என் மலர்
சினிமா செய்திகள்
- “கை வட்டக குருதி பூஜை” என்பது கேரள கோவில்களில் செய்யப்படும் சிறப்பு வாய்ந்த சடங்கு ஆகும்.
- பூஜையை தொடர்ந்து நடிகர் விஷாலுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அனயாரா என்ற இடத்தில் வாராஹி பஞ்சமி தேவி கோவில் அமைந்துள்ளது. கேரளாவில் உள்ள ஒரே வாராஹி பஞ்சமி கோவில் என்று கூறப்படும் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
இந்தநிலையில் நடிகர் விஷால் அந்த கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவர் ஒரு சினிமா படப்பிடிப்பிற்காக கேரளா வந்திருந்ததாக கூறப்படுகிறது. அதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல ஓட்டலில் தங்கியிருந்த நடிகர் விஷால், அனயாராவில் உள்ள வாராஹி பஞ்சமி கோவிலை பற்றி அறிந்தார்.
இதையடுத்து அவர் தனது மேலாளருடன் வாராஹி பஞ்சமி கோவிலுக்கு சென்றார். அவர் சாதாரண உடையிலேயே கோவிலுக்கு சென்றார். பிரபல திரைப்பட நடிகரான விஷால் சாதாரண உடையில் வருவதை பார்த்த பக்தர்கள், அவரை கைதட்டி வரவேற்றனர்.
இதையடுத்து நடிகர் விஷால் கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர், "கை வட்டக குருதி பூஜை" என்ற சிறப்பு பூஜை செய்தார். மாவேலிக்கரை பிரசாந்த் நம்பூதிரி தலைமையில் அவருக்கு "கை வட்டக குருதி பூஜை" செய்யப்பட்டது.
"கை வட்டக குருதி பூஜை" என்பது கேரள கோவில்களில் செய்யப்படும் சிறப்பு வாய்ந்த சடங்கு ஆகும். இது தீய சக்திகளை அகற்றி, தடைகளை நீக்கி வாழ்க்கையில் நன்மைகளை கொண்டுவர உதவும். முக்கியமாக எதிர்மறை சக்திகளையும், தடைகளையும் நீக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.
இந்த பூஜையை தொடர்ந்து நடிகர் விஷாலுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்பு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்துவிட்டு நடிகர் விஷால் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
- சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவான படம்.
- இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.
2001-ம் ஆண்டு நடிகர்கள் விஜய்- சூர்யா இணைந்து நடித்து வெளியான படம் 'ஃப்ரண்ட்ஸ்'. இப்படத்தில் தேவயானி, ராதாரவி, ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி, ஸ்ரீமன், விஜயலட்சுமி, மதன் பாப், சரிதா உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர்.
மலையாள திரைப்படமான 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தை தழுவியே இப்படம் வெளிவந்தது. சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்திலும், கோகுல் கிருஷ்ணாவின் வசனத்திலும் வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. அதிலும் வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் மீண்டும் 4-கே டிஜிட்டல் முறையில் வரும் 21-ந்தேதி மீண்டும் வெளியாக உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ப்ரண்ட்ஸ் படத்தின் புதிய மேம்பட்ட டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
- மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் வளர்த்து வரும் நடிகராக உள்ளார்.
- மோகன்லால் நடத்தும் ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தனது 25 வது ஆண்டை நிறைவு செய்தது.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் வளர்த்து வரும் நடிகராக உள்ளார். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான 'டைஸ் ஐரே' என்ற பேய் படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மோகன்லால் தனது மகள் விஸ்மயா-வை மோகன்லால் சினிமாவில் களம் இறக்கி உள்ளார்.
மோகன்லால் நடத்தும் ஆசிர்வாத் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் தனது 25 வது ஆண்டை நிறைவு செய்ததை ஒட்டி இந்த அறிவிப்பு வந்தது.
விஸ்மயா நடிக்கும் முதல் படத்தை இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார். இப்படத்திற்கு, 'துடக்கம்' எனப் பெயரிடப்பட்டது.
இந்த படத்தில் மோகன்லாலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல பின்னணி இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இடுக்கியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

- ஆட்ட நாயகன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.
- மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அவருடன் அரிஹரா என்ற மகனை பெற்றார்.
பிரபல மலையாள நடிகை மீரா வாசுதேவன் மூன்றாவது முறையாக விவாகரத்து செய்துள்ள சம்பவம் கவனம் பெற்று வருகிறது.
மோகன்லாலின் தன்மந்த்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக மீரா உயர்ந்தார்.
தமிழில் உன்னை சரணடைந்தேன், அடங்க மறு, ஜெர்ரி, அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானார்.
இவர் 2005இல் பிரபல ஒளிப்பதிவாளர் மகனை மீரா வாசுதேவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2010 இல் அவரை விவாகரத்து செய்தார்.
தொடர்ந்து மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அவருடன் அரிஹரா என்ற மகனை பெற்றார்.
ஆனால் அந்த உறவும் நீடிக்காமல் அவரை விவாகரத்து செய்த மீரா, 2024 ஏப்ரலில் ஒளிப்பதிவாளர் விபின் புதியங்கத்தை திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் மூன்றாவது கணவர் விபினையும் மீரா வாசுதேவன் விவாகரத்து செய்துள்ளார்.
"2025 ஆகஸ்ட் முதல் நான் சிங்கிளாகி விட்டேன். என் வாழ்க்கையின் அழகான மற்றும் அமைதியான கட்டத்தில் இருக்கிறேன்" என்று மீரா வாசுதேவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
- அதன் பின்னரே ரஜினிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
- திரைப்பட விமர்சகராகவும் இருந்துள்ளார்.
இயக்குனர் கே. பாலச்சந்தர் ரஜினியை சினிமாவில் அறிமுகப்படுத்தியதை அனைவரும் அறிவர். ஆனால் ரஜினியை ஒரு நடிகராக மெருகேற்றியவர் கோபாலி.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக நடத்தப்பட்ட, திரைப்படப் பயிற்சி கல்லூரியில் ரஜினி படித்த சமயம், அங்கு நடிப்பு பயிற்சி கற்றுக்கொடுக்கின்ற ஆசிரியராக கோபாலி பணியாற்றினார்.
கே.பாலச்சந்தர் திரைப்பட பயிற்சிக் கல்லூரிக்கு வந்த போது தனது மாணவர் ரஜினியை கோபாலி அவருக்கு அறிமுகப்படுத்தினார். அதன் பின்னரே ரஜினிக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
கோபாலி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தூர்தர்ஷன் ஆகியவற்றிலும் பணியாற்றி உள்ளார். மேலும் திரைப்பட விமர்சகராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கோபாலி சென்னையில் இன்று காலை காலமானார். ரஜினிகாந்த் நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து இறுதிமதியாதை செலுத்தினார்.
- படத்தில் தாதாவாக ஆனந்தராஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
- ஆட்டம் போடுபவர்கள் ஒருநாள் நிச்சயம் அடங்கிப் போவார்கள் என்பதை இயக்குனர் சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்.
நாயகன் ஆனந்தராஜ் தாதாவாக இருக்கிறார். இவர் தலைமையை விரும்பாத சில அதிருப்தியாளர்கள், கூடவே இருந்து அவரை கொல்ல சதி திட்டம் தீட்டுகின்றனர். இதற்கிடையே போலீஸ் அதிகாரி சம்யுக்தா தலைமையில் ஆனந்தராஜ் பின்னணி குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்படுவதுடன் ஆனந்தராஜை என்கவுண்டர் செய்யவும் திட்டம் போடுகிறார்கள்.
இறுதியில் என்கவுண்டரில் ஆனந்தராஜ் சிக்கினாரா? இல்லையா? ஆனந்த ராஜ் கூட இருப்பவர்களின் சதி திட்டம் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
மதறாஸ் மாபியா படத்தில் தாதாவாக ஆனந்தராஜ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கிளைமாக்சில் அவரது தோற்றம் எதிர்பாராதது. என்கவுண்டர் செய்ய துடிக்கும் சம்யுக்தா, மிடுக்கான தோற்றத்தில் மிரட்டி இருக்கிறார். ஆனந்தராஜ் மனைவிகளாக தீபா சங்கர், சசி லயா, காதலியாக ஷகீலா ஆகியோர் வரும் காட்சிகள் கலகலப்பு.
முனீஷ்காந்த், மிப்பு கோஷ்டி ஆனந்தராஜை கொல்ல முயன்று தோற்று காமெடி செய்துள்ளனர். மேலும் ஆராத்யா, ரிஷி ஆகியோர் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
ரவுடிகளுக்கான கதையில் காதல், குடும்ப சென்டிமெண்ட், காமெடி கலந்து எழுதி இயக்கியுள்ளார் ஏ.எஸ்.முகுந்தன். ஆட்டம் போடுபவர்கள் ஒருநாள் நிச்சயம் அடங்கிப் போவார்கள் என்பதை சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். தேவை இல்லாத வசனங்கள் படத்திற்கு பலவீனம்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறது. அசோக் ராஜ் ஒளிப்பதிவு இயல்புபாக ரசிக்க வைக்கிறது.
- சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் உருவாகி வருகிறது.
- அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது படம் உருவாகி வருகிறது. பராசக்தி என பெயரிடப்பட்ட இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரித்துள்ளது.
படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்திருக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி உள்ளது.
அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் திரைக்கு வருகிறது.
படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
- விஷாலின் 35-வது படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கியுள்ளார்.
- விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் அஞ்சலியும் நடிக்க வருகின்றனர்.
விஷாலின் 35-வது படத்தை ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்களை இயக்கிய ரவி அரசு இயக்கியுள்ளார். இப்படத்திற்கு மகுடம் என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம் இப்படத்தை தயாரிக்கிறது. இது சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99 -வது திரைப்படமாகும். விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் அஞ்சலியும் நடிக்க வருகின்றனர்.
படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் கிளைமேக்ஸ் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
- 'காந்தா' படம் கடந்த 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.
- இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.
மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான 'லக்கி பாஸ்கர்' படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்கி உள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்.
இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 'காந்தா' படம் கடந்த 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில், காந்தா படம் 3 நாட்களில் ரூ.24.50 கோடிக்கு மேல் வசூலித்ததாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

- பாராசூட்டில் இருந்து அதிக முறை (16) குதித்த நபர் என்ற சாதனையை தன்வசப்படுத்தி இருந்தார்.
- ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. .
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ். ஹாலிவுட் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் ஸ்டண்ட் காட்சிகளை மிகவும் சாதாரணமாக செய்து முடிப்பவர். இவரது நடிப்பில் வெளியான மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
டாம் க்ரூஸின் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுக்காகவே பிரபலமான அவரது 'மிஷன்: இம்பாஸிபிள்' திரைப்பட வரிசையில் 8-வது பாகமான, 'மிஷன்: இம்பாஸிபிள்- தி ஃபைனல் ரெக்கனி' வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
பல்வேறு சாதனைனகளுக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரரான டாம் க்ரூஸ் திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக அவருக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு அறிவித்தது.
இந்நிலையில், டாம் க்ரூஸுக்கு கௌரவ ஆஸ்கர் விருது இன்று வழங்கப்பட்டது. அவருடன் இணைந்து டெபி ஆலன், வின் தாமஸ் மற்றும் டோலி பார்டன் ஆகியோருக்கும் கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
- ராஜசேகர் முக்கிய கதாபாத்திரத்தில், அதாவது தினேஷ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறாராம்.
- ராஜசேகர் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இதற்கு முன்பு ‘அல்லரி பிரியுடு', ‘பலராம கிருஷ்ணனுலு' போன்ற படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தனர்.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சுவாசிகா ஆகியோர் நடித்த 'லப்பர் பந்து' படம் கடந்த ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் பணிகளில் களமிறங்கியுள்ளார், நடிகர் ராஜசேகர். இந்த படத்தை சசி இயக்கப்போகிறாராம்.
ராஜசேகர் முக்கிய கதாபாத்திரத்தில், அதாவது தினேஷ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறாராம். அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
ராஜசேகர் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இதற்கு முன்பு 'அல்லரி பிரியுடு', 'பலராம கிருஷ்ணனுலு' போன்ற படங்களில் ஒன்றாக இணைந்து நடித்தனர்.
தற்போது 'லப்பர் பந்து' ரீமேக் படத்துக்காக 27 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
- பாரதி கண்ணன் அண்மையில் நடிகர் கார்த்திக் குறித்து பேசிய நேர்காணல் இணையத்தில் வைரலானது.
- தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து பாரதி கண்ணன் பேசியுள்ளார்.
திருநெல்வேலி, கண்ணாத்தா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பாரதி கண்ணன் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.
பாரதி கண்ணன் அண்மையில் நடிகர் கார்த்திக் குறித்து பேசிய நேர்காணல் இணையத்தில் வைரலானது. அதில், கார்த்திக் போலவே அவர் மிமிக்ரி செய்தது நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில், பாரதி கண்ணன் அண்மையில் கொடுத்த மற்றொரு நேர்காணலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து பேசியுள்ளார்.
அந்த நேர்காணலில் பேசிய பாரதி கண்ணன், "விஜய்க்கு நல்ல பேச்சுத்திறமை உள்ளது. ஆனால் அவரிடம் உள்ள குறை என்றால்... அவரது கட்சியை கிரிக்கெட் அணியுடன் ஒப்பிட்டு பார்க்கலாம். அவரது அணியில் நம்பர் 1 பேட்ஸ்மேன் விஜய் தான். கேட்ச் பிடிப்பது அவர் தான். அவர் தான் கட்சியின் எல்லாமே. அவருக்கு அடுத்து அந்த கட்சியின் பேட்ஸ்மேன் என்று யாருமில்லை. எல்லாருமே நீங்க நல்ல ஆடுங்கண்ணே... நீங்க ஜெயிச்சிருவீங்க... நாங்க கூட இருக்கிறோம் என்று கூறுகிறார்கள்.
கிரிக்கெட் அணியில் நல்ல வீரர்கள் இருக்க வேண்டும். ஆனால் அவர் அணியில் அப்படி இல்லை... அவர் மோதப்போவதோ ஆஸ்திரேலியா போன்ற அணியை... ஆனால் விஜய் அணியோ ஜிம்பாம்பே மாதிரி... அது தப்பில்ல... ஆனா அவரு வாய் துடுக்கா பேசக்கூடாது... ஆஸ்திரேலியா கேப்டன் வந்து பாரு என்னை ஒன்னும் பண்ண முடியாதுனு பேசுறாரு... இதை பாக்குற மக்கள் விஜய்க்கு இன்னும் பக்குவம் இல்லமாக ரொம்ப சவுண்டு கொடுக்குறாரோனு நினைக்கிறாங்க...
விஜய் அணியிடம் நல்ல வீரர்கள் இல்ல... பயிற்சியாளர்கள் இல்ல... ஆனால் எதிர் அணியான ஆஸ்திரேலியா அணியிடம் பலம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். அப்போ நாம் என்ன செய்ய வேண்டும். ஐபிஎல் மாதிரி வேறு நல்ல அணியில் இருந்து ஆட்களை வாங்கி அணியை பலப்படுத்த வேண்டும். அப்போது தான் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டு சண்டை செய்யமுடியும்.
பொதுவாக சினிமா காரர்களிடம் ஒரு பிரச்சனை உள்ளது. அவர்கள் யார் சொல்வதையும் கேட்க மாட்டார்கள்... ஆனால் களத்தை உணர்ந்து, நல்ல வீரர்களை அணியில் எடுத்தால் மோதுவதற்கு ஈசியாக இருக்கும்... அப்படி இல்லையென்றால் ஆஸ்திரேலியா ஈஸியா ஜெயிச்சிடும்... விஜயிடம் கூட்டம் இருக்கலாம்... ஆனா நல்ல வீரர்கள் இல்லை" என்று தெரிவித்தார்.






