search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fefsi Vijayan"

    நெல்லையில் உள்ள தியேட்டரில் நடந்த தேவராட்டம் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கவுதம் கார்த்திக் எனது தந்தை மிகப்பெரிய நடிகர், அவரைப்போல் நடிக்க முடியாது என்றார். #Devarattam #GauthamKarthik
    இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சுமா மோகன் இணைந்து நடித்துள்ள ‘தேவராட்டம்‘  திரைப்படம் நாளை மறுநாள் (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் வெளியாகிறது.

    இந்த படத்தின் டிரைலர் பல்வேறு தியேட்டர்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. நெல்லையில் உள்ள திரையரங்கு ஒன்றில்நேற்று மாலை காட்சியின் போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

    அதனை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பதற்காக கவுதம் கார்த்திக், மஞ்சுமா மோகன், இயக்குனர் முத்தையா ஆகியோர் தியேட்டருக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு திரையரங்கம் சார்பில், மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் ரசிகர்களுடன் அமர்ந்து தேவராட்டம் படத்தின் டிரைலரை கண்டு ரசித்தனர்.

    பின்னர் நடிகர் கவுதம் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘தேவராட்டம்‘ படம் கிராமிய சூழலில் உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் பார்க்கும்படியாக இருக்கும். இந்த படத்தில் நடித்தவர்கள் ஒரு குடும்பத்தினர் போல பழகினர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.



    செல்லப்பிள்ளை என்ற படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதுபோல பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனது தந்தை (கார்த்திக்) மிகப்பெரிய நடிகர். அவரைப் போல் என்னால் நடிக்க முடியாது. முடிந்த அளவுக்கு அவரைபோல் நடிக்க முயற்சி செய்வேன்.

    எனது தந்தை அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் பிரசாரம் செய்தார். என்னை பொறுத்தவரை இப்போது அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை. நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கவே ஆசைப்படுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இயக்குனர் முத்தையா கூறும்போது, “தேவராட்டம் எனது 5-வது படம். தமிழ் பண்பாடு, கலாசாரம், உறவு, மண்வாசனை ஆகியவற்றை மையமாக வைத்துதான் படம் எடுக்கிறேன். தமிழ் உறவுகள் நிலைத்து நிற்கவேண்டும். நமது உறவை பற்றி வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற கருத்துகளை மையமாக வைத்துதான் படங்கள் எடுத்து வருகிறேன்.

    எனது படத்தின் பெயர்கள் சர்ச்சையை ஏற்படுத்துவது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. கதையை மையமாக வைத்துதான் படத்தின் பெயரை சூட்டுகிறேன். என்றார். #Devarattam #GauthamKarthik #ManjimaMohan

    முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவராட்டம்' படத்தின் முன்னோட்டம். #Devarattam #GauthamKarthik
    ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 
    `தேவராட்டம்'.

    கவுதம் கார்த்திக் நாயகனாகவும், மஞ்சிமா மோகன் நாயகியாகவும் நடித்துள்ளனர். சூரி, பெப்சி விஜயன், வேல ராமமூர்த்தி, ராமதாஸ், போஸ் வெங்கட், வினோதினி வைதியநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - சக்தி சரவணன், இசை - நிவாஸ் கே.பிரசன்னா, படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல், சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், நடனம் - பாபா பாஸ்கர், தயாரிப்பு - கே.ஈ.ஞானவேல் ராஜா, எழுத்து, இயக்கம் - முத்தையா.



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் முத்தையா பேசும் போது,

    என்னுடைய படங்கள் ஜாதியை வைத்து எடுக்கப்படுவதாக கூறுகிறார்கள். அப்படியில்லை, உறவுகள் பற்றி தான் நான் படம் எடுத்திருக்கிறேன், ஜாதியை வைத்து படம் எடுக்கவில்லை. எனக்கும் கிராமத்து கதையில் இருந்து நகரத்தில் நடக்கும் ஒரு கதையை படமாக பண்ண வேண்டும் என்று தான் ஆசை. ஆனால், தயாரிப்பாளர்கள் கிராமத்து கதையே கேட்கிறார்கள். 

    ஊர் சாயலில் படம் பண்ண வேண்டும் என்றால், அதில் சண்டை, அரிவாள் எல்லாம் வர தான் செய்யும். என்னுடைய அனைத்து படமும் குடும்பம் பற்றி தான் இருக்கும். உறவுகளை வைத்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உறவுகள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. பொள்ளாச்சி சம்பவத்தில் அப்படி ஈடுபட்டவர்களை பலரும் வெட்டவேண்டும் கொல்ல வேண்டும் என்றார்கள். அதை நிஜத்தில் செய்ய முடியவில்லை. அதனால் தான் அதைப் படத்தில் வைக்கிறோம் என்றார்.

    படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. #Devarattam #GauthamKarthik #ManjimaMohan

    மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் - தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தடம்’ படத்தின் முன்னோட்டம்.
    ‘குற்றம் 23’ படத்தை தயாரித்த ரெதான்-தி பீப்பிள் நிறுவனம் சார்பாக இந்தர் குமார் தயாரித்துள்ள படம் ‘தடம்’. 

    இதில் அருண்விஜய் நாயகனாக நடிக்க, அவருடன் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளார்கள். சோனியா அகர்வால், யோகி பாபு, பெஃப்சி விஜயன், மீரா கதிரவன், சாம்ஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - எஸ்.கோபிநாத், இசை - அருண்ராஜ், படத்தொகுப்பு - என்.பி.ஸ்ரீகாந்த், பாடலாசிரியர் - ஏக்நாத், மதன் கார்க்கி, ஒலிப்பதிவாளர் - டி.உதயகுமார், ஒலி வடிவமைப்பு - அழகியகூத்தன்.எஸ், ஒலிக்கலவை - கருண் பிரசாத், ரெஞ்ஜித் வேணுகோபால், கலை - ஏ.அமரன், சண்டை - அன்பறிவ், ஸ்டண்ட் சில்வா, எழுத்து, இயக்கம் - மகிழ் திருமேனி



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அருண் விஜய் பேசும்போது ’எனக்கு காதல் காட்சிகளில் நடிப்பது என்றாலே உதறல் எடுக்கும். இந்த படத்தில் ஒரு உதட்டு முத்த காட்சி இருக்கிறது.

    நான் பண்ணமாட்டேன் என்றேன். ஆனால் அவர் என் மனைவியிடம் பேசி என்னை சம்மதிக்க வைத்துவிட்டார். அதன் விளைவுகளை இன்றும் அனுபவிக்கிறேன்’ என்று கூறும்போது மகிழ் குறுக்கிட்டு ‘அருண் கதாநாயகி உதட்டை கடித்து இருக்கிறார் என்று சென்சாரிலேயே சொன்னார்கள்’ என்று கூற அருண் விஜய் வெட்கத்துடன் இல்லை என்று மறுத்தார். 

    படம் மார்ச் 1-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. #Thadam #ArunVijay #TanyaHope #VidyaPradeep #SmruthiVenkat

    தடம் டிரைலர்:

    ×