேறு தவிர்க்கும் அசுர முகங்கள் இன்னொரு வண்டியில் பேயாடுகிறது. நடுவழியில் டாஸ்மாக் பேய் என்று பல பேய்களின் ஆட்டம் தென்பட்டாலும் அவை பூசாரிகளால் விரட்ட முடியாத பேய் எனப் புரிந்துகொள்கிறோம்."
"இது பேய்க் கதைதான் காதல் பேய்க் கனத, நாயகியின் கண்ணில் பூமியின் பொறுமை தெரிகிறது. பின்னணி இசை என்று எதுவும் இல்லை டைட்டில் கார்டில் வரும் 'இயற்கைக்கு நன்றி என்ற வாசகத்தின் பொருள், ஒளிப்பதிவிலும் ஒலிப்பதிவிலும் தெரிகிறது."
"இயற்கைதான் படத்தின் இசை குலதெய்வக் கோயிவை நெருங்குகையில் சிறுவன் கார்த்திக் வாயால் கொடுக்கும் சினிமாப் பாணி பிள்னணி இசைதான் ஒரு சின்ன கிண்டலுடன் இந்தப் படத்தில் அவை இல்லை என்பதை நினைவுபடுத்துகிறது. ஆணாதிக்கத்தின் குறியீடுகளாக சேவல், சீறும் காளை, பாண்டியன். பூசாரி என்று பலர் இருந்தாலும் அவற்றை நாயகி எதிர்கொள்ளும் விதம் காலம் மாறிவிட்டதை மற்ற பாத்திரங்கள் புரிந்துகொள்ளாவிடினும் பார்வையாளர்களாகிய நமக்கு படம் பிடித்துக் காட்டப்படுகிறது," என குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்தில் சூரி மற்றும் அன்னா பென் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- படத்தின் ஓடிடி அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்றுப் பல விருதுகளையும் வென்றுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் சூரி மற்றும் அன்னா பென் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் இசை இல்லாதது படத்திற்கு கூடுதல் சிறப்பம்சம். தன் வீட்டுப் பெண் வேறு ஒருவனை காதலித்ததால் அவரை ஊர் சாமியாரிடம் அழைத்து சென்றால் சரி ஆகிவிடும் என குடும்பத்துடன் கிழம்புகின்றனர். இந்த பயணமே திரைப்படத்தின் கதைக்களமாகும்.
படத்தின் ஓடிடி அப்டேட் தற்பொழுது வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி அமேசான் பிரைம் மற்றும் சிம்பிலி சவுத் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளது.
திரையரங்கில் இப்படத்தை பார்க்க தவறவிட்டவர்கள். ஓடிடி-யில் பார்த்து மகிழுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






