என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சசி"

    • ‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்துள்ளார்.
    • இப்படம் அடுத்தாண்டு மே மாதம் 1-ந்தேதி வெளியாக உள்ளது.

    தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனிக்கு கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம் 'பிச்சைக்காரன்'. இயக்குநர் சசி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது.

    'பிச்சைக்காரன்' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் இயக்குநர் சசியுடன் மீண்டும் இணையவில்லை. இவர்களின் கூட்டணி மீண்டும் இணையுமா? என எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

    இந்த நிலையில், இயக்குநர் சசியுடன் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ளார். இருவரும் இணைந்துள்ள இப்படத்திற்கு 'நூறு சாமி' என தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் ஆண்டனி நிறுவனம் தயாரிப்பில் இப்படம் அடுத்தாண்டு மே மாதம் 1-ந்தேதி வெளியாக உள்ளது.

    படத்தின் தலைப்பிற்கு ஏற்ப கதைகளும் வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். 

    • கடந்த 2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியானது பிச்சைக்காரன் திரைப்படம்.
    • விஜய் ஆண்டனி தற்பொழுது மார்கன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    கடந்த 2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியானது பிச்சைக்காரன் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக உருமாறியது.

    இந்நிலையில் விஜய் ஆண்டனி தற்பொழுது மார்கன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. அதில் இயக்குநர் சசி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அப்பொழுது விஜய் ஆண்டனியுடன் தன் அடுத்த திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

    அக்கதை இரண்டு ஹீரோ கதை எனவும், விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷன் நடிக்க இருப்பதாக கூறினார். இந்த வெற்றி கூட்டணி பல வருடங்களுக்கு பிறகு ஒன்று சேர்ந்துள்ளதால் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

    திரையுலகில் 25 வருடங்களை கடந்த இயக்குநர் ஷங்கரை கவுரவிக்கும் விதமாக பிரபல இயக்குநர்கள் பலரும் ஒன்றிணைந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். #Shankar25 #Mysskin
    தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். தனது படங்கள் மூலமாக தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லும் இவரது படங்கள் வணிக ரீதியிலும் பெரிதாக பேசப்படும்.

    இயக்குநர் ஷங்கர் சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவரை பெருமைப்படுத்தும் விதமாக ஷங்கர் 25 என்ற நிகழ்ச்சியை ஷங்கரிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்கள் மற்றும் இருப்பவர்கள் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டாடினர்.



    இந்த நிலையில், ஷங்கருடன் நட்புடன் இருக்கும் இயக்குநர்கள் பலரும் இணைந்து ஷங்கரை பாராட்டி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். இயக்குநர் மிஷ்கின் அவரது அலுவலகத்தில் ஒருங்கிணைத்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மணிரத்னம், லிங்குசாமி, பாண்டிராஜ், மோகன் ராஜா, கவுதம் மேனன், எழில், சசி, பா.ரஞ்சித், வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், அட்லி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஷங்கரை கவுரவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு கேக் ஒன்றும் வெட்டப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர் தவிர மற்ற அனைவரும் எஸ் 25 என்று எழுதப்பட்டிருந்த நீல நிற டீசர்ட் அணிந்து பங்கேற்றிருந்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Shankar #Shankar25 #Mysskin

    சித்தார்த் - ஜிவி.பிரகாஷ் இணைந்து நடிக்கும் சிவப்பு மஞ்சள் பச்சை பட போஸ்டரை இயக்குனர் ஷங்கர் வெளியிட இருக்கிறார். #SivappuManjalPachai
    ‘பிச்சைக்காரன்’ பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் குமார், லிஜோமோள் உள்ளிட்ட முன்னணி கதாபாத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுக்கு வந்தது. அக்காள்-தம்பி பாசத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக சித்தார்த்தும், பைக் ரேசராக ஜி.வி.பிரகாஷும் நடித்துள்ளனர். 



    இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஷங்கர் 17-4-2019 (நாளை) வெளியிட இருக்கிறார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை இந்த படத்தை தயாரிக்கிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளராக சித்து குமார் அறிமுகம் ஆகிறார். #SivappuManjalPachai #Siddharth #GVPrakashKumar #Lijomol
    சசி இயக்கத்தில் சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அக்காள்-தம்பி பாசத்தை மையமாக வைத்து உருவாகி வரும் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. #SivappuManjalPachai
    ‘பிச்சைக்காரன்’ பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் குமார், லிஜோமோள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    கடந்த ஜனவரி மாதம் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக நடிகர் ஜி.வி.பிரகாஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குநர் சசி மற்றும் நடிகர் சித்தார்த்துடன் பயணித்தது இனிமையானது. அருமையான கதை. என்று குறிப்பிட்டுள்ளார்.


    அக்காள்-தம்பி பாசத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக சித்தார்த்தும், பைக் ரேசராக ஜி.வி.பிரகாஷும் நடித்துள்ளனர். ஒரு முக்கிய வேடத்தில் காஷ்மீரா அறிமுகமாக, இன்னொரு முக்கிய வேடத்தில் மதுசூதனன் நடிக்கிறார்.

    அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை இந்த படத்தை தயாரிக்கிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளராக சித்து குமார் அறிமுகம் ஆகிறார். படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். #SivappuManjalPachai #Siddharth #GVPrakashKumar #Lijomol

    தமிழ் சினிமாவில் பிசியான நாயகர்களாக வலம் வரும் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இருவரும் சசி இயக்கத்தில் மாமன், மச்சானாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Siddharth #GVPrakash
    சசி இயக்கத்தில் கடைசியாக வெளியான `பிச்சைக்காரன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், சசி அடுத்ததாக சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். குடும்ப பின்னணியில் அன்பு, கோபம், நகைச்சுவை என அனைத்தும் கலந்த கலவையாக இந்த படம் உருவாக இருக்கிறது.

    இந்த படத்துக்கு ரெட்டைக்கொம்பு என்று பெயரிடப்பட்டிருப்பதாக செய்தி வருகிறது. குடும்பக்கதையாக உருவாகும் இதில் இருவரும் மாமன் மச்சானாக நடிக்கிறார்கள். சித்தார்த் டிராபிக் போலீசாகவும், ஜிவி.பிரகாஷ் பைக் ரேஸ் வீரராகவும் நடிக்கிறார்கள். முதலில் இந்த படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இப்போது வேறு ஒருவர் தயாரிக்க இருக்கிறார்.



    சமீபத்தில் இந்த படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனர். #Siddharth #GVPrakash

    ×