என் மலர்
சினிமா செய்திகள்

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் பாலிவுட் படத்தில் நடித்திருக்கும் தமன்னா - ஏன் தெரியுமா?
- விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஷாகித் கபூர் மற்றும் திருப்திடிம்ரி நடித்துள்ளனர்.
- தமன்னா 1 பாடலுக்கு நடனமாட ரூ.6 கோடி சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது.
திரை உலகை பொருத்தவரை படம் எடுப்பதற்கு ஆகும் செலவை விட ஹீரோ, ஹீரோயின்களின் சம்பளம் அதிகம். படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கு கூட கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி வெளியாகும் 'ஓ ரோமியோ' என்ற இந்திப்படத்தில் நடிகர் விக்ராந்த் மாஸ்சியும், தமன்னாவும் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்துள்ளனர்.
விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஷாகித் கபூர் மற்றும் திருப்திடிம்ரி நடித்துள்ளனர். மேலும் விக்ராந்த் மாஸ்ஸி, திஷாபதானி, தமன்னா மற்றும் நானே படேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் நடித்துள்ள விக்ராந்த் மாஸ்சியும், தமன்னாவும் இயக்குநர் விஷால் பரத்வாஜிற்காக சம்பளம் வாங்காமல் நடித்துள்ளனர்.
தமன்னா சுமார் 12 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்றது மட்டுமின்றி முன்னதாக ஒத்திகைகளிலும் பங்கேற்றார். சமீபகாலமாக தமன்னா 1 பாடலுக்கு நடனமாட ரூ.6 கோடி சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது.






