என் மலர்

  நீங்கள் தேடியது "Devarattam"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நெல்லையில் உள்ள தியேட்டரில் நடந்த தேவராட்டம் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கவுதம் கார்த்திக் எனது தந்தை மிகப்பெரிய நடிகர், அவரைப்போல் நடிக்க முடியாது என்றார். #Devarattam #GauthamKarthik
  இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சுமா மோகன் இணைந்து நடித்துள்ள ‘தேவராட்டம்‘  திரைப்படம் நாளை மறுநாள் (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் வெளியாகிறது.

  இந்த படத்தின் டிரைலர் பல்வேறு தியேட்டர்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. நெல்லையில் உள்ள திரையரங்கு ஒன்றில்நேற்று மாலை காட்சியின் போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

  அதனை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பதற்காக கவுதம் கார்த்திக், மஞ்சுமா மோகன், இயக்குனர் முத்தையா ஆகியோர் தியேட்டருக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு திரையரங்கம் சார்பில், மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் ரசிகர்களுடன் அமர்ந்து தேவராட்டம் படத்தின் டிரைலரை கண்டு ரசித்தனர்.

  பின்னர் நடிகர் கவுதம் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-

  ‘தேவராட்டம்‘ படம் கிராமிய சூழலில் உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் பார்க்கும்படியாக இருக்கும். இந்த படத்தில் நடித்தவர்கள் ஒரு குடும்பத்தினர் போல பழகினர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.  செல்லப்பிள்ளை என்ற படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதுபோல பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனது தந்தை (கார்த்திக்) மிகப்பெரிய நடிகர். அவரைப் போல் என்னால் நடிக்க முடியாது. முடிந்த அளவுக்கு அவரைபோல் நடிக்க முயற்சி செய்வேன்.

  எனது தந்தை அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் பிரசாரம் செய்தார். என்னை பொறுத்தவரை இப்போது அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை. நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கவே ஆசைப்படுகிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இயக்குனர் முத்தையா கூறும்போது, “தேவராட்டம் எனது 5-வது படம். தமிழ் பண்பாடு, கலாசாரம், உறவு, மண்வாசனை ஆகியவற்றை மையமாக வைத்துதான் படம் எடுக்கிறேன். தமிழ் உறவுகள் நிலைத்து நிற்கவேண்டும். நமது உறவை பற்றி வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற கருத்துகளை மையமாக வைத்துதான் படங்கள் எடுத்து வருகிறேன்.

  எனது படத்தின் பெயர்கள் சர்ச்சையை ஏற்படுத்துவது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. கதையை மையமாக வைத்துதான் படத்தின் பெயரை சூட்டுகிறேன். என்றார். #Devarattam #GauthamKarthik #ManjimaMohan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கவுதம் கார்த்திக்குடன் தேவராட்டம் படத்தில் நடித்துள்ள மஞ்சிமா மோகன், நான் ரொம்ப பாவம் என்று கூறியிருக்கிறார். #Devarattam #ManjimaMohan
  அச்சம் என்பது மடமையடா படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இப்படத்தை தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது கவுதம் கார்த்திக்கு ஜோடியாக ‘தேவராட்டம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 1ம் தேதி வெளியாக இருக்கிறது.

  மாலைமலருக்கு கவுதம் கார்த்திக் அளித்த பேட்டியில், மஞ்சிமா மோகன் மிகவும் திறமையானவர், தனக்கு தெரிந்த விஷயத்தை மற்றவர்களுக்கு ஆழமாக விவரிப்பார். நான் எதாவது கேள்வி கேட்டு அதை விட்டுவிடுவேன். ஆனால், மஞ்சிமா அதைப்பற்றி விவரித்துக் கொண்டே இருப்பார். இதைப் பார்த்த பாபா மாஸ்டர், என்னப்பா அந்த பெண்ணை பேச வைத்துக் கொண்டே இருக்கிறாய் என்று கேட்டார். அதற்கும் மஞ்சிமா ஒரு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார். இப்படி படப்பிடிப்பு தளத்தில் நடந்தது என்று கூறினார்.  இதற்கு மஞ்சிமா, நான் என்னுடைய கண்ணோட்டத்தில் இருப்பதை மற்றவர்களுக்கு விவரிப்பேன். அதற்காக கொஞ்சம் பேசுவேன். இதை கவுதம் இப்படி கூறுகிறார். நான் படப்பிடிப்பு தளத்தில் பாவமாக இருப்பேன். 

  இதற்கு கவுதம் கார்த்திக், மஞ்சிமாவை நம்பாதிங்க, நான்தான் பாவம் என்று கலகலப்பாக கூறினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவராட்டம்' படத்தின் முன்னோட்டம். #Devarattam #GauthamKarthik
  ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 
  `தேவராட்டம்'.

  கவுதம் கார்த்திக் நாயகனாகவும், மஞ்சிமா மோகன் நாயகியாகவும் நடித்துள்ளனர். சூரி, பெப்சி விஜயன், வேல ராமமூர்த்தி, ராமதாஸ், போஸ் வெங்கட், வினோதினி வைதியநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  ஒளிப்பதிவு - சக்தி சரவணன், இசை - நிவாஸ் கே.பிரசன்னா, படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல், சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், நடனம் - பாபா பாஸ்கர், தயாரிப்பு - கே.ஈ.ஞானவேல் ராஜா, எழுத்து, இயக்கம் - முத்தையா.  படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் முத்தையா பேசும் போது,

  என்னுடைய படங்கள் ஜாதியை வைத்து எடுக்கப்படுவதாக கூறுகிறார்கள். அப்படியில்லை, உறவுகள் பற்றி தான் நான் படம் எடுத்திருக்கிறேன், ஜாதியை வைத்து படம் எடுக்கவில்லை. எனக்கும் கிராமத்து கதையில் இருந்து நகரத்தில் நடக்கும் ஒரு கதையை படமாக பண்ண வேண்டும் என்று தான் ஆசை. ஆனால், தயாரிப்பாளர்கள் கிராமத்து கதையே கேட்கிறார்கள். 

  ஊர் சாயலில் படம் பண்ண வேண்டும் என்றால், அதில் சண்டை, அரிவாள் எல்லாம் வர தான் செய்யும். என்னுடைய அனைத்து படமும் குடும்பம் பற்றி தான் இருக்கும். உறவுகளை வைத்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உறவுகள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. பொள்ளாச்சி சம்பவத்தில் அப்படி ஈடுபட்டவர்களை பலரும் வெட்டவேண்டும் கொல்ல வேண்டும் என்றார்கள். அதை நிஜத்தில் செய்ய முடியவில்லை. அதனால் தான் அதைப் படத்தில் வைக்கிறோம் என்றார்.

  படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. #Devarattam #GauthamKarthik #ManjimaMohan

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேவராட்டம் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கவுதம் கார்த்திக், அவருடன் நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்று கூறியுள்ளார். #Devarattam #GauthamKarthik
  முத்தையா இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தேவராட்டம்’. இதில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாகவும், மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. 

  இதில் கவுதம் கார்த்தி பேசும்போது, "இந்தப்படம் என்னை காப்பாற்றும் என்று நம்புகிறேன். எனக்கு இந்தப்படம் வந்ததிற்கு காரணம் ஞானவேல்ராஜா சார் தான். முத்தையா சார் தான் மதுரை மக்களின் பாஷையையும் வாழ்க்கை முறைகளையும் சொல்லித் தந்தார். சத்தியமாக மதுரை மக்களின் பாசம் போல யாரும் வைக்க முடியாது. பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது.   என் அப்பாவிற்கு பசப்புக்கள்ளி பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. மஞ்சுமா மோகன் நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார். சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து விடுவார். ஒளிப்பதிவாளர் என்னையை மிக அழகாக காட்டி இருக்கிறார். மதுரை மிக மிக அழகாக காட்டி இருக்கிறார். நான் முத்தையா சாருடன் நிறைய படங்கள் பண்ணவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அவர் எனக்கு நிறைய சொல்லித் தந்திருக்கிறார்" என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவத்தின் வெளிப்பாடுதான் ஹீரோ கேரக்டர் என்று தேவராட்டம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் முத்தையா கூறியுள்ளார். #Devarattam
  முத்தையா இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தேவராட்டம்’. இதில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாகவும், மஞ்சிமா மோகன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. 

  இதில் இயக்குனர் முத்தையா பேசும்போது, "நான் படிப்பில் மிடில் கிளாஸ் தான். இந்தப்படத்தில் வேலை செய்த எல்லோருமே படித்தவர்கள். ஹீரோ, கேமரா மேன், இசை அமைப்பாளர் இவர்களோடு வேலை செய்வது மனைவியோடு லைப் நடத்துவது போல. சரியாக இல்லாவிட்டால் சிக்கல் தான். ஞானவேல்ராஜா சாரிடம் கொம்பன் படம் நேரத்திலே கவுதமை வைத்து படம் எடுக்கலாம் என்றேன். 

  அவர் கார்த்தியைத் தாரேன் என்றார். ஆனால் இன்று ஞானவேல்ராஜா சார் படத்தில் கவுதம் கார்த்தி இருக்கிறார் இதுதான் அவரது வளர்ச்சி. கொம்பன் படம் எனக்கு நல்ல அடையாளம். தேவராட்டம் சாதிப்படம் கிடையாது. எனக்கு அது தெரியவும் தெரியாது. குடும்ப உறவுகளைப் பற்றிய படம் தான் இது.   ஏன் உன் படத்தில் அருவாள் இருக்கிறது என்கிறார்கள். கமர்சியல் படம் என்றால் அதை வைத்து தான் ஆகவேண்டிய இருக்கிறது. வெளியில் வந்தால் தான் பிரண்ட்ஷிப். வீட்டுக்குள் வந்தால் உறவு தான். உறவுகள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. பொள்ளாச்சி சம்பவத்தில் அப்படி ஈடுபட்டவர்களை பலரும் வெட்டவேண்டும் கொல்ல வேண்டும் என்றார்கள். அதை நிஜத்தில் செய்ய முடியவில்லை. அதனால் தான் அதைப் படத்தில் வைக்கிறோம். 

  கோவத்தின் வெளிப்பாடு தான் ஹீரோவின் கேரக்டர். பணம் என்பது சினிமாவுக்கு ரொம்ப முக்கியம். அதனால் தான் கமர்சியல் விசயங்களை படத்தில் அதிகமாக வைக்கிறேன். சிட்டியில் படம் எடுத்தாலும் உறவுகளைப் பற்றித்தான் படம் எடுப்பேன். தயவுசெய்து என்னை சாதிக்குள் கொண்டுபோய் விடாதீர்கள். இந்தப்படத்தை இவ்வளவு சீக்கிரமாக எடுக்க முடிந்ததிற்கு படத்தில் உழைத்த அனைவரும் காரணம். இந்தப்படத்தை முழுதும் பார்த்துவிட்டு ஞானவேல்ராஜா சந்தோஷப்பட்டார். அதுதான் எனக்கு முதல் சந்தோஷம்" என்றார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர்.லோக்கல், கவுதம் கார்த்திக் நடித்துள்ள தேவராட்டம் படங்களின் ரிலீஸ் தேதிகளை படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் மாற்றி புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. #MrLocal #Devarattam
  எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மிஸ்டர்.லோக்கல். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். மே 1-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

  அதேபோல் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் தேவராட்டம் படத்தையும் இந்த நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் மே 17-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த இரு படங்களின் ரிலீஸ் தேதியை மாற்றி புதிய ரிலீஸ் தேதியை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.


  அதன்படி, கவுதம் கார்த்திக்கின் தேவராட்டம் வருகிற மே 1-ந் தேதியும், சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் மே 17-ந் தேதியும் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #MrLocal #Devarattam #Sivakarthikeyan #GauthamKarthik

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கவிருக்கும் `தேவராட்டம்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகி உள்ளார். #Devarattam #ManjimaMohan
  `கொடிவீரன்' படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் `தேவராட்டம்'. கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க மஞ்சிமா மோகன் ஒப்பந்தமாகி இருக்கிறார். 

  ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய பிரவீன்.கே.எல். படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். `முத்துராமலிங்கம்' படத்திற்கு பிறகு மீண்டும் கிராமத்து சாயலில் நடிக்க இருக்கிறார் கவுதம் கார்த்திக்.   சமீபத்தில் இந்த படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Devarattam #GauthamKarthik #ManjimaMohan

  ×