என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sonia Agarwal"
- ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக 'பிஹைண்ட் 'என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது.
- லியா என்கிற பாத்திரத்தில் சோனியா அகர்வால் சிறப்பாக நடித்துள்ளார்
ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக 'பிஹைண்ட் 'என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது.
இப்படத்தை அமன் ரஃபி எழுதி இயக்கி உள்ளார். ஷிஜா ஜினு படத்திற்கான கதையை எழுதி தனது பாவக்குட்டி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.
ஒரு தாய் தனது குழந்தைக்கு அமானுஷ்யமான ஆபத்து வந்து இருப்பதை உணர்கிறாள். ஆனால் அந்தத் தாயின் கணவன் அதை ஒரு மாயை என்று கூறி அலட்சியப்படுத்துகிறான்.
ஆனால் தாய் ஆபத்தினை உணர்ந்து காப்பாற்றுவதில் கவனமாக இருக்கிறாள்.ஒரு கட்டத்தில் கணவனும் அந்த அபாயம் உண்மைதான் என்று உணர்ந்து கொள்கிறான். அப்படிப்பட்ட சூழலில் தன் குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கப் பின் தொடரும் அந்தத் தீய சக்தியை எதிர்த்து தாய் தீவிரமாகப் போராடுகிறாள் . அவள் தனது குழந்தையை மீட்டாளா? அந்த ஆபத்து எத்தகையது? அது யாரால் ஏற்படுகிறது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வது தான் பிஹைண்ட் திரைப்படம்.
லியா என்கிற பாத்திரத்தில் சோனியா அகர்வால் சிறப்பாக நடித்துள்ளார்.இவர் தென்னிந்திய முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, சுதீப் ஆகியோருடன் நடித்துப் புகழ் பெற்றவர்.
அவரது மகளாக மினு மோல் நடித்துள்ளார். சோனியா அகர்வாலின் கணவராக டாம் நடித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகிறது.
அமன் ரஃபி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சந்தீப் சங்கரதாஸ் மற்றும் டி. ஷமீர் முகமத் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். வைசாக் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார். இசை முரளி அப்பாதத்,ஆரிப் அன்சார் மற்றும் சன்னி மாதவன்.
இந்தப் படத்தின் முன்னோட்டமாக டிரெய்லர் விரைவில் வெளியாக உள்ளது.
- 'புதுப்பேட்டை 2’ எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
- செல்வராகவன் "புதுப்பேட்டை 2 இந்த வருடம் தொடங்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புதுப்பேட்டை'. இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும், சோனியா அகர்வால், சினேகா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதையடுத்து சமீபத்தில் இந்த எதிர்பார்ப்புகளுக்கு தீணி போடும் வகையில் இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில், "புதுப்பேட்டை 2 இந்த வருடம் தொடங்கும் என்று நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார். இதற்கு கொக்கி குமார் மீண்டும் வரார் என ரசிகர்கள் மகிழ்ச்சியாக கமெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில் 'புதுப்பேட்டை 2' திரைப்படத்தில் நடிக்க நடிகை சோனியா அகர்வால் விருப்பம் தெரிவித்துள்ளார். அதாவது, சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சோனியா அகர்வால், "கண்டிப்பாக புதுப்பேட்டை-2 படத்தில் நடிக்க அழைத்தால் நடிப்பேன். நடிப்பு என்னுடைய தொழில். செல்வாக்கூட சேர்ந்து வேலை செய்வதில் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால், இதுவரை 'புதுப்பேட்டை 2' படத்தில் நடிக்கவேண்டும் என்று எந்த அழைப்பும் வரவில்லை. யார் யார் இதுல நடிக்க போகிறார்கள் என்றும் எனக்கு தெரியாது" என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்