என் மலர்
சினிமா செய்திகள்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ படத்தின் பாணியில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் வாக்களித்திருக்கிறார். #Sarkar
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த சர்கார் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. இந்த படத்தில் ஒருவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டுவிட்டால், 49 பி தேர்தல் விதிப்படி, தேர்தல் அலுவரின் உத்தரவின் பேரில் வாக்களிக்கலாம் என்ற நல்ல செய்தி மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்பட்டது.
இந்த நிகழ்வு தற்போது நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. நெல்லை மாவட்டம் பணகுடி வாக்கு சாவடி எண் 48-ல் மணிகண்டன் என்பவர் ஓட்டை மற்றொருவர் கள்ள ஒட்டு போட்டதை தொடர்ந்து, மணிகண்டனுக்கு 49 பி தேர்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இது இப்படத்திற்கு கிடைத்த உண்மையான வெற்றி என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.
தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவியின் 25-வது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #JayamRavi
‘ஜெயம்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஜெயம் ரவி, இதுவரை 24 படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடித்த ‘அடங்க மறு’ படம், அவருடைய 24-வது படமாக கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் 25-வது படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
இவருடைய 25-வது படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. லட்சுமன் டைரக்டு செய்கிறார். இவர், ஜெயம் ரவியை வைத்து ஏற்கனவே ‘போகன்,’ ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய 2 படங்களை டைரக்டு செய்து இருக்கிறார். மூன்றாவது முறையாக இருவரும் புதிய படத்தில் இணைந்து பணிபுரிய இருக்கிறார்கள். இதுபற்றி டைரக்டர் லட்சுமன் கூறியதாவது:-
‘‘ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளத்தக்க கதைக்களத்தை கொண்ட படம், இது. கடந்த 24 படங்களில் ஜெயம் ரவியின் திரையுலக பயணத்தை பிரதிபலிக்கும் விதமாக ஜனரஞ்சகமான படமாக இது தயாராக இருக்கிறது.

ஜெயம் ரவியின் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர கதாபாத்திரங்களுக்கான நடிகர்-நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இமான் இசையமைக்கிறார். ஜெயம் ரவி படத்துக்கு இவர் இசையமைப்பது, இது நான்காவது முறை. ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய குமார் தயாரிக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி, நான் (லட்சுமன்) இயக்குகிறேன். படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது’’ என்றார் டைரக்டர் லட்சுமன்.
நேற்று மாரடைப்பால் மரணமடைந்த சினிமா பைனான்சியர் முகுல் சந்த் போத்ராவின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது. #Bothra
தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு பைனான்ஸ் செய்தவர், முகுல் சந்த் போத்ரா. மயிலாடுதுறையைச் சேர்ந்த போத்ராவின் பூர்வீகத் தொழில் வைர வியாபாரம். சினிமா தயாரிப்பாளர்களுக்குக் கடன் கொடுக்கும் தொழிலில் இறங்கினார். பல சர்ச்சைகளுக்கு நடுவே இந்தத் தொழிலை செய்து வந்தார்.
இவர் நேற்று மாலை மாரடைப்பால் காலமானர். அவருக்கு 60 வயது. இறுதிச்சடங்குகள் செய்து, இன்று மாலை 4.30 மணியளவில், ஜெயின் முறைப்படி சென்னையில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

போத்ராவுக்கு கரிஷ்மா, ககன் மற்றும் சந்தீப் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். தனக்கு வரவேண்டிய கடன் தொடர்பாக ரஜினி, கஸ்தூரிராஜா மற்றும் பலர் மீது நிறைய வழக்குகள் தொடுத்துள்ளார். போத்ரா மீதும் கந்துவட்டி தொடர்பான பல வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. சில வழக்குகளுக்காகச் சிறையும் சென்றுள்ளார்.
பற பட விழாவில் தன்னைப் பற்றி பேசிய தயாரிப்பாளர் ராஜனுக்கு, பாடகி சின்மயி பயப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். #MeToo
நடிகைகள், பெண் இயக்குனர்கள், பாடகிகளின் பாலியல் புகார்களால் பட உலகை உலுக்கி வந்த மீ டூ இயக்கம் சமீபகாலமாக ஒய்ந்து இருந்தது. இந்த நிலையில் சென்னையில் நடந்த ‘பற’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ‘மீ டூ’ குறித்து பேசியவர்களின் கருத்துக்கள் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.
சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன் பேசும்போது, பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்திய பாடகி சின்மயிக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் பேசும்போது, “சமீபகாலமாக சமூகத்தில் பிரபலமாக இருப்பவர்களின் பெயரை கெடுக்கும் செயல் நடக்கிறது. 15 வருடங்களுக்கு முன்பு நடந்ததை இப்போது சொல்வதன் நோக்கம் என்ன? விளம்பரத்துக்காக பெருமைக்குரியவர்களை அசிங்கப்படுத்தி பெயரை சிதைக்கலாமா?. அப்படி சிதைத்தால் உங்களையும் சிதைப்பார்கள்.” என்று பேசினார்.
இதற்கு பதில் அளித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேசும்போது, “சினிமாவில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஸ்ரீரெட்டி உள்பட குற்றச்சாட்டு சொன்னவர்களின் புகார் குறித்து விசாரித்தால்தானே உண்மை தெரியவரும். புகார் சொன்ன பெண்ணை குற்றவாளியாக பார்க்க கூடாது” என்றார்.
Producer K Rajan and his open threat to deal with for naming Mr Vairamuthu.
— Chinmayi Sripaada (@Chinmayi) April 14, 2019
Sidhaikka aal ellam vechurkkaarame. Bayappdnuma? pic.twitter.com/D6MBqU5sRb
கே.ராஜன் பேசிய வீடியோவை பாடகி சின்மயி தனது டுவிட்டரில் பகிர்ந்து, “சிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே. பயப்பட வேண்டுமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்சியின் வயதான தோற்றம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்திருக்கிறது. #Taapsee #SaandKiAankhThisDiwali
பாலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வரும் டாப்சி தற்போது துஷ்கர் ஹிரானந்தனி இயக்கும் சாந்த் கி ஆங்க் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் அறுபது வயது பெண் தோற்றத்தில் நடிக்கிறார்.
தற்போது அவரது கதாபாத்திரத்தை விளக்கும் வகையிலான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரகாஷி, சந்திரோ ஆகிய இரு துப்பாக்கி சுடும் வீராங்கனைகளின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இதன் திரைக்கதை உருவாகியுள்ளது.

இந்த படத்திற்காக டாப்சி துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக்கொண்டார். டாப்சியின் தோற்றத்திற்காக ஹாலிவுட் படங்களுக்கு ஒப்பனைச் செய்யும் கலைஞர்கள் படத்தில் பணியாற்றுகின்றனர். இந்தியாவின் வறண்டக் கிராமம் ஒன்றின் பின்னணியில் கதை நடைபெறுகிறது.
பிப்ரவரி மாதம் இதன் படப்பிடிப்பு உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கிராமப்புறப் பகுதிகளில் தொடங்கிய நிலையில் படக்குழு படப்பிடிப்பை நிறைவு செய்ய உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலுக்கு ஓட்டு போன்ற சென்ற சிவகார்த்திகேயன், கடும் போராட்டத்திற்குப் பிறகு வாக்களித்திருக்கிறார். #Sivakarthikeyan #LokSabhaElections2019
பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. நடிகர்கள், நடிகைகள் பலரும் காலையிலேயே தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர். இதில், நடிகர் சிவகார்த்திகேயன், ரமேஷ் கண்ணா மற்றும் ரோபோ சங்கர் ஆகியோருக்கு ஓட்டு இல்லை என கூறப்பட்டது.
நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அங்குள்ள பூத் எண் 303-ல் சிவகார்த்திகேயனின் மனைவி கிருத்திகாவிற்கு ஓட்டு உள்ளது. அதேசமயம் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை. இதனால் அவருக்கு ஓட்டு இல்லை என கூறப்பட்டது.

பின்னர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர், கடும் போராட்டத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்தார். அதன்பின் அவர் கூறும் போது, வாக்களிப்பது உங்கள் உரிமை; அந்த உரிமைக்காக போராடுங்கள் என கூறினார்.
உங்களுக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதா என்று தன்னைப் பற்றி விமர்சித்த ரசிகர்களுக்கு நடிகை சமந்தா பதிலடி கொடுத்திருக்கிறார். #Samantha
சமந்தா யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று தெலுங்கு தேசம் வேட்பாளர் அனகானி சத்ய பிரசாத்துக்கு ஓட்டு போடும்படி பிரசாரம் செய்தார். சமூக வலைத்தளங்கள் மூலம், ‘சத்ய பிரசாத் நல்ல வேட்பாளர். அவரை எனக்கு நல்லா தெரியும். மக்களுக்கு நல்லது செய்யக்கூடியவர். அவருக்கு வாக்களியுங்கள்’ என சமீபத்தில் வீடியோ வெளியிட்டார்.
இதையடுத்து ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர். ‘உங்களுக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டதா?’, ‘நடிகர், நடிகைகளுக்கு வேறு வேலையே இல்லையா’, ‘நீங்களுமா?’ என கமெண்ட்டுகள் குவிய, சமந்தா கொதித்துப்போனார்.

இது பற்றி அவர் கூறும்போது, ‘சத்ய பிரசாத், எனது தோழர். டாக்டர் மஞ்சுளாவின் சகோதரர். நான் ஐதராபாத்துக்கு வந்தது முதல் அவர்களை தெரியும். நட்பு அடிப்படையில் கோரிக்கை வைத்தால் அரசியலில் குதித்துவிட்டேன் என அர்த்தமா?’ என்று ஆதங்கப்பட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் கதையில் நயன்தாரா ஒப்பந்தமாக இருந்த நிலையில், தற்போது அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #PonniyinSelvan #Maniratnam
அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்.
இந்த கதையை மணிரத்னம் இரண்டு பாகங்களாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். படத்தில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.

சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், அமிதாப் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் மோகன்பாபு மற்றும் சத்யராஜ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சூழ்ச்சி செய்யும் மாய மோகினி நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.
பூங்குழலியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் தளபதி 63, தர்பார் படங்களில் நயன்தாரா பிசியாகி இருப்பதால் அவருக்கு பதிலாக அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #PonniyinSelvan #Maniratnam #AnushkaShetty
என்.வி.நிர்மல்குமார் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகும் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சரத்குமார் மற்றும் பாரதிராஜா ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. #Sasikumar #NVNirmalKumar
சலீம், சதுரங்க வேட்டை 2 படங்களை இயக்கிய என்.வி.நிர்மல்குமார் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சரத்குமார் மற்றும் பாரதிராஜா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பாரதிராஜா ஏற்கனவே சுசீந்திரன் இயக்கத்தில் கென்னடி கிளப் படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு மும்பை செல்கிறது. #Sasikumar #NVNirmalKumar #SarathKumar #Bharathiraja
சீனு ராமசாமி இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகும் கிராமத்து கதையில் அவருக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகி இருக்கிறார். #ArulnidhiTamizharasu #SeenuRamasamy
அருள்நிதி தற்போது கே13 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பரத் நீலகண்டன் இயக்கும் இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில், அருள்நிதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
கண்ணே கலைமானே படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி நாயகனாக நடிக்கிறார். டைம்லைன் சினிமாஸ் சார்பில் சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் இந்த படம் கிராமத்து பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு மே மாதம் துவங்க இருக்கிறது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்துக்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனிக்கிறார். #ArulnidhiTamizharasu #SeenuRamasamy
பாராளுமன்ற தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்த நடிகர் சூர்யா, உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் என்று ட்விட் செய்துள்ளார். #LokSabhaElections2019
12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விஜய், பிரபு, விக்ரம் பிரபு, சசிகுமார், விஜய் ஆண்டனி, நடிகை குஷ்பு, மீனா, சுருதிஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர்.
உரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது.. உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம்..!#Elections2019#GoVoteTN@ECISVEEP#ECISVEEP@TNelectionsCEOpic.twitter.com/AcABcHc8zi
— Suriya Sivakumar (@Suriya_offl) April 18, 2019
நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா, நடிகர் கார்த்தி அவரது மனைவி ரஞ்சினி ஆகியோர் தியாகராய நகரில் உள்ள பள்ளி ஒன்றில் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு நடிகர் சூர்யா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
உரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது.. உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம்..!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #Suriya #Jyothika
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் ஒரு முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் பிரதிக் பாபர் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Darbar #Rajinikanth
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா வருகிறார். ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார்.
தர்பார் படத்தில் நடிக்கும் வில்லன்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்தி நடிகர் பிரதிக் பாபரை வில்லன் கதாபாத்திரத்துக்கு ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் 2015-ல் வெளியான ‘பாகி’ 2 படத்தில் வில்லனாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டார். ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளும் கிடைத்தன.

அந்த படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்து, தர்பார் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. தர்பார் படத்தில் பிரதிக் பாபர் மும்பையை ஆட்டி வைக்கும் தாதாவின் மகனாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர், நடிகைகள் தேர்வு தொடர்ந்து நடக்கிறது.
மும்பையில் 3 மாதங்கள் தொடர்ச்சியாக தர்பார் படப்பிடிப்பு நடக்க உள்ளது. பொங்கல் பண்டிகையன்று படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது. #Darbar #Rajinikanth #Nayanthara #ARMurugadoss






