என் மலர்

  நீங்கள் தேடியது "Mr Local"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதீஷ், ரோபோ சங்கர், யோகிபாபு நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் விமர்சனம்.
  நாயகன் சிவகார்த்திகேயன் கார் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் சதீஷ், ரோபோ சங்கர் ஆகியோர் வேலை பார்த்து வருகிறார்கள். சிவகார்த்திகேயனின் அம்மாவான ராதிகா, டி.வி.சீரியல் நடிகையிடம் ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்கிறார். அம்மாவின் ஆசை நிறைவேற்றுவதற்காக டி.வி. நடிகையிடம் பேசி போட்டோ எடுக்க அனுமதி வாங்குகிறார்.

  டி.வி. நடிகையை பார்க்க படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் அங்கு டி.வி. தொடர் தயாரிப்பாளர் நாயகி நயன்தாராவை சந்திக்கிறார். இவர்களின் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்கிறது. இந்த மோதலில் டி.வி. நடிகைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பின்னர் டி.வி. நடிகைக்காக பேச போய், மீண்டும் சிவகார்த்திகேயனுக்கும் நயன்தாராவிற்கும் மோதல் ஏற்படுகிறது.  அடிக்கடி நடக்கும் மோதலால் சிவகார்த்திகேயனுக்கு நயன்தாரா மீது காதல் ஏற்படுகிறது. மிகவும் செல்வந்தராக இருக்கும் நயன்தாராவிடம் மிடில் கிளாசை சேர்ந்த சிவகார்த்திகேயன், தன்னுடைய காதலை சொன்னாரா? இருவரும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

  படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், தனக்கே உரிய பாணியில் காமெடி, ஆக்‌ஷன், நடனம் என அனைத்திலும் சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார். இவரின் டைமிங் காமெடி பெரிதும் உதவி இருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா படம் முழுவதும் அழகு பதுமையாக வருகிறார். சிவகார்த்திகேயன் மீது கோபம் காட்டும் போதும், அன்பு காட்டும் போதும் அழகாகவே நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.  சிவகார்த்திகேயனுடன் வேலை பார்க்கும் சதீஷ், ரோபோ சங்கர், ஆட்டோ ஓட்டுநராக வரும் யோகிபாபு ஆகியோர் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள். வெகுளியான தாயாக நடித்து மனதில் பதிந்திருக்கிறார் ராதிகா. அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார் மேனேஜராக வரும் தம்பிராமையா. 

  காமெடி படங்களுக்கு மிகவும் பெயர் பெற்ற இயக்குனர் ராஜேஷ், இந்த படத்தையும் தன்னுடைய வழக்கமான பாணியிலேயே இயக்கி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். குடிப்பது, புகைப்பிடிக்கும் காட்சிகள் இல்லாமல் எடுத்தது சிறப்பு. திரைக்கதையின் நீளம் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. அதுபோல் நகைச்சுவை இன்னும் அதிகமாக இருந்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.  வில்சன் மற்றும் தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். பின்னணி இசையில் மிரள வைத்திருக்கிறார்.

  மொத்தத்தில் ‘மிஸ்டர்.லோக்கல்’  பொழுதுபோக்கு.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர்.லோக்கல், கவுதம் கார்த்திக் நடித்துள்ள தேவராட்டம் படங்களின் ரிலீஸ் தேதிகளை படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் மாற்றி புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. #MrLocal #Devarattam
  எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மிஸ்டர்.லோக்கல். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். மே 1-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

  அதேபோல் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் தேவராட்டம் படத்தையும் இந்த நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் மே 17-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த இரு படங்களின் ரிலீஸ் தேதியை மாற்றி புதிய ரிலீஸ் தேதியை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.


  அதன்படி, கவுதம் கார்த்திக்கின் தேவராட்டம் வருகிற மே 1-ந் தேதியும், சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் மே 17-ந் தேதியும் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #MrLocal #Devarattam #Sivakarthikeyan #GauthamKarthik

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கிராமத்து கிரிக்கெட் வீரர்களை சென்னைக்கு வரவழைத்து விருந்து மற்றும் விருது கொடுத்து அவர்களை சிவகார்த்திகேயன் நெகிழ வைத்திருக்கிறார். #Sivakarthikeyan
  இயக்குனர் பொன்ராம், இயக்குனர் எம்.பி.கோபி அவர்களின் சொந்த ஊரான உசிலம்பட்டியில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களையும் மாணவர்களையும் ஊக்கு விப்பதற்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் விழா நடத்தினர். அதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பதினாறு அணிகள் கலந்து கொண்டனர்.

  இதில் வெற்றி பெற்ற அணிக்கு திரைப்பட நடிகர் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அணியினரை சென்னைக்கு வரவழைத்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் படப்பிடிப்பில் மதியம் விருந்தும், விருதும் கொடுத்து அவர்களை கௌரவப்படுத்தியுள்ளார்.  கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு சென்னையில் சிவகார்த்திகேயனின் கரங்களால் விருது வழங்கியதை நினைத்து பெரும் அகிழ்ச்சியடைகிறோம் என்று வெற்றி பெற்ற அணியினர் கூறியுள்ளனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. #MrLocal
  எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

  ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  ஹிப் ஹாப் ஆதி இசையில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல்களை ஏப்ரல் 20ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மே 1ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. #Sivakarthikeyan #MrLocal #Nayanthara
  எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

  ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.  சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதில் நயன்தாரா பேசும் ‘லோக்கலான பசங்கள பார்த்தாலே பிடிக்காது’ என்ற வசனம் வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. சிவகார்த்திகேயன் - நயன்தாராவுக்கும் இடையே நடக்கும் மோதலை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். 

  இப்படம் மே மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. #Sivakarthikeyan #MrLocal #Nayanthara
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ திரைப்படம் அஜித் பிறந்தநாளில் வெளியாக இருக்கிறது. #Sivakarthikeyan #MrLocal #Nayanthara
  எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

  ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.  இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது இப்படத்தை மே மாதம் 1ம் தேதி, அஜித் பிறந்த நாளில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Sivakarthikeyan #MrLocal #Nayanthara
  ×