என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    சந்தோஷ் பி.ஜெயக்குமார் - கவுதம் கார்த்திக் கூட்டணியில் உருவாக இருந்த தீமை தான் வெல்லும் படத்தை, வேறு ஒரு நாயகனை வைத்து இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #GauthamKarthik #SanthoshPJayakumar
    இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் - கவுதம் கார்த்திக் கூட்டணியில் உருவான ஹர ஹர மஹாதேவி, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

    இதையடுத்து இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. தீமை தான் வெல்லும் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே படம் படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.



    வேறு தயாரிப்பாளர் மூலம் படத்தை இயக்க சந்தோஷ் முடிவு செய்திருக்கிறாராம். கவுதம் கார்த்திக்கும் பிசியாகி இருப்பதால் அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம். கவுதம் கார்த்திக் தற்போது தேவராட்டம் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக செல்லப்பிள்ளை படத்தில் நடிக்கவிருக்கிறார். #GauthamKarthik #SanthoshPJayakumar #TheemaiThanVellum

    சர்க்கஸ் கலைஞர்களை பற்றிய கதையில், எளிமையான காதல் கலந்து மெஹந்தி சர்க்கஸ் படம் உருவாகி இருப்பதாக இயக்குநர் சரவண ராஜேந்திரன் கூறினார். #MehandiCircus
    ‘குக்கூ,’ ’ஜோக்கர்’ ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகன், ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்திற்கு கதை, வசனத்தை எழுதியிருக்கிறார். அவருடைய அண்ணன் சரவண ராஜேந்திரன் இந்த படத்தின் திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.

    இந்த நிலையில், ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தை பற்றி இயக்குநர் சரவண ராஜேந்திரன் பேசியதாவது, 



    “ ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தில், மாதம்பட்டி ரங்கராஜ் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். கதாநாயகி, ஸ்வேதா திரிபாதி. இவர், மும்பை அழகி. மாரிமுத்து, விக்னேஷ்காந்த், வேல.ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கிறார்.

    இது, சர்க்கஸ் கலைஞர்களை பற்றிய கதை. எளிமையான காதல் படம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், படத்தை உருவாக்கி இருக்கிறோம். படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “படம் நன்றாக இருக்கிறது” என்று பாராட்டினார். அதன் பிறகுதான் நான் உயிர்த்தெழுந்தேன்.” என்றார். #MehandiCircus

    தமிழ், தெலுங்கில் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், தனது அடுத்த ரிலீசான ‘ராட்சஷகுடு’ படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். #AnupamaParameshwaran #Rakshasudu
    ‘பிரேமம்’ மலையாள படத்தின் மூலம் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

    தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த படத்துக்குப்பிறகு தமிழில் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தெலுங்கில் அவர் நடித்த ‘தேஜ் ஐ லவ் யூ,’ ‘உன்னடி ஒகடே சிந்தகி,’ ‘ஹலோ குரு ப்ரேமா கோஸ்ரம்,’ ‘கிருஷ்ணார்ஜுன யுத்தம்’ ஆகிய படங்களும் வெற்றி பெறவில்லை. இதனால் புதிய தெலுங்கு பட வாய்ப்புகள் எதுவும் அவருக்கு வரவில்லை.



    தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் படவாய்ப்பு இல்லாத நிலையில், விரைவில் திரைக்கு வரயிருக்கும் ‘ராட்சஷகுடு’ என்ற தெலுங்கு படத்தை எதிர்பார்த்திருக்கிறார். அது, விஷ்ணு விஷால் நடித்த ‘ராட்சசன்’ படத்தின் ரீமேக் ஆகும். இந்த படம் நிச்சயமாக தனக்கு கைகொடுக்கும் என்று அவர் எதிர்பார்த்து காத்திருக்கிறார். #AnupamaParameshwaran #Rakshasudu

    சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி வரும் சூரரைப் போற்று படக்குழுவில் இருந்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. #SooraraiPottru
    `என்ஜிகே', காப்பான் படங்களை தொடர்ந்து சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சனிக்கிழமை துவங்கிய விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சூர்யா ஜேடியாக நடித்து வரும் அபர்ணா பாலமுரளி தனது முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அபர்ணா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சூரரைப் போற்று முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டேன், இந்த செட்டில் உள்ள அனைவருமே அன்பாக உள்ளார்கள். இரும்பு பெண் சுதா மேடம் போன்று யாருமில்லை. மற்றும் அந்த முக்கியமான நபர், அவரை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

    பிரபல தொழில் அதிபரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருகிறது. இதில் கோபிநாத்தின் மனைவி பார்க்கவியின் கதாபாத்திரத்தில் அபர்ணா நடித்து வருகிறார். பார்ப்பதற்கு பார்கவி போலவே இருப்பதால் அவரை இந்த படத்திற்கு தேர்வு செய்துள்ளார்கள்.


    சாதாரண மனிதர்களும் விமானப் போக்குவரத்தை பயன்படுத்தும் நோக்கில் பட்ஜெட் விமானச் சேவையை அறிமுகப்படுத்தியவர் ‘ஏர் டெக்கான்’ நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். சதிஷ் சூர்யா படத்தொகுப்பையும், ஜாக்கி கலை பணிகளையும் கவனிக்கின்றனர்.

    2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் சீக்யா என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. #SooraraiPottru #Suriya38
     #SudhaKongara #AparnaBalamurali

    என்ஜிகே படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #JayamRavi #Selvaraghavan
    செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை, மன்னவன் வந்தானடி உள்ளிட்ட படங்களின் வேலைகள் முடிந்தும் தயாரிப்பு தரப்பின் பிரச்சனையால் ரிலீசாகாமல் உள்ளது.

    இந்த நிலையில், செல்வராகவன் சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை இயக்கி முடித்துவிட்டார். படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன், சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், ஜெகபதி பாபு, மன்சூர் அலிகான், பொன்வண்ணன், வேல ராமமூர்த்தி குரு சோமசுந்தரம், அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.



    இந்த நிலையில், செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜெயம் ரவி தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கோமாளி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். #JayamRavi #Selvaraghavan

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனே, தன்னைப் பற்றி வதந்தி பரப்பியவர்கள் மீது கோபமடைந்திருக்கிறார். #DeepikaPadukone
    இந்தியில் ராம்லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவதி உள்ளிட்ட படங்களில் நடித்த ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் 6 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    சமீபத்தில் நடந்த விழா நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். அப்போது தீபிகா வயிறு பெரிதாக இருந்ததாகவும் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்றும் தகவல் பரவியது.

    வயிறு பெரிதாக இருக்கும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதை பார்த்த பலரும் தீபிகா படுகோனேவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இது தீபிகா படுகோனேவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு விளக்கம் அளித்து அவர் கூறும்போது, “நான் கர்ப்பமாக இருப்பதாக பரவி வரும் தகவலில் உண்மை இல்லை. திருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல. திருமணத்துக்கு பிறகு தாய்மை முக்கியமானது. குழந்தை பெற்றுக்கொள்வது என்பது நடக்கும்போது நடக்கும். இப்போது குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து சிந்திக்கவில்லை” என்றார்.



    தீபிகா படுகோனே தற்போது டெல்லியில் திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் படத்தில் லட்சுமி அகர்வாலாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு சபாக் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதில் திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட முகத்துடன் தீபிகா படுகோனேவின் முதல் தோற்றம் வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சித்தார்த் - ஜிவி.பிரகாஷ் இணைந்து நடிக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை பட போஸ்டரை இயக்குனர் ஷங்கர் வெளியிட இருக்கிறார். #SivappuManjalPachai
    ‘பிச்சைக்காரன்’ பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் குமார், லிஜோமோள் உள்ளிட்ட முன்னணி கதாபாத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுக்கு வந்தது. அக்காள்-தம்பி பாசத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக சித்தார்த்தும், பைக் ரேசராக ஜி.வி.பிரகாஷும் நடித்துள்ளனர். 



    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஷங்கர் 17-4-2019 (நாளை) வெளியிட இருக்கிறார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை இந்த படத்தை தயாரிக்கிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளராக சித்து குமார் அறிமுகம் ஆகிறார். #SivappuManjalPachai #Siddharth #GVPrakashKumar #Lijomol
    மூடர் கூடம் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகரும், இயக்குனருமான நவீன், சிந்து என்பவரை திடீர் என்று திருமணம் செய்துக் கொண்டுள்ளார். #Naveen
    ‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். இப்படம் அவருக்கு சிறந்த பெயரை பெற்றுத் தந்தது. தற்போது, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதில், நவீனுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

    இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் நவீன். ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார்.



    இந்நிலையில், இயக்குனர் நவீன் சிந்து என்ற பெண்ணை திடீர் பதிவு திருமணம் செய்துக் கொண்டுள்ளார். இதை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
    வாகை சூடவா படம் மூலம் பிரபலமான நடிகை இனியா, தமிழில் வலுவாக கால் பதிக்க புதிய படம் ஒன்று காரணமாக இருக்கும் என்று கூறியுள்ளார். #Iniya #Coffee
    வாகை சூடவா மூலம் தமிழில் அறிமுகமானவர் இனியா. அதைத் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான பொட்டு படத்தில் இனியாவின் வேடம் பலரால் பாராட்டப்பட்டது.

    தமிழைத் தவிர மலையாளம் கன்னடம் என்று மும்மொழிகளில் கலக்கிக் கொண்டிருக்கும் இனியாவை சந்தித்தோம்.

    தமிழில் ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்க சாய் கிருஷ்ணா இயக்கத்தில் காபி என்ற படத்தில் நடிக்கிறேன். அதிரடியான சத்யபாமா என்ற போலீஸ் அதிகாரி வேடம் ஏற்கிறேன். என் திறமையை நிரூபிக்க ஒரு படமாக இது இருக்கும். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். நானும் அடுத்த லெவலுக்கு போகக் கூடிய வலுவான படமாக இருக்கும். தமிழில் வலுவாக நான் கால் பதிக்க இந்த படம் காரணமாக இருக்கும். ஷூட்டிங் சென்னையிலும் பெங்களூரிலும் நடந்தது. 

    மலையாளத்தில் பிரபல இதக்குனர் ஷாஜி கைலாஷ் தயாரிப்பில் கிரண் என்ற இயக்குனர் இயக்கத்தில் பிருதிவிராஜின் அண்ணன் இந்திரஜித் நடிக்கும் "தாக்கோல்" என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். பேமிலி சப்ஜெக்ட். கோவா கேரளாவில் ஷூட்டிங் நடக்குது.



    இன்னொரு சந்தோஷம் என்னன்னா... கன்னடத்து சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமாரோட "துரோணா" என்ற படத்துல அவருக்கு ஜோடியா நடிச்சிட்டிருக்கேன். கல்வியை மையப்படுத்தி உருவாகிற சப்ஜெக்ட். எனக்கு ரொம்ப நல்ல பேரை கொடுக்கும். 

    தமிழில் தான் ஒரு சின்ன கேப் விழுந்திருச்சி. அது காபி படத்தின் மூலம் சரியாயிடும். மலையாளத்தில் நான் மம்முட்டி சாரோட நடிச்ச "பரோல்" என்ற படத்துக்காகவும் "பெண்களில்லா" என்ற படத்துக்காகவும் சிறந்த இரண்டாம் கதாநாயகி விருதை கேரள பிலிம் கிரிட்டிக்ஸ் வழங்கியது எனக்கு ரொம்பவும் பெருமையா இருக்கு.

    2018 எனக்கு ரொம்பவும் சிறப்பா இருந்தது... 2019 இன்னும் சிறப்பா இருக்கும்ன்னு நம்பறேன் என்றார் இனியா.
    அரசியலுக்கு வந்துப்பார் என்று சவால் விட்டவர்கள் இப்போது ‘ஏன்டா வந்த? என்று கேட்கின்றனர். 'என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்?' என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். #KamalHaasaan #MNM
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டதுடன் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலமாக பல்வேறு கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார்.

    அவ்வகையில், இன்று மாலை தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவினை அவர் வெளியிட்டுள்ளார்.

    ஆதிக்கவாதிகளும் வேண்டாம்- அடிமைகளும் வேண்டாம்! ஊழலற்ற ஆட்சி அமைய எங்களுக்கு வாக்களியுங்கள்! என்னும் அதிமுக விளம்பரத்தையும், மத்தியில் மீண்டும் மோடியின் ஆட்சி வர வேண்டும் என்ற பாஜக விளம்பரத்தையும் இந்த வீடியோவில் விமர்சிக்கும் கமல்ஹாசன் இவர்-அவர் என்று பாராமல் அரசியல் கட்சி தலைவர்களை சகட்டுமேனிக்கு விளாசித் தள்ளியுள்ளார்.

    மக்கள் பிரச்சனைக்காக நான் போராட்டம் நடத்தி கேள்வி கேட்டபோது, 'நீ யார்டா அதெல்லாம் கேட்பதற்கு, நீ ஒரு நடிகன், உனக்கு என்ன தெரியும்? களத்தில் இறங்கிப்பார்’ என்று சவால் விட்டார்கள். 

    சரி, சொல்றாங்களே.. இறங்கித்தான் பார்ப்போமே என்று நான் உசுரா நெனச்சிக்கிட்டிருந்த தொழிலை விட்டுட்டு இங்கே வந்தா, இப்போ ‘ஏன்டா வந்த? என்று கேட்கின்றனர்.

    ‘என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்?’ இதை நான் கேட்கிறேன் என கமல்ஹாசன் ஆவேசம் பொங்க கேள்வி எழுப்பியுள்ளார். #KamalHaasaan #Kamalquestions #KamalPoliticalEntry #MNM

    அவரது வீடியோ பதிவைக்காண..,



    நீயா 2 படத்தில் ஜெய்க்காக ராய் லட்சுமியும், கேத்தரின் தெரேசாவும் போட்டி போட்டு காதலித்திருக்கிறார்கள். #Neeya2 #jai #RaaiLaxmi #CatherineTresa
    சர்வாவும் மலரும் உயிருக்கு உயிராய் காதலிக்கிறார்கள். ஆடல் பாடலுமாக சுற்றித்திரியும் மலருக்கு தலையில் இடிவிழுந்ததுபோல் செய்தி அறிகிறாள். தனது காதலனுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்கும் செய்தி கேட்டு அதிர்ச்சியாயிருக்கிறாள். பழைய காதலை மறக்க முடியாமல் காதலன் சர்வாவை தேடி அலைகிறாள். அவன் இருக்கும் இடம் தேடி கண்டுபிடித்து அவன் ரூமிற்கு செல்கிறாள். 

    அவன் இல்லாத அந்த ரூமையே ஏக்கமாய் பார்த்து கொண்டு இருக்க, சர்வாவும், அவன் மனைவி திவ்யாவும் ரூமிற்குள் வர, மலர் ஒழிந்து கொள்கிறாள். இருவரும் படுக்கையில் கட்டி பிடித்து புரள... மலர் கோபமடைகிறாள். கோபமடைந்த மலர் அவர்களை என்ன செய்கிறாள் என்பதே அடுத்த காட்சியின் தொடர். இப்படி ஒரு காட்சியில், சர்வாவாக ஜெய், காதலி மலராக ராய்லட்சுமி, மனைவி திவ்யாவாக கேத்தரின் தெரேசா நடித்த காட்சி சாலக்குடியில் படமாக்கப்பட்டது. 



    இவர்கள் மூவருடன் தொடர்புடைய நான்காவது ஆளாக வரலட்சுமி நடித்திருக்கிறார். அதுவே படத்தின் சஸ்பென்ஸ் கதையாக அமைத்து இருக்கிறார்கள். விதி வலியது என்பது போல், காலகாலமாய் காத்திருந்த வரலட்சுமியின் காதல் ஜெய்த்ததா? அவனை எப்படியும் அடைந்தே தீருவேன் என்ற ராய்லட்சுமியின் காதல் ஜெய்த்ததா? இவர்களுடன் போராடும் கேத்தரின் தெரேசா ஜெயித்தாரா?  இதற்காக ஜெய் செய்த தியாகம் என்ன என்பதே நீயா 2. ராஜநாகம் ஒன்று முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது. இப்படம் மே 10ம் தேதி வெளியாக இருக்கிறது.
    நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். #Parthiban #Election2019
    நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ’பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

    இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கூறி இருப்பதாவது:-

    ‘மாம்பழமோ? மாபெரும் பழமோ? பழம் தின்று கொட்டை போட்ட அரசியல் வாதிகளுக்கு, தேர்தல் என்பது தேத்துதல் (பணம்). வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள். அதுகூட திமிங்கல வேட்டைக்கே. காசு வாங்காமல் ஓட்டு போடுவோம் மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு...



    ஓட்டைப் போடாதீர்கள் ஓட்டைப் போடாதீர்கள் வல்லரசாகப் போகும் இந்தியாவின் கூகுள் வரை படத்தில் ஓட்டைப் போடாதீர்கள் தேர்தல் வந்துடுச்சி துட்டுக்கு ஓட்டைப்போட்டு நம் பிள்ளைகளின் ஆரோக்கிய வாழ்வில் (ஸ்கேன் ரிப்போர்ட்டில்) ஓட்டைப் போடாதீர்கள்’

    இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
    ×