என் மலர்
சினிமா செய்திகள்
யார் அந்த ஷ்ரத்தா? - Will படத்தின் டீசர் ரிலீஸ்
- இயக்குநர் சிவராமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் வில் {Will}.
- இந்தப் படத்தை கோத்தாரி மெட்ராஸ் இண்டர்நேஷனல் லிமிட்டெட் இணைந்து வழங்குகிறது.
ஃபூட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன் (Foot Steps Production) தயாரிப்பில், இயக்குநர் சிவராமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் வில் {Will}. இந்தப் படத்தில் சோனியா அகர்வால், விக்ராந்த் நடிக்க முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ளது.
படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரில் ஒரு உயிலை ஷரத்தா என்ற ஒருவருக்கு எழுதி வைத்துள்ளனர். அந்த ஷ்ரத்தாவை தேடும் காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளது.
இந்தப் படத்தை கோத்தாரி மெட்ராஸ் இண்டர்நேஷனல் லிமிட்டெட் இணைந்து வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Next Story







