என் மலர்
சினிமா

தேவராட்டம்
முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவராட்டம்' படத்தின் முன்னோட்டம். #Devarattam #GauthamKarthik
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்
`தேவராட்டம்'.
கவுதம் கார்த்திக் நாயகனாகவும், மஞ்சிமா மோகன் நாயகியாகவும் நடித்துள்ளனர். சூரி, பெப்சி விஜயன், வேல ராமமூர்த்தி, ராமதாஸ், போஸ் வெங்கட், வினோதினி வைதியநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - சக்தி சரவணன், இசை - நிவாஸ் கே.பிரசன்னா, படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல், சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், நடனம் - பாபா பாஸ்கர், தயாரிப்பு - கே.ஈ.ஞானவேல் ராஜா, எழுத்து, இயக்கம் - முத்தையா.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் முத்தையா பேசும் போது,
என்னுடைய படங்கள் ஜாதியை வைத்து எடுக்கப்படுவதாக கூறுகிறார்கள். அப்படியில்லை, உறவுகள் பற்றி தான் நான் படம் எடுத்திருக்கிறேன், ஜாதியை வைத்து படம் எடுக்கவில்லை. எனக்கும் கிராமத்து கதையில் இருந்து நகரத்தில் நடக்கும் ஒரு கதையை படமாக பண்ண வேண்டும் என்று தான் ஆசை. ஆனால், தயாரிப்பாளர்கள் கிராமத்து கதையே கேட்கிறார்கள்.
ஊர் சாயலில் படம் பண்ண வேண்டும் என்றால், அதில் சண்டை, அரிவாள் எல்லாம் வர தான் செய்யும். என்னுடைய அனைத்து படமும் குடும்பம் பற்றி தான் இருக்கும். உறவுகளை வைத்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உறவுகள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. பொள்ளாச்சி சம்பவத்தில் அப்படி ஈடுபட்டவர்களை பலரும் வெட்டவேண்டும் கொல்ல வேண்டும் என்றார்கள். அதை நிஜத்தில் செய்ய முடியவில்லை. அதனால் தான் அதைப் படத்தில் வைக்கிறோம் என்றார்.
படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. #Devarattam #GauthamKarthik #ManjimaMohan
Next Story






