என் மலர்
சினிமா செய்திகள்
பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று துவங்கிய நிலையில், ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். #LokSabhaElections2019
12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 96 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அனைவரும் தங்களது வாக்கினை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
திருவான்மியூரில் உள்ள பள்ளியில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வாக்கினை பதிவு செய்தார்#LokSabhaElections2019#AjithKumar#ShaliniAjithpic.twitter.com/J3ry1RZLWb
— Maalai Malar News (@maalaimalar) April 18, 2019
நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் வாக்களித்தனர். நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள பள்ளியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். நடிகர் கமல்ஹாசன் தனது மகள் சுருதிஹாசனுடன் தேனாம்பேட்டையில் உள்ள பள்ளியில் வாக்கினை பதிவு செய்தார். முன்னதாக கமல் வாக்குப்பதிவு செய்த பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்ததால், காத்திருந்து தனது ஓட்டை பதிவு செய்துவிட்டு சென்றார்.

மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் தங்களது ஓட்டை பதிவு செய்தனர். #LokSabhaElections2019 #Rajinikanth #KamalHaasan #AjithKumar #Vijay
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் மகத், தன்னுடைய காதலி பிராச்சி மிஸ்ராவுடன் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளார். #Mahat
மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மகத். இவரும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். பின்னர் நடிகர் மகத் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடிகை யாஷிகா மீது காதல் வயப்பட்டார்.
இதனால், மகத்துக்கும், பிராச்சிக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத், பிராச்சியை சந்தித்து மீண்டும் காதலை வளர்த்துக் கொண்டார்.
👫❤️ #Engagedpic.twitter.com/JIbzNjefKp
— Mahat Raghavendra (@MahatOfficial) April 17, 2019
தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் மகத், தன்னுடைய காதலியான பிராச்சியை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.
பிரேம் படம் மூலம் மிகவும் பிரபலமாகி தற்போது தமிழில் பல படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி, வித்தியாசமான ஆசை இருப்பதாக கூறியிருக்கிறார். #SaiPallavi
சூர்யா ஜோடியாக சாய்பல்லவி, நடித்துள்ள என்.ஜி.கே. படம் விரைவில் திரைக்கு வருகிறது. மேலும் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். தெலுங்கு, மலையாளத்திலும் பட வாய்ப்புகள் வருகின்றன. சாய்பல்லவி அளித்த பேட்டி வருமாறு:-
“நான் டாக்டருக்கு படித்து விட்டு நடிக்க வந்தேன். சினிமாவுக்கு திட்டம் போட்டு வரவில்லை. இந்த துறையில் தினமும் புதுமையான விஷயங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. சினிமாவில் எனக்கு வாய்ப்புகள் இருப்பது வரை நடிப்பேன். மார்க்கெட் குறைந்தால் என்னுடைய டாக்டர் தொழிலை பார்க்க போய்விடுவேன்.

எனக்கு சுற்றுப்பயணம் பிடிக்கும். நடனத்திலும் விருப்பம். நான் என்னை மாதிரி இருக்க விரும்புகிறேன். நடித்த படங்களில் வித்தியாசமான படம் தியா. ஒரு தாயாக நடித்தேன். இந்த படம் மூலம் என்னை மேலும் மெருகேற்றினேன். மாற்றங்களை நான் விரும்புவது இல்லை. ஒரே மாதிரி உணவை சாப்பிடுவேன். சிறுவயதில் இருந்து, பழகியவர்களுடன் தான் நட்பாக இருப்பேன்.
ஆனால் சினிமா தொழில் இதற்கு வித்தியாசமானது. எல்லாவித கதாபாத்திரங்களையும் செய்ய ஆசை இருக்கிறது. நான் நடித்த ஒவ்வொரு படமும் வெவ்வேறு விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்து இருக்கிறது. எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் வந்துள்ளது. எல்லோருக்கும் ஒரு கருத்து கொடுக்கிற கதையில் நடிக்க ஆசை இருக்கிறது.” இவ்வாறு சாய்பல்லவி கூறினார்.
கேணி படத்தை இயக்கிய இயக்குனர் எம்.ஏ.நிஷாத், தற்போது வாக்கு படத்தில் நடித்ததற்காக சிறப்பு விருதை பெற்றிருக்கிறார். #MANishad #Vaaku
தமிழக - கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சினையை மையமாக வைத்து கடந்த வருடம் வெளியான படம் "கேணி". இதில் பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, நாசர், ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாகி இருந்த இந்தப்படத்தில் கிட்டத்தட்ட முல்லைப் பெரியாறு பிரச்சினை போலவே இருந்த கதையை மிகவும் கவனமுடன் கையாண்டிருந்தார் இயக்குனர்.

எல்லோரது பாராட்டுக்களையும் பெற்ற இப்படத்தின் இயக்குனர் எம்.ஏ.நிஷாத்-திற்கு, கேரள அரசு சிறந்த கதை ஆசிரியருக்கான விருது வழங்கி கௌரவித்தது.
தற்போது ‘வாக்கு’ படத்தில் நடித்ததற்காக கேரளா பிலிம் கிரிட்டிக்ஸ் அசோஷியேஷன் ஸ்பெஷல் ஜூரி விருது வழங்கி கௌரவித்துள்ளது.
கிராமத்து கிரிக்கெட் வீரர்களை சென்னைக்கு வரவழைத்து விருந்து மற்றும் விருது கொடுத்து அவர்களை சிவகார்த்திகேயன் நெகிழ வைத்திருக்கிறார். #Sivakarthikeyan
இயக்குனர் பொன்ராம், இயக்குனர் எம்.பி.கோபி அவர்களின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அணியினரை சென்னைக்கு வரவழைத்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் படப்பிடிப்பில் மதியம் விருந்தும், விருதும் கொடுத்து அவர்களை கௌரவப்படுத்தியுள்ளார்.

கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு சென்னையில் சிவகார்த்திகேயனின் கரங்களால் விருது வழங்கியதை நினைத்து பெரும் அகிழ்ச்சியடைகிறோம் என்று வெற்றி பெற்ற அணியினர் கூறியுள்ளனர்.
தாடி பாலாஜி மனைவி நித்யா, தேசிய பெண்கள் கட்சி சார்பாக டெல்லியில் போட்டியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார். #ThadiBalaji #Nithya
பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜியும், மனைவி நித்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டு பிரபலம் ஆனார்கள்.
நித்யா சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ‘தேசிய பெண்கள் கட்சி’ யில் இணைந்தார். அந்தக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அந்த கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் போட்டியிடுகிறார். இது குறித்து நித்யா கூறியதாவது:-
‘காஞ்சிபுரம் தனித் தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருந்தேன். ஆனால் நான் தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அங்க போய் என்னை பற்றி அவதூறு பரப்ப பாலாஜி திட்டமிட்டு இருந்தார்.

டெல்லியில் எங்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகளுக்கே போன் செய்து ‘அவள் எல்லாம் கட்சித் தலைவியா’ என்று கேட்டு பிரச்சினை செய்து இருக்கிறார். இவர் சொன்ன எதையும் கவனத்தில் கொள்ளாத எங்கள் கட்சியின் தலைநகர் நிர்வாகிகள்தான் என்னை டெல்லியில் போட்டியிட அறிவுறுத்தினார்கள்.
வடக்கு டெல்லியில் தமிழர்கள் பரவலாக வசிப்பது எனக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கு. அதனால் சரி என்று சொல்லி விட்டேன். அடுத்த சில நாள்களில் டெல்லி போய் தேர்தல் வேலைகளை தொடங்கவேண்டும்.’’
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கைக்கதை படத்திற்காக பரினீதி, தீவிரமாகப் பயிற்சி செய்து வருகிறார். #SainaNehwal #Parineeti
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கைக்கதை திரைப்படமாகிறது. இதில் சாய்னாவாக பரினீதி சோப்ரா நடிக்க இருக்கிறார். இதற்காக தினமும் இரண்டு மணி நேரம் சாய்னாவின் ஆட்டங்களைப் பார்த்து தயாராகி வருவதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருக்கிறார்.
அமோல் குப்தா இயக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ’நான் காட்சிகளின் வழியே கற்றுகொள்வேன். அதனால், சாய்னாவின் பேட்மிண்டன் ஆட்டங்களைப் பார்த்து, அவர் எப்படி விளையாடுகிறாரோ, அப்படியே விளையாடுவதற்குத் தயாராகி வருகிறேன்.

இதுவரையில் இவ்வளவு பேட்மிண்டன் ஆட்டங்களை நான் பார்த்ததில்லை. சாய்னாவின் உடல்மொழியைத் திரையில் கொண்டு வருவதற்காகத் தீவிரமாகப் பயிற்சி செய்து வருகிறேன்” என்று கூறி இருக்கிறார்.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘தமிழரசன்’ படத்திற்காக இளையராஜா - யேசுதாஸ் இருவரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். #Ilayaraja #Yesudas
விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் படம், `தமிழரசன்’. `தாஸ்’ படத்தை இயக்கிய பாபு யோகேஷ்வரன் இப்படத்தை இயக்குகிறார். விஜய் ஆண்டனியின் நீண்ட நாள் கனவான இளையராஜா இசையமைப்பில் நடிப்பது இப்படம் மூலம் நிறைவேறியது.
இளையராஜா ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக ராஜா இசையில் கே.ஜே.யேசுதாஸ் பாடியுள்ளார். ``பொறுத்தது போதும் பொங்கிட வேணும் புயலென வா“ என்ற புரட்சிகரமான பாடலை யேசுதாஸ் பாட இளையராஜா இசையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. `நந்தலாலா’ படத்துக்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து இளையராஜா இசையில் இவர் பாடுவது குறிப்பிடத்தக்கது.

`கத்தி’ படத்தில் யேசுதாஸ் பாடிய `யார் பெற்ற மகனோ’ பாடலுக்குப் பிறகு இப்பாடல் பேசும்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. `தமிழரசன்’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ளதால், தியேட்டர்களில் நாளை காலை மற்றும் மதியம் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #CinemaShowsCancel
தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

இந்த தேர்தலில் மக்கள் பணிச்சுமையின்றி வாக்களிக்கும் வகையில், நாளை (ஏப்ரல் 19) அரசு விடுமுறை தினம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களும் சிரமம் இன்றி வாக்களிக்க ஏதுவாக, அவர்களுக்கு நாளை சம்பளத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தலையொட்டி தமிழகம் முழுவதிலும் உள்ள தியேட்டர்களில் நாளை காலை மற்றும் மதியம் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. #LokSabhaElections2019 #CinemaShowsCancel
சூர்யா - ஹரி கூட்டணிய 6-வது முறையாக யானை என்ற படத்தில் இணையவிருப்பதாக கூறப்பட்ட நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. #Suriya #Hari
தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து சூர்யா செல்வராகவன், ஹரி, சுதா கொங்காரா, கே.வி.ஆனந்த் படங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஒரு மாதத்திற்கு முன்பு படத்திற்கு யானை என்று தலைப்பு வைத்திருப்பதாகவும் என்ஜிகே, காப்பான் படங்களுக்கு பிறகு சூர்யா ஹரி படத்தில் நடிப்பார் என்றும் கூறப்பட்டது.
சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இதன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஹரி படத்தில் இருந்து சூர்யா விலகியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டணி ஏற்கனவே 5 படங்களில் இணைந்திருக்கும் நிலையில், விரைவில் மீண்டும் இணைந்தாலும் அதிர்ச்சி அடைவதற்க்கில்லை.
போலீஸ் கதையாக உருவாக இருந்த இந்த படத்தில் இருந்து சூர்யா விலகியதையடுத்து இந்த படத்தில் நடிக்க ஹரி, ஜெயம் ரவியை அணுகியதாகவும், தேதி பிரச்சனையால் அவரும் ஒப்பந்தமாகவில்லை என்றும் சில தகவல்கள் பரவி வருகின்றன. எனினும் இதில் உண்மையில்லை என்றும், ஹரி தற்போது தனது அடுத்த படத்திற்கான பணியில் பிசியாகி இருப்பதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. #Suriya #Hari
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் - காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு தரப்பு பிரச்சனையால், படத்திற்கு சிக்கல் வந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Indian2 #KamalHaasan
கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் கமல் - ஷங்கர் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது.
இப்படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், சித்தார்த் ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அனிருத் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் நடந்த நிலையில் திடீரென்று நிறுத்தப்பட்டது. பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் பிசியானதால் நிறுத்தப்பட்டதாகவும் மேக்கப் சரியில்லாததால் நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

நாளை தேர்தல் நடைபெற்று முடிவுகள் மே 23-ந் தேதி வெளியாக இருக்கின்றன. எனவே கமல்ஹாசன் மீண்டும் படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டார் என்கிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு இந்த மாத இறுதியிலோ அடுத்த மாத தொடக்கத்திலோ தொடங்கப்படலாம் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்ட லைகா புரொடக்ஷன்ஸ் படத் தயாரிப்பில் இருந்து பின்வாங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே வேறு தயாரிப்பு நிறுவத்துடன் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த பாகம் வரும் ஜூன், ஜூலையில் தொடங்கப்பட இருக்கிறது. அதற்குள் படத்தில் கமல் இடம்பெறும் காட்சிகளை படம் பிடிக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். #Indian2 #KamalHaasan #KajalAggarwal #Shankar
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இல்லாமல், வில்லியாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Darbar #Rajinikanth
பேட்ட படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.
ஆனால் அவர் இப்படத்தில் ரஜினியின் ஜோடி இல்லை, படத்தில் ரஜினிக்கு ஜோடியே இல்லை என்றும் தகவல் வருகிறது. தந்தை மகள் பாசத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார் எனவும், நயன்தாரா இந்த படத்தில் ரஜினிக்கு வில்லியாக அல்லது ஒரு முக்கியமான கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

படம் முழுக்க வரும் கேரக்டர் என்பதால் இந்த படத்துக்காக தொடர்ச்சியாக 60 நாட்கள் வரை நயன்தாரா கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். ஏற்கனவே சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களில் ரஜினி-நயன்தாரா ஜோடி இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #Darbar #Rajinikanth #Nayanthara #ARMurugadoss






